Wednesday 19 October 2016

கிறிஸ்தவர்கள் ‎‎שַׁבָּת (Shabbat) சாபத் நாளை அனுசரிக்க வேண்டுமா? அந்த நாளில் தான் சபையாக கூட வேண்டுமா ? ஆதி திருச்சபை விசுவாசிகள் வாரத்தின் முதல் நாள் சபையாக கூடினார்கள் என்று வேதத்தில் இருக்கிறதே ! கிறிஸ்தவர்கள் கர்த்தருக்கென்று வாரத்தில் ஒருநாளை மட்டும் அர்பணிக்க வேண்டுமா ? இல்லை தன் வாழ்நாளையே கர்த்தருக்கென்று அர்பணமாக்க வேண்டுமா ?

கிறிஸ்தவர்கள் ‎‎שַׁבָּת (Shabbat) சாபத் நாளை அனுசரிக்க வேண்டுமா?
அந்த நாளில் தான் சபையாக கூட வேண்டுமா ? ஆதி திருச்சபை விசுவாசிகள் வாரத்தின் முதல் நாள் சபையாக கூடினார்கள் என்று வேதத்தில் இருக்கிறதே ! கிறிஸ்தவர்கள் கர்த்தருக்கென்று  வாரத்தில் ஒருநாளை மட்டும் அர்பணிக்க வேண்டுமா ? இல்லை
தன் வாழ்நாளையே கர்த்தருக்கென்று அர்பணமாக்க வேண்டுமா ?

இதுபற்றி கொஞ்சம் விரிவாக பேசுவோம்.......

ஜான்: ‘‘தேவன் ஏதேனில் Shabbat ஏற்படுத்தினார்’’ என்றும்,யாத்திராகமம் 20-:11-இல் படி ஓய்வு நாள் மற்றும் சிருஷ்டிப்புக்கு இருக்கும் தொடர்பை வைத்து சிலர் கூறுகிறார்களே?
இவைகள் சரியா நண்பா ???

பீட்டர்: நானும் கேட்டுருக்கிறேன் ஆனா
தேவன் ஏழாவது நாள் ஓய்ந்திருந்தார்  (ஆதியாகமம் 2:3) ஓய்வு நாள் அனுசரிப்புக்கு நிழலாட்டமாய் இருந்தாலும், இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வெளியேறின
வரைக்கும் Shabbat ஓய்வு நாளை  குறித்து வேதாகமத்தில் எழுதப்படவில்லை.

சவரிமுத்து: ஆமா நண்பா!!!
ஆதாம் முதல் மோசே
வரை  Shabbat ஓய்வு நாள்
அனுசரித்தற்கான ஒரு சிறிய ஆதாரம் கூட வேதவாக்கியங்களில் இல்லை.

ஜான்: சரிதான் சவரி,
தேவனுடைய வார்த்தையில்..... தேவனுக்கும் #இஸ்ரவேலுக்கும் இடையே ஒரு விசேஷித்த அடையாளமாக ஓய்வு
நாள்  அனுசரித்தல் இருந்தது
என்று தெளிவாகக் கூறுகின்றது .

‘‘ஆகையால்,இஸ்ரவேல்
புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக அனுசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவார்கள். அது என்றைக்கும்,எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும். ஆறுநாட்களுக்குள்ளே கர்த்தர் வானத்தையும், பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார். என்றார் (யாத்திராமம் 31:16,17) என்கிறாரே !!!!!

சவரிமுத்து: ஆமா ஆனால்......
உபவாகமம் 5-ல் மோசே பத்து கட்டளைகளை இஸ்ரவேலரின் அடுத்த தலைமுறைக்கு மறுபடியும் கூறுகிறார். இங்கு, சாபத் அனுசரித்தல் குறித்து 12-14 வசனம் வரைக் கூறி, பின்பு சாபத் இஸ்ரவேலின் தேசத்துக்கு கொடுக்கப்பட்ட காரணத்தையும்  கூறுகிறார்.......

‘‘ நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும்,
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக, ஆகையால் ஓய்வு நாளை அனுசரிக்க உன்
தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்’’ (உபாகமம் 5:15).

பீட்டர்: இஸ்ரவேல் மக்களுக்கு
ஓய்வுநாள் ஆசாரிப்பை தேவன் கொடுத்ததன் நோக்கம் அவர்கள் சிருஷ்டிப்பை நினைவுகூற அல்ல, எகிப்தின் அடிமைத்தனத்தையும் தேவன் அவர்களை  விடுதலையாக்கியதை  நினைவுக்கூறவே சாபத் அனுசரிப்பதற்கான முறைகள் ஏற்படுத்தப்பட்டது......

சவரிமுத்து: ஆமா,சாபத் ஓய்வுநாள் கட்டளையின் கீழிருக்கிற மனிதன்,
அந்த நாளில்....

1)தன் வீட்டைவிட்டு கிளம்பக்கூடாது. (யாத்திராகமம் 16:29)

2)நெருப்பு மூட்டக்கூடாது (யாத்திராகமம் 35:3)

3)வேறு யாரையும் வேலை செய்யவும் சொல்லக்கூடாது (உபாகமம் 5:14)

 4)இந்த சாபத் கட்டளையை
மீறுகிறவன் கொலை செய்யப்பட்டான் (யாத்திராகமம்31:15,
எண்ணாகமம் 15:32-35)

இன்று சாபத் ஓய்வு நாளை குறித்து உபதேசிக்கும் உபதேசிகள் இவைகளை கடைபிடிப்பார்களா ?

பீட்டர்: ஏழாம் நாள் ஓய்வுக்கார கூட்டத்தினர்கள்,கண்டிப்பாக இவைகளை கடைபிடிக்க மாட்டார்கள்
அவர்கள் ஓய்வு நாளை
சரியாக ஆசரிக்கிறார்கள் என்றால் ஓய்வுநாளில் நெருப்புகூட மூட்டக்கூடாது என்ற கட்டளையை பின்பற்றுகிறார்களா? ஒரு அடுப்பாயிருந்தாலும், ஒரு காரை ஸ்டார்ட் (car start) பண்ணுவதாக இருந்தாலும், ஒரு மின் சாதன பொருளை (electricity switch on/off) இயக்கினாலும் நெருப்பு வரும். இவர்கள் இவைகளை செய்வதால் ஓய்வுநாள் ஆசரிப்பை மீறுகிறார்களே !!!!

சவரிமுத்து: எப்பொழுது இயேசு ஓய்வுநாளிலே வியாதியஸ்தரை சுகமாக்கி, உங்களில் எவனாகிலும் ஆடாவது, மாடாவது, கழுதையாவது குழியில் விழுந்தால் தூக்கிவிடாமல் இருப்பானோ? (லூக்கா14:16-)
ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயந்தான் என்று சொன்னாரோ அதிலிருந்தே நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.
ஒரு காரியத்தை செய் என்றும் இனி செய்யதேவையில்லை என்றும்
சொல்வதற்கு தேவனுக்கு ஞானம் உண்டு, அந்த தேவ ஞானத்தை புரித்துகொள்ளும் அளவுக்கு ஓய்வு நாள் காரர்களுக்கு வெளிப்பாடு இல்லை....

பீட்டர்: ஆமா நண்பா!!!  ஐந்து
நாள் தேவன் எல்லாவற்றையும் உண்டாக்கியபின் ஆறாம் நாளும்
ஏழாம் நாளும் உள்ளதே என்ன செய்யலாம்....ஒரே குழப்பாயிருக்கே....சரி... ஏழாம் நாளுக்காக மனுஷனை ஆறாம் நாளில் உண்டாக்கி அவனை ஏழாம் நாள் ஓய்ந்திருக்கும்படி செய்வோம் என்றா செய்தார்? இல்லவே இல்லை
மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது.

430 ஆண்டுகள் இஸ்ரவேலர்கள் எகிப்திலே இருந்தார்கள்.அங்கே
ஓய்வு இன்றி அடிமையாய் வேலை செய்து வந்தார்கள்,மனுஷன் ஓய்ந்திருக்கவேண்டும் அப்படி ஓய்ந்திராமல் வேலை செய்துகொண்டே இருந்தால்,அவன் சீக்கிரத்திலே செத்துபோவன். அவனுக்கு இளைப்பாறுதல் தேவை. அது #மனுஷனுடைய நலனுக்காகத்தான், தேவனுடைய நலனுக்கு அல்ல.

ஓய்வுநாளை மனுஷன் பரிசுத்தமாய் ஆசரிக்கவேண்டும் என்னும் கட்டளையை தேவன் சீனாய் மலையில்தான் கொடுத்தார்.
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்கள் ஓய்வு நாளைக் கைகொள்ளவில்லையே!
ஆனாலும் அவர்கள் பரலோகத்திலே இருக்கிறார்கள். ஓய்வுநாளை கைக்கொள்ளாத
ஏனோக்கை தேவன் உயிரோடே எடுத்துக்கொண்டாரே!
நான் ஆபிரகாமின் தேவனும்
ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவன் அநேக இடங்களில் கூறுகிறார்......

"ஓய்வுநாள் மனுஷனுக்காகவா" அல்லது "மனுஷன் ஓய்வுநாளுக்காகவா"? இதை ஓய்வுநாள் போதகர்கள்
கொஞ்சம் யோசிச்சி பார்க்க வேண்டும்....

சவரிமுத்து: (அப்போஸ்தலர் 15:8-20)..ல்
பேதுரு சொல்கிறார்:
"பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்? இயேசுகிறிஸ்துவின் கிருபையிலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே ... விக்கிரகங்களுக்குப்
படைத்தவைகளுக்கும்,
இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டும் என்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும்." என்று கூறி முடிக்கிறார்........

ஜான்: ஆனா ! அப்போஸ்தலர் நடபடிகளில் பவுல் ஓய்வு நாள்தோறும் யூதர்களோடும்,கிரேக்கர்களோடும்
வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,
அவர்களுக்கு புத்தி சொன்னான்
என்று.... பார்க்கிறோமோ !

சவரிமுத்து: ஆமா தேவ பக்தியுள்ளவர்கள் கூடம் இடம், பொழுதுபோக்கு ஸ்தலமோ,
கோலிக்கை கூடமோ அல்ல,
அது தேவாலயம் அதுவும்
யூதர்களின் ஓய்வு நாளில்(விடுமுறை)
அதிகமாக பக்தியுள்ளவர்கள் கூடுவார்கள்... பவுல் அங்கே
அந்த பக்திமான்களோடு பங்கு கொண்டு,ஓய்வுநாளை அனுசரிக்க வரவில்லை... அவர்களுக்கு புத்தி சொல்லி சுவிசேஷத்தை பிரசங்கிங்க வந்தார்.... பவுல் ‘‘ யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும் ஆனேன்’’ என்று எழுதியிருக்கிறார்.
(1 கொரிந்தியர்9:20) பவுல் ஜெப ஆலயத்திற்கு வந்தது அவர்களுக்கு
யூத பக்தி விருத்தியை உண்டு
பண்ண அல்ல, அவர்களுக்கு வேதவாக்கியங்களில் கிறிஸ்துவை பற்றிய சத்தியங்களை உணர்த்த....
பவுல் வந்தது ஓய்வுநாளை அனுசரிக்க... அல்ல அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தை அறிவிக்க.....

பீட்டர்: ஆமா யூதருடைய கட்டளைகள் என்பதை கிறிஸ்து சிலுவையிலேயே அழித்தார். ‘‘நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து’’ (கொலேசியா 2:14).
அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது அவைகளின் #பொருள் #கிறிஸ்துவைப் பற்றினது..... (கொலேசியர் 2:14-17)...

ஜான்: ஓ.... !!!

சவரிமுத்து: அதுமட்டுமல்ல ஜான்....
(ரோமர் 14:5)ல்.... இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.....

"அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே
முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்"

ஏழாம் ஓய்வுக்காரர்கள் ஒரு நாளை மட்டும் விசேஷமாக எண்ணுகிறார்கள். புதிய உடன்படிக்கையின் விசுவாசியாகிய நம்மை பொறுத்தமட்டில்  ஒவ்வொரு நாளும் விசேஷமான நாள்தான். சமயம் வாய்தாலும் வாய்க்காவிட்டாலும் நாம்
சுவிசேஷத்தை போதிக்க வேண்டும்.
நாம் எல்லா நாளுமே பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டும்...

ஜான்: அருமையான விளக்கங்கள் நண்பா... ஓய்வுநாள் பற்றிய என்னுடைய சந்தேகங்கள்... நிவர்த்தியாகிவிட்டது..... ஆனா
கிறிஸ்து உயிர்தெழுந்தவராய் வெளிப்பட்டார் என்று குறிப்பிடப்பட்ட நாளெல்லாம் வாரத்தின் #முதல் நாளாக இருக்கிறது. மத்தேயு 28:1,9,10, மாற்கு16:9, லூக்கா24:1,1,13,15, யோவான்20:19,26) அதுமட்டுமல்ல

வாரத்தின் #முதல்நாளிலே,
அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில்,
பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
(அப்போஸ்தலர் 20:7)......
ஆதித்திருச்சபை வாரத்தின் முதல்நாளென்று கூடியிருந்தனர்
என்று தெளிவாக வேதவாக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

சவரிமுத்து: ஆமா ஜான்....

ஜான்: அதோடுகூட.....
I கொரிந்தியர்16:2 – அல் பவுல் கொரிந்து சபையின் விசுவாசிகளிடம் ‘‘ நான் உங்களில் அவனவன் வாரத்தின் #முதல்நாள் தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக’’ என்று துரிதப்படுத்துகிறார்.
வேதத்தின்படி பார்த்தால் சனிக்கிழமை அல்ல ஞாயிற்றுக்கிழமைதான் கிறிஸ்தவர்கள் சபையில் கூடுகிற நாளாக இருந்தது. இது முதலாம் நூற்றாண்டிலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டுள்ளது......
எனவே வாரத்தின் முதல் நாளை நாம் ஏன் சாபத் நாளாக அனுசரிக்க கூடாது இதுதான் என்னுடைய அடுத்த கேள்வி ?

பீட்டர்: இந்த விசயத்தில் எனக்கும் சரியான புரிதல் இல்லை,நண்பா
 சவரி முத்து இதுபற்றி எங்களுக்கு தெளிவூட்ட முடியுமா ?

சவரிமுத்து: ஓ.... நிச்சயமாக
சாபத் என்பது கிறிஸ்தவ சபைக்கு அல்ல, இஸ்ரேலுக்காக கொடுக்கப்பட்ட
ஒன்று.சாபத் என்பது இன்றும் சனிக்கிழமைகளில்தான் யூதர்களால்  அனுசரிக்கப்படுகின்றது.....

ஒரு புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் சாபத்  அனுசரிக்க வேண்டும் என்ற கட்டளை  கிடையாது. ஞாயிற்றுக்கிழமைகளில் ‘‘ "கிறிஸ்தவ சாபத்’’ என்று கி.பி. 321-இல் ரோம அரசன் கான்ஸ்டான்டைன் ஆணை பிறப்பித்தார் இது வேதத்தின் படி தவறு.... ஏனென்றால் சாபத்
என்பது பழைய ஏற்பாட்டிற்கான கட்டளையாகவுள்ளது. கிறிஸ்தவர்கள் இந்த பிரமாணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டுவிட்டார்கள். (கலாத்தியர் 4:1-26, ரோமர் 6:14). #கிறிஸ்தவர்கள் சனிக்கிழமையோ அல்லது ஞாயிற்றுக்கிழமையோ
சாபத் என்று அனுசரிக்க வேண்டிய அவசியம் இல்லை.........

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிகிற
நமக்கு எல்லா நாளுமே பரிசுத்த நாள்தான்,நாம் எப்போதுமே பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டும்,அப்பரம் சபை கூடி ஆராதிப்பதில் மண்டையை போட்டு குழப்பி கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இல்லை, அரேபிய நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக உள்ளது.. அங்கே வெள்ளிக்கிழமைதான் சபை ஆராதனைகள் எல்லாம் நடைபெறுகிறது.... நமக்கு வாரத்தின் முதல் நாள் விடுமுறை நாளாக உள்ளது.. ஆகவே எது நல்ல நாள் என்று, நேரம் காலம் பாத்துக்கிட்டு இருக்காம எந்த நாளிலே எல்லோரும் ஒன்று கூடி ஆராதிக்க வசதியாக அமைகிறதோ அது வெள்ளியோ,
சனியோ,ஞாயிறோ,திங்களோ
அந்த நாளில் கிறித்தவ விசுவாசிகள் ஒன்றாக சேர்ந்து... தேவனை ஆராதிப்போம், துதிப்போம்,அவரை மகிமைப்படுத்துவோம், வேத வசனங்களை தியானிப்போம்...

புதிய உடன்படிக்கையின்
மக்களாகிய,நாம் ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருக்க வேண்டும் என்று
தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார் (அப்போஸ்தலர் 6:4) எனவே காலம் நேரம் பார்த்துக்கொண்டு ஓய்ந்திராமல் எல்லா நாட்களிலும் கர்த்தருடைய  ஊழியத்தை செய்வோம், நாம் இப்போது கடைசி காலத்தில் இருப்பதாலும்,கர்த்தருடைய
இரண்டாம் வருகை மிகவும்
சமீபமாக இருப்பதாலும்,
சுவிசேஷம் அறிவிக்கும் பணியை துரிதப்படுத்துவோம், தீவிரமாக செயல்படுவோம்....

ஆமென்... அல்லேலூயா...

"அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே
முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்"

(ரோமர் 14:5)

ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

(கொலோசெயர் 2:16-17)

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in





No comments:

Post a Comment