Saturday 29 September 2018

தேவனுடைய வார்த்தைகளின்
மீது,நாம் வைக்கும்,விசுவாசம்
நம்மால் பார்க்க முடியாதவைகளை,
பார்க்க வைக்கும்,இல்லாதவைகளை
இருக்கிறவைகளை போல
அழைக்கவைக்கும், அதரிசனமானவைகளை
நம்மை தரிசிக்க வைக்கும்..

இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு
(லூக்கா 8:50)

பீட்டர்: பயமும்,திகிலும்,கலக்கமும்,
ஒரு மனிதனை அவிசுவாசியாக்கும்.
அது அவனுக்கு தோல்வியையும்,
அழிவையும் கொடுக்கும்..

ஜான்: ஆமா ஆனா அந்த மனிதன்,
தேவனுடைய  வார்த்தைகளையும் வாக்குத்தத்தங்களையும்,முழு
நிச்சயமா நம்பி வாழும்போதும்
சூழ்நிலையை பார்க்காம,
வசனங்களை பார்த்து.. அவன்
அடிகளை,முன் எடுத்து வைக்கும்
போதும்,அவைகள் அவனை
விசுவாச வீரனாய் மாற்றும்.....
அது அவனுக்கு வெற்றியையும்,
வாழ்வையும் கொடுக்கும்..
அவன் இழந்ததையும் திரும்ப பெற்றுக்கொள்வான்..

பீட்டர்: ஆமா நண்பா! நாம் லூக்கா 8ம் அதிகாரத்திலே ஒரு சம்பவத்தை நாம் பார்கிறோமே!!!!யவீரு,என்கிற ஜெப
ஆலய தலைவன்,சுகவீனமாயிருக்கிற
தன் மகளை குணமாக்கும்படி,இயேசுவை வேண்டிக்கொண்டான். அவள் மரண அவஸ்தையால், வேதனைப்பட்டு
கொண்டு இருந்தாள்,இயேசுவோ, மனதுருகி, அவனுடைய வேண்டுகோளை ஏற்று,அவனுடைய வீட்டுக்குச் சென்றார்.
போகிற வழியிலே, திரள் கூட்டம் அவர்களுக்குப் பின் சென்றது.

ஜான்: ஆமா போற வழில...ஒரு பெரும்பாடுள்ள ஸ்திரீ,அவருக்கு
பின் வந்து,வஸ்திரத்தின் தொங்கலைத் தொட்டாள்.அவள் குணமானாள்.ஆனால், வீட்டுக்கு போவதற்கு நேரம் அதிகமாகி  கொண்டிருந்தபடியால்,யவீருக்குள்,
பதட்டத்தைக் கொண்டு வந்திருக்கும்,
இன்னும் தூரமிருக்கிறது.என் மகள் நிலை என்னவாகுமோ?எப்படியிருக்குமோ? தெரியவில்லை.என்று எண்ணியிருப்பார்.
ஆனால் அவர் அவைகளைப்பற்றி
கவலை பட்டதுபோல் தெரியல.. இயேசு
என் மகளை வியாதியிலிருந்து,சுகமாக்க போகிறார் என்ற நம்பிக்கையின்,
இயேசுவோடு நடைபோட்டு கொண்டிருந்தார்...

பீட்டர்: ஆமாப்பா யவீருக்கு,
இயேசுவின் மீதும் அவரின்
வார்த்தையின் மீதும்,விசுவாசம்
இருந்தது..அதனால் நேரம் ஆகிறதை குறித்து அவன் கலவைப்படல...
ஆனா அந்த நேரத்துல.. சற்றும் எதிர்பார்கமல்  ஒருவன் வந்து,
யவீரை நோக்கி“உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை, வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்”
(லூக். 8:49).இந்த வார்த்தையைக்
கேட்டதும்  யவீருக்கு எப்படி இருந்திருக்கும்,நிச்சயம் அவன்
முகம் செத்துப்போயிருக்கும்,
அவிசுவாசம் என்னும் காரிருள்
அவனை சூழ்ந்து கொண்டிருக்கும்,
அவன் கூட இயேசு இருந்தும்,அவன் பயப்பட தொடங்கிவிட்டன்,

ஜான்: ஆமா அந்த நேரத்துல,
இயேசு அவனைப் பார்த்து,
3 முக்கியமான காரியங்களைச்
சொன்னார்................
1)பயப்படாதே,
2) விசுவாசமுள்ளவனாயிரு,
3)அவள் இரட்சிக்கப்படுவாள்
என்றார். கிறிஸ்துவினுடைய இந்த வார்த்தைகள்,அவனின் விசுவாசத்தை
தட்டி எழுப்பிருக்கும்,இயேசு ஒரு
அற்புதம் செய்வார் என்கிற விசுவாசத்தின் எதிர்பார்ப்பு,அவனுக்குள் துளிர் விட்டிருக்கும்....

பீட்டர்: ஆமா நண்பா,விசுவாசத்தின் எதிர்பார்ப்பு,நிச்சயமாக அவனுக்குள்
துளிர் விட்டிருக்கும்!!
இன்றைக்கு இயேசு கிறிஸ்து
என்னோடு கூடவே இருக்கிறார்,
என்று நம்பி வாழ்கிற நல்ல விசுவாசிகள் கூட ஒரு கடினமான ஒரு சூழ்நிலையை தங்கள் வாழ்கையில் கடந்து போகிற நிலை வந்ததும்,இயேசு நம்மோடு கூடவே இருக்கிறார்,என்கிற சத்தியத்தை மறந்து.. பயந்துகொண்டும்,கலங்கி கொண்டும் இருக்கிறார்கள்.நாம் அவ்வாறு இருக்க கூடாது...

ஜான்: ஆமா நண்பா! கர்த்தருடைய வார்த்தைகளையும்,கிறிஸ்துவுக்குள்
அவர் அருளின வாக்குத்தத்தங்களையும்
விசுவாசிக்கிற கிறிஸ்தவர்கள் கூட ஒரு
சில இக்காட்டான வேளைகளில்,
டாக்டர்கள் சொல்கிற காரியத்தையும்,
ரிப்போர்ட்டையும்,கேட்டவுடனே,
பார்த்தவுடனே,பயமும் மனக்கலக்கம் அடைகிறார்கள்,சாத்தான் அதைப் பற்றிப்பிடித்து பெரிதாக்கி,பயத்தைக் கொண்டுவந்துவிடுவான்.பயம்,
அவிசுவாசத்தை அதிகமாக்கி
அவர்கள் வாழ்வில்,அற்புதங்கள் நடைபெறவிடாமல் தடுத்துவிடும்..

பீட்டர்: ஆமா!! சந்தேகப்படுகிறவர்களுக்கு கர்த்தர் அற்புதம் செய்ய முடியாது என்று.அப். யாக்கோபு சொல்லுகிறார், “சந்தேகப்படுகிறவன், காற்றினால் அடிபட்டு, அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்”(யாக். 1:6).
இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள், யவீருவைத் திடப்படுத்தின.அவன் பயத்தைவிட்டான்,விசுவாசம்
அடைந்தான்,அற்புதமும் நடந்தது.
இயேசு அந்த மரித்துப்போன பிள்ளையின் கையைப் பிடித்து“பிள்ளையே
எழுந்திரு என்றார்.அப்பொழுது
அவள் உயிர் திரும்ப வந்தது,
உடனே அவள் எழுந்திருந்தாள்”
(லூக். 8:55,55) என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம்..

ஜான்: ஆமா நாம் எந்த சூழ்நிலையிலும், மனம் சோர்ந்துபோக கூடாது,
எந்த பிரச்சனைகளையும், தேவனுடையவார்த்தையின் மீது
உள்ள  விசுவாசத்தோடும்,அணுகுவோம், நம் மீட்பர் உயிரோடிருக்கிறார். அவர் நிச்சயமாக எல்ல பிரச்சனையிலிருந்தும் நமக்கு விடுதலை தருவார்.இதை நாம் என்றும் விசுவாசிப்போம்,

பீட்டர்: தேவனுடையவார்த்தையின்
மீது நாம் வைக்கும்,விசுவாசம் நம்மால்  பார்க்க முடியாதவைகளை பார்க்க வைக்கும், இல்லாதவைகளை
இருக்கிறவைகளை போல
அழைக்கவைக்கும், அதரிசனமானவைகளை நம்மை
தரிசிக்க செய்யும், முடிவில் நமக்கு வெற்றியும் வாழ்வையும்,சுகத்தையும் ஆரோக்கியத்தையும்,சகல ஆசீர்வாதங்களையும்,பலன்களையும்
கொண்டு வரச்செய்யும்.விசுவாசத்தோடு இருப்போம்...

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
(எபிரெயர் 11:6)

No comments:

Post a Comment