Friday 30 September 2016

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இரட்சிக்கப்படாத நமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நாம் எப்படி சுவிசேஷத்தை சொல்வது ? அதற்கான வழிமுறைகள் என்ன ?

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இரட்சிக்கப்படாத நமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு  நாம் எப்படி சுவிசேஷத்தை சொல்வது ?
அதற்கான வழிமுறைகள் என்ன ?

டேனியல்: ஒரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவனுக்கு,கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள் உடன் பணிபுரிகிறார்கள் அல்லது தெரிந்தவர்கள் நிச்சயம் இருப்பாங்க....

பால்ராஜ்: நமக்கு தெரியாதவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பது நமக்கு எளிதாக உள்ளது ஆனா நமக்கு தெரிந்தவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பது சிறிது கஷ்டமான காரியமாக அதுவும் உறவினருக்கு
நாம் சுவிசேஷத்தை அறிவிப்பது இன்னும் கொஞ்சம் கடினமான காரியமா இருக்கு... சிலர் சுவிசேஷத்தின் நிமித்தம் இடறல் அடைவார்கள் என்று வேதம் சொல்லுகிறது (லூக்கா 12:51–53). ஆனாலும், சுவிசேஷத்தை அறிவிக்க நமக்கு கட்டளை இடப்பட்டிருக்கிறது, மற்றும் சாக்கு போக்கு சொல்ல நமக்கு இடமில்லை (மத்தேயு 28:19–20; அப்போஸ்தலர் 1:8; 1 பேதுரு 3:15).

டேனியல்: ஆமா ! பால்ராஜ் ! கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத,
நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடன் பணிபுரிகிறார்கள் ஆகியவர்களுக்கு நாம் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு முன் நாம் அவர்களுக்காக ஜெபிப்பதே நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம் ஆகும்.

பால்ராஜ்: சரியாக சொன்ன நண்பா!
தேவன் அவர்கள் இருதயங்களை மாற்றவும் அவர்கள் கண்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கு திறக்கப்படுவும் முதலில் நாம்
ஜெபிக்க வேண்டும்.....
(2 கொரிந்தியர் 4:4). தேவனின் அன்பை அவர்கள் அறிந்து கொள்ளவும் இயேசு கிறிஸ்து மூலமாக அவர்கள் இரட்சிப்படையவும் வேண்டும் என்று அவர்களுக்கு தேவன் உணர்த்தும்படி ஜெபிக்க வேண்டும் (யோவான் 3:16).

டேனியல்: அதுமட்டுமல்ல நாம்
அவர்கள் மத்தியில் ஞானத்தோடு செயல்பட வேண்டும்,சுவிசேஷம் சொல்ல நாம் வாஞ்சை உள்ளவர்களாக மற்றும் தைரியமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.....

பால்ராஜ்: “ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே(கேட்கிறதுனாலே)
வரும்,கேள்வி (கேட்கிறது)
தேவனுடைய வசனத்தினாலே வரும்”
(ரோமர் 10:17).#faith comes by #hearing
தேவனுடைய வசனங்களை எவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்களோ,
அவர்களுக்கு விசுவாசம் வந்துவிடும்,
அவர்களும் நம்மைபோல் விசுவாசிகளாக மாறிவிடுவார்கள்...
எனவே நமது #வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தைகளும் #தேவனுடைய வசனத்தின் #பிரதிபலிப்பாக இருக்க வேண்டும்

டேனியல்: ஆமா,இயேசு கிறிஸ்துவின் மூலமாகத்தான் இரட்சிப்பு கிடைக்கிறது  எனவே அதற்கு வேதம் போதிக்கும் முறையை நாம் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்
(ரோமர் 10:9–10).

பால்ராஜ்: அதோடு கூட நமது கிறிஸ்தவ விசுவாசத்தை அவர்களிடம் தன்மையாகவும்,மரியாதையோடும் பேச நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.....(1 பேதுரு 3:15).

டேனியல்: அவர்களுக்காக ஜெபிப்பதும் மற்றும் சுவிசேஷம் அறிவிப்பதோடு மட்டுமல்ல நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்பதாக நாம் தேவ அன்போடு,சமாதானத்தோடு,
நீதியோடு,நேர்மையோடு,
பரிசுத்தோடு நடப்பதும் மிக முக்கியம், ஏனென்றால், தேவன் நமது வாழ்கையில் செய்த மாற்றங்களை அவர்கள் பார்ப்பார்கள்.....

பால்ராஜ்: ஆம் அவைகள் மிகவும், முக்கியம்,நமது வாயில் வசனத்தை பேசுவது மட்டுமல்ல,நமது செயல்பாடுகளும் வசனத்தின் பிரதியாக கட்டாயம் இருந்தே ஆக வேண்டும்... முடிவாக,நாம் நேசிப்பவர்களின் இரட்சிப்பை தேவனின் கரத்தில் நாம் அர்ப்பணிப்போம், நமது பிரயாசங்களோ நமது முயற்சிகளோ அல்ல, தேவனின் அன்பு, வல்லமை மற்றும் கிருபை மட்டுமே ஜனங்களை இரட்சிக்கும்,நாம் அவர்களுக்காக செய்யும் சிறந்த காரியமாய் இருப்பது என்னவென்றால் அவர்களின் இரட்சிப்புக்காக ஜெபிப்பது,
திருவசனத்தை சரியாக போதிப்பது, சாட்சியாய் வாழ்வது மட்டும்தான்....
மற்றவைகளை தேவ ஆவியானவர் பார்த்துக்கொள்வார்.... விரைவில் அவர்களும் நம்மை போல் இரட்சிப்பை அடைவார்கள்...... என்பது நிச்சயம்...

ஆமென்... அல்லேலூயா....

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

No comments:

Post a Comment