Wednesday 9 December 2015

(12) முழுக்கு ஞானஸ்நானம் அவசியமா ? பகுதி-2

#exclusive

#முழுக்கு ஞானஸ்நானம் அவசியமா ?

பகுதி-2

குழந்தையில் எடுப்பது வேதத்தின் படி ஞானஸ்நானமே இல்லையா ?

தயவுசெய்து பகுதி -1 யை படித்துவிட்டு இந்த பகுதியை-2 யை படியுங்கள்

பீட்டர்:அந்தோனி குழந்தை ஞானஸ்நானம்,தெளிப்பு ஞானஸ்நானம்,இதெல்லாம் வேதம் போதிக்கும் ஞானஸ்நானம் இல்ல

பாவத்திலிருந்து மனம்திரும்பி,
ஒரே கர்த்தரை விசுவாசித்து,சீஷராகி பிறகு முழுகி எடுப்பதுதான் தேவன் சொன்ன ஒரே ஞானஸ்நானம்
(மத்28:19(அப் 2:38)(எபே 4:5)

அந்தோனி: அப்படியா ? ஆனா எங்க சபையில குழந்தைகள் பிறக்கும்போதே ஜென்ம பாவத்தோட பிறக்கிறது எனவே குழந்தையிலேயே ஞானஸ்நானம் கொடுக்கலாமுனு,வேதத்தில் இல்லாத உபதேசத்தை சொல்றாங்களே !

பீட்டர்: தேவன் கொடுத்த கட்டளைகளை  மனிதன் மீறி நடக்க செய்ய,சாத்தான் போதிக்கும் தந்திர உபதேசத்தில் இதுவும் ஒன்று,

#கிறிஸ்தவ சபைகளுக்குள் பல விதமான  உபதேசங்கள் இருக்கின்றன அதெல்லாம் நமக்கு முக்கியம் அல்ல.

#அந்த உபதேசங்கள் இயேசு கிறிஸ்து மற்றும் அப்போஸ்தலர்கள் வேதத்தில் நமக்கு போதித்த உபதேசமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

அதன்படி இல்லையென்றால் அதை யார் போதித்தாலும் (கலா1:8-9) எங்கிருந்து வந்தது போதித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளாதே,தூக்கி எறிந்துவிடு

அந்தோனி :ஓகே பீட்டர், ஆனா எனக்கு ஒரு சந்தேகம், பாவத்திலிருந்து மனம்திரும்பி,ஒரே கர்த்தரை விசுவாசித்து,சீஷராகி பிறகு முழுகி எடுப்பதுதான் தேவன் சொன்ன ஒரே ஞானஸ்நானம் (மத்28:19(அப் 2:38)(எபே 4:5) அப்படித்தான் வேதம் போதிக்குது,ஆனா ஒரு குழந்தை வளர்ந்து பெரிய ஆளாகி ஞானஸ்நானம் எடுக்கிறதற்கு முன்பே அதற்கு ஏதாவது ஆகி இறந்து விட்டால் அந்த குழந்தையின் பரலோக வாழ்வு கேள்விக்குறியாகிடுமுல ?அதனால குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுத்தா என்ன தப்பு ?

பீட்டர்: அந்தோனி இந்த கேள்வியை,  உனக்கா தோன்றி நீயா கேட்கிறியா ? இல்ல,உங்க சபையில உனக்கு போதித்த,போதனையிலிருந்து கேட்கிறியானு எனக்கு தெரியல,

அந்தோனி: நீ என்ன சொல்ற !

பீட்டர்: அந்தோனி,ஒரே கர்த்தரை விசுவாசித்து,சீஷராகி,ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்.என்று தேவன் சொன்ன கட்டளையை, மனிதனை எப்படியாவது மீறி நடக்க செய்ய சாத்தான் கள்ள உபதேசிகள் மூலம் உபதேசித்துக் கொண்டிருக்கிறான்.
அது சபை வழியாகவும் நடக்கிறது....

அந்தோனி: அப்படியா ?

பீட்டர்: ஆமா அந்தோனி, ஞானஸ்நானம் எடுக்காவிட்டாலும்,குழந்தைகள் கண்டிப்பாக பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் ஏனென்றால் பரலோக ராஜ்யம் குழந்தைகளுடையது (மத்18: 3)(மத்19:14)(லூக்18:16) என்று இயேசு கிறிஸ்து தெளிவா சொல்லிவிட்டார்.பாவ சிந்தனையற்ற கபடமில்லாத குழந்தை மனம் கொண்டவர்களாக நாமும் மாறவேண்டும்.

அந்தோனி: தேவனுடைய வார்தையே சொல்லிவிட்டது,பரலோக ராஜ்யம் குழந்தைகளுடையதுனு அப்ப சரியாக தான் இருக்கும்... அப்ப ஞானஸ்நானம் ?

பீட்டர்: வளர்ந்து விவரம் தெரிந்த பிறகு  மனம்திரும்பி,ஒரே கர்த்தரை விசுவாசித்து,சீஷராகி பிறகு முழுகி எடுக்கும் ஞானஸ்நானமே தேவனுடைய வார்த்தையின் படி ஞானஸ்நானம்.
வேதத்தை வாசித்துபார் எல்லோரும் அப்படித்தான் எடுத்தார்கள்

அந்தோனி: ஓகே பீட்டர் நான் ஒப்புக்கொள்கிறேன் குழந்தைக்கு கொடுக்கப்படும் ஞானஸ்நானம்
தேவன் சொன்ன ஞானஸ்நானம் இல்லை. மனம்திரும்பி,ஒரே கர்த்தரை விசுவாசித்து,சீஷராகி பிறகு முழுகி எடுப்பதே ஞானஸ்நானம்.
ஆனா இயேசு கிறிஸ்துவோட சேர்ந்து சிலுவையில் அறையப்பட்ட
கள்வனில் ஒருவன்,ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்கல ஞானஸ்நானமே எடுக்கல ஆனா அவன் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் தகுதியை அடைந்தானே ?(லூ 23:42-43)

பீட்டர்: அதுபற்றி இதோ விளக்கி சொல்கிறேன் கவனி

அந்தோனி: சொல்லு கவனிக்கிறேன்

தொடரும்.........

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

No comments:

Post a Comment