Saturday 5 December 2015

"கர்த்தரிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்

#Regular

பலப்படுங்கள்:

"கர்த்தரிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்

(எபேசியர் 6:10)."

பிரவீன்: பலப்படுங்களா ? எப்படி கர்த்தரில் பலப்படுவது?

பரத்: சூழ்நிலையை மறந்து, எந்த சூழ்நிலையிலும் அவரைத் துதிக்க வேண்டும். மேலும் அவரது அன்பில் நம்மையே மறந்து, அந்த அன்பை ரசிக்கிறவர்களாக, அனுபவிக்கிறவர்களாக நாம் இருக்க வேண்டும்.

பிரவீன்: புரியல !!!!

பரத் : அதாவது தானியேல் செய்தது போல

பிரவீன்: ஓ.... இப்ப புரிகிறது ராஜாவை தவிர வேறு யாரையும் 30 நாட்களுக்கு வணங்கவோ, ஆராதிக்கவோ கூடாது என்று கட்டளை, சட்டமாக கையெழுத்திடப்பட்டதை அறிந்தும், தான் முன் செய்து வந்தது போலவே தேவனாகிய கர்த்தரை இடைவிடாது ஆராதித்து வந்தார். அவர் அவ்வாறு அந்த சட்டத்தை மீறினால் சிங்கங்களின் குகையிலே போடப்படுவார் என்று தெரிந்தும், அவர் அதைக் குறித்துக் கவலைப்படாமல் தேவனை துதித்து, ஆராதித்தார். அவர் தன்னைக் கர்த்தருக்குள் பலப்படுத்திக் கொண்டார் அதுதானே ?

பரத்: ஆமா பிரவீன் அதனால், கர்த்தர் சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டு, தானியேலை காத்தார். (தானி. 6).

நாமும் சூழ்நிலையை கண்டு பயப்படாமல் இருந்து அவரை முழுமையாக நம்பி கர்த்தருக்குள் நம்மை பலப்படுத்திக் கொள்ளும்போது, சாத்தான் எய்யும் அம்புகளைத் தடுத்து, எல்லாவற்றையும் கர்த்தர் நன்மையாக மாற்றியும் முடிப்பார்.

பிரவீன்: அது சரி, அவரது சத்துவத்தின் வல்லமையில் நாம் எப்படி பலப்படுவது?

பரத்: நம்மை முற்றிலும் அவரது கரத்தில் அர்ப்பணிப்பதன் மூலமும், நமது கரத்தை உயர்த்தி, "ஆண்டவரே, இதை என்னாலோ, எனது சுயபெலத்தினாலோ, எனது அறிவினாலோ செய்யமுடியாது. உமது கிருபையின் செட்டைகளுக்குள் என்னை மூடிமறைத்து, என் சார்பில் நீரே செயலாற்றுவீராக," என்று அர்ப்பணிப்பதன் மூலமே.

பிரவீன் : ஆமா நண்பா நமது அன்றாட வாழ்க்கையில், நமது பலத்தினாலோ, வல்லமையாலோ, ஞானத்தினாலோ நாம் இதை செய்தோம், என்று மேன்மை பாராட்டிக்கொள்ள நம்மிடம் என்ன இருக்கு ?எல்லாமே அவருடைய கிருபையாலே நமக்கு கிடைத்து இருக்கு

பரத் : நீ சொல்வது 100% சரி, கர்த்தரும் நம்மிடம் இப்படிப்பட்ட தாழ்மையை தான் விரும்புகிறார்............
யோசபாத் எப்படி தன்னைக் கர்த்தரின் சத்துவத்தின் வல்லமையில் பலப்படுத்திக் கொண்டார் என்று நாம் வேதத்தில் பார்கிறோமே.

பிரவீன் : ஆமா பரத், பெருந்திரளான படை ஏதோமிலிருந்து, யூதாவுக்கு எதிராக
பாளையமிறங்கியிருக்கிறார்கள்
என்று கேள்விபட்டபோது,
தேவனின் நடத்துதலுக்காக அவரிடம் கெஞ்சினார். அவரின் ஜெபத்தை 2நாளாகமம் 20:6-12ல் பார்க்கிறோமே

 "எங்கள் தேவனே, எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்கு பெலனில்லை. நாங்கள் செய்ய வேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது, " என்று ஜெபம் செய்தார்.

பரத் : ஆம் அவர், தனது முழு தேசத்தையும் தேவனின் கரத்தில் ஒப்படைத்து, தங்களை வெறுமையாக்கி, ஜெபித்தார். அப்பொழுது கர்த்தர், "இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது", என்று சொல்லி யூதாவை காப்பாற்ற தேவனே இரங்கி வந்து, யுத்தம் செய்து, யூதா ஜனங்களுக்கு, பெரும் வெற்றியைக் கொடுத்தார். எனவே நாமும் வாழ்க்கையை தேவனின் பலத்த சத்துவத்தின் வல்லமைக்கு அர்ப்பணித்து, ஒப்புக்கொடுப்போம்

 ஆமென்

 "அவருடைய கிருபையே உங்களுக்கு போதும் (2 கொரி. 12:9)." உங்களை, அவரிலும், அவரது சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுத்தும்.

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

No comments:

Post a Comment