Friday 28 October 2016

அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.

#ஜீவ வழியின் நற்செய்தி

ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.
எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.
அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.

(ரோமர் 13:8-10 )

ஜான்: தேவன் அன்பாக இருக்கிறார்.
நாம் உண்மையிலே இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று சொன்னால் அந்த தேவ  அன்பின் சாயல் நம்மிலும் இருக்க
வேண்டும்

டேனியல்: அப்போஸ்தலனாகிய
பவுலும் அன்பைக் குறித்துதான் இங்கே பேசுகிறார் "ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்"

ஜான்: இந்த இடத்தை நாம் சற்று நிதானித்து  கவனிக்க வேண்டும். நமக்கு அநேக கடன்கள் இருக்கிறது, அவை எல்லாவற்றையும் தவறாமல் செலுத்துகிறோம்.ஆனால் அன்பு செலுத்துகிற கடனோ முடிவுக்கு வருவதே கிடையாது. அது நாம் நித்தியத்திற்கும் செலுத்த வேண்டிய தீராத கடனாய் இருக்கிறது. பவுல், அன்பு என்கிற ஒரு கடனை மட்டும் வைத்திருங்கள், மற்ற கடன்களையெல்லாம் செலுத்தி விடுங்கள் என்கிறார்.

டேனியல்: இப்படி அருமையான விதத்தில் சொல்லிவிட்டு,
#பத்து கற்பனைகளிலுள்ள சில கற்பனைகளை பட்டியலிட்டு, இவையெல்லாம் நீ உன்னில் அன்புகூருவதுபோல பிறனிலும் அன்புகூருவாயாக என்கிற
#ஒரு வார்த்தையிலே #தொகையாய் அடங்கியிருக்கிறது என்கிறார்.

ஜான்: "உன்னில் அன்புகூருவதுபோல பிறனிலும் அன்புகூருவாயாக"
என்ற கற்பனை பழைய ஏற்பாட்டிலேயே சொல்லப்பட்டுள்ளது
(லேவியராகமம் 19:18).
ஆக,பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை
ஒரே வரியில் சுருக்கமாகச் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது,
உன்னில் அன்புகூருவதுபோல பிறனிலும் அன்புகூருவாயாக என்பது அதுதான்.அதைச் சொன்னாலே பழைய ஏற்பாட்டு கற்பனைகள் அதில் வந்து விட்டதென்று அர்த்தமாகி விட்டது......

டேனியல்: ஆமா!!
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். (கலாத்தியர் 5:14)

இயேசுவும் அதையே பயன்படுத்துகிறார்.ஒருமுறை ஐசுவரியவான் வாலிபனும், மற்றொரு முறை வேதபாரகரில் ஒருவனும் அவரிடம் வந்து, கற்பனைகளிலே பிரதான கற்பனை எதுவென்று கேட்டதற்கு,

“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில்
உன் முழு இருதயத்தோடும்,உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும்,உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை என்று சொல்லிவிட்டு,
இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே” (மத்தேயு 22:37-39) என்று சொல்லுகிறார்.
அப்போஸ்தலனாகிய பவுலும்
இதையே ரோமர் 13 ஆம் அதிகாரத்திலும், கலாத்தியர் 4 ஆம் அதிகாரத்திலும் சொல்லுகிறார். அதுமட்டுமல்லாமல், யாக்கோபும் இதைச் சொல்லிவிட்டு, இந்த பிரமாணத்திற்கு ‘ராஜரீக பிரமாணம்’ என்று பெயரிடுகிறார்.

ஜான்: இந்த இடத்தில் தான்
அனேகருக்கு குழப்பம்
வருகிறது "நீ உன்னில் அன்புகூருவதுபோல பிறனிலும் அன்புகூருவாயாக என்கிற
#ஒரு வார்த்தையிலே
#தொகையாய் தேவனுடைய கற்பனைகள் எல்லாம் அடங்கியிருக்கிறது
என்றால்... நாம் தேவனை
அன்புகூர கூடாதா என்பார்கள் ?
ஆனால் உண்மை என்னவென்றால்
தேவனிடத்தில் அன்புகூராமல்,
தன்னை போல்  பிறரை
நம்மால் நேசிக்கவே முடியாது....
தேவ அன்பு நமக்குள் இருந்தால்
தான் நாம் பிறரை அவ்வாறு
நேசிக்க முடியும்...இது இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக,
இரட்சகராக ஏற்றுக்கொண்ட
தேவ பிள்ளைகளின் தனி சுபாவம்...

டேனியல்: சரியாக சொன்ன
நண்பா!! அநேகர் இந்த
பிரமாணத்தை தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.அவர்கள்,
நான் என்னில் அன்புகூருவதுபோல பிறனிலும் அன்புகூர வேண்டும்
என்பது மிகவும் எளிதானது,நான் அதைச் செய்து விடுவேன் என்கிறார்கள்.ஆனால் அப்படிச் செய்ய முடியாது என்பதுதான் வேத வசனத்தின் சத்தியம். ஏனென்றால், பாவம் மனுஷனை சுயநலவாதியாக மாற்றிவிட்டது. ஆகவே அவன் தன்னை அன்புகூருவதுபோல பிறனையும் அன்புகூர முடியாது.அப்படிச் செய்ய வேண்டுமென்றால் இயேசுவோடு  அவனுக்கு தொடர்பு உண்டாக வேண்டும்... வேறு எந்த வழியும் கிடையாது...

ஜான்: ஆமா நண்பா,பிறரை
அன்புகூர முடியாத நிலையில் சுயநலவாதிகளாயிருந்த நம்மை தேவன் பாவத்திலிருந்து மீட்டு,மற்றவர்களை  அன்புகூரக்கூடியவர்களாக மாற்றுகிறார்... தேவரக அன்பை
நமது இருதயத்திலே ஊற்றியிருக்கிறார்..அது
இயேசுவாலே ஆயிற்று,
அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.

ஆமென்.. அல்லேலூயா....

=======================
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome


No comments:

Post a Comment