Saturday 29 September 2018

என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்.
(சங்கீதம் 71:21)

பீட்டர்: கர்த்தர் நம் மேன்மையை பெருகப்பண்ணி நம்மை தேற்ற சித்தம் கொண்டு இருக்கிறார்...

ஜான்: ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவை விசுவாசிக்கும் நம்மை,நிச்சயமாக மேன்மைப்படுத்துவார்,இன்று உலகம் நம்மை மேன்மை அற்றவர்களாக கருதலாம்,
ஆனால் எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் கூடிய கர்த்தருடைய கரம் நம்மீது இருப்பதால்,(1 நாளா29:12)
ஒரு நாள் நாம் இந்த உலகத்திலும் மேன்மையான,ஒரு நிலையில் இருப்போம்,கர்த்தரே நம்மை
அவ்வாறு ஆக்குவார்.எனவே நமது மேன்மைப்பாராட்டுதல்,கர்த்தரை
குறித்து மாத்திரமே இருக்க வேண்டும்,
(2 கொரி10:17)நாம் நம்முடைய
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருக்க
வேண்டும் (கலா 6:14)

பீட்டர்: ஆமென் அல்லேலூயா.. நம்
தேவன் நம்மை மேன்மைப்படுத்துகிற தேவன் மாத்திரம் அல்ல, நம் தேவன்,
நமது மேன்மையை பெருகப்பண்ணுகிற தேவன்..(சங் 71:21)  நமது வாழ்வில்
நாம் எந்தந்த இடத்தில் மேன்மை இழந்து இருக்கிறோமோ!! அந்தந்த இடத்தில் எல்லாம் இழந்த மேன்மையை கர்த்தர் திருப்பி கொடுத்து அதை பெருகப்பண்ணுவார்..

ஜான்: ஆமா நாம் ஒரு சில நேரங்களில்,ஆவியானவரின் ஆலோசனைகளை கேட்காமல்,
மாம்சத்தில் நடந்து விழுந்துபோய்,
நம் மேன்மையை இழந்து போயிருக்கலாம்,
அல்லது,ஆவிக்குரிய மனநிலையோடு செயல்படாமல்,சுய விருப்பத்திற்கும்,
சுய சித்தத்திற்கும் இடம் கொடுத்து,
தவறிப்போய் நம் மேன்மையை இழந்திருக்கலாம்,கர்த்தர் நம்மை மேன்மையான ஸ்தானத்தில் வைத்திருக்க,நமக்கு தகுதி இல்லாத,
அற்ப காரியங்களுக்காக,மேன்மையை இழந்திருக்கலாம்,நாம் இப்போது எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் பரவாயில்லை,நாம் மனம் வருந்தி கர்த்தரிடத்தில் மறுபடியும் திரும்பி வருவோம் என்றால்,அவர் நம்மை மேன்மைப்படுத்தி பெருகப்பண்ணுவார்,

பீட்டர்: ஆமா! நாம் கர்த்தரிடத்தில் மறுபடியும் திரும்பி வரும்போது,இடிந்த வீட்டை மீண்டும்,திருப்பி எடுத்து கட்டுவது போல்,நமது இடிந்த மேன்மையை மீண்டும் அவர் எடுத்துக்கட்டி மேன்மை படுத்துவார்,நமது மேன்மையை பெருகப்பண்ணி நம்மை மறுபடியும் தேற்றுவார்.

ஆமென்... அல்லேலூயா...

கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை. (நீதிமொழிகள் 15:33)


No comments:

Post a Comment