Sunday 30 September 2018

வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்;இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.(ஏசாயா 8:20)

ஜான்: மனித வாழ்வில் இருக்கும் இருள்களை அகற்ற,தேவன் மனுக்குலத்திற்கு கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம் பரிசுத்த வேதாகமம்.

பீட்டர்: ஆமா,ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரை உள்ள எல்லா
வேதவாக்கியங்கள் அனைத்தும் இயேசுவைக்குறித்து சாட்சி
அளிக்கிறது,(யோவான் 5:39)

ஜான்: ஆமா இருளின் பிடியில்
இருக்கும் மனுக்குலத்திற்கு ஒளி
கொடுத்து அவர்களை பிரகாசிப்பிக்கிற
மெய்யான ஒளி இயேசு கிறிஸ்துவே (யோவான் 1:9)இருள் நிறைந்த இந்த
உலக வாழ்வில்,நம்மை பிரகாசிக்க செய்கிறவர் இயேசு கிறிஸ்து மாத்தரமே..( எபேசியர்5:14)

பீட்டர்: ஆமா,நண்பா! இயேசு கிறிஸ்து நமக்குள் இருந்து நம்மை பிரகாசிக்க
செய்ய விரும்புகிறார்,அதற்கு நம் ஒத்துழைப்புக்கொடுக்க வேண்டும்,

ஜான்: இன்று அனேகர் இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகும்,அந்த மெய்யான ஒளியை தன்னகத்தே பெற்ற பிறகும்,
இருளான வாழ்க்கையில் அவர்கள் இருப்பதற்கான காரணம்,அவர்கள்
ஒளியை சரியாக  பயன்படுத்தவில்லை...
கையிலே வெண்ணையை வைத்துக்கொண்டு,நெய் தேடி
அலைவது போல்,இன்வெட்டரை
புல் சார்ஜின் வைத்துக்கொண்டு,பவர்
கட் ஆனதும்,அதை பயன்படுத்தாமல்
இருட்டு வீட்டில் இருப்பதுபோல்,
அனேக விசுவாசிகள் இயேசுவை
தங்கள் உள்ளத்துக்குள் பெற்றுக்கொண்டும்,
அவரின் வசனத்திற்கு செவிகொடுக்காமல்,
அவரின் உபதேசத்தை கவனிக்காமல்,
கண்ட கண்ட உலக காரியங்களுக்கு செவிகொடுத்து,தங்கள் வாழ்க்கையை இருளாக தாங்களே ஆக்குகிறார்கள்.

பீட்டர்: ஆமா நண்பா! பெற்ற ஒளியை பிரகாசிக்க செய்ய எண்ணெய் ஊற்ற வேண்டும்,அதே போல கிறிஸ்தவ
வாழ்வை பிரகாசிக்க செய்ய வசனத்தை கேட்கவேண்டும்.

ஜான்: ஆமா,வேதத்தை கேட்க
கவனிக்க வேண்டும்,அதோடுகூட
அந்த வசனத்தின்படி பேசவும் வேண்டும்,அதைத்தான் வேதம்
நமக்கு போதிக்கிறது.......(ஏசாயா 8:20)
"வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்;இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை."

பீட்டர்: ஆமா,உலகத்தார்,இருளான காரியங்களிலிருந்தை விடுதலையாகி விடியற்காலத்து வெளிச்சத்தில்
பிரவேசிக்க வேண்டும் என்று,
விரும்புகிறார்கள்,அதேபோல் விசுவாசிகள்
விடியற்காலத்து வெளிச்சம் எப்போதுமே தங்கள் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்,இவை இரண்டிற்கும் தேவன் தரும் தீர்வு
அவர்கள்,வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்
வார்த்தையின்படியே பேசவேண்டும்
அப்போது அவர்கள்,இருள் நீங்கி விடியற்காலத்து வெளிச்சத்தில்
நிலைத்து நிற்பார்கள்...

ஜான்: போராட்டம்,பிரச்சனை,என்கிற இருள் சூழ்ந்த நேரத்திலே,எனக்கு விடியற்காலத்து வெளிச்சம் வேண்டும் என்று விரும்புகிறவர்கள்,வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்
மற்றவைகளை கவனிக்க கூடாது..
தேளையும்,பாம்பையும் கண்டவுடன்,
உருட்டுகட்டையை நாம் தேடுவதுபோல்,
பிரச்சனை போரட்டம்,சோதனை,பாவ எண்ணம்,வியாதி,வறுமை,ஆகியவைகள் வந்தபோது,நாம் வேதத்தையும்,சாட்சி ஆகமத்தையும் தேட வேண்டும்.
அந்த இருளான காரியங்களுக்கு,
வேதத்தில் என்ன தீர்வு எழுதியிருக்கிறதோ அதை பேசும்போது,நமது வாழ்வில் விடியற்காலத்து வெளிச்சம் உண்டாகுகிறது.

பீட்டர்: ஆமென்... அல்லேலூயா...
ஆகவே.. நாம் வாரந்தோறும் சபையிலே கவனித்து  கேட்ட வேதாகம சத்தியங்களை,
அந்த வாரம் முழுவது நமது நடைமுறை வாழ்க்கையில் பேசுவோம்,அப்போது
நமது வாழ்விலும்,நமது வார்த்தைகளை கேட்கிறவர்கள் வாழ்விலும்,
விடியற்காலத்து வெளிச்சம் உண்டாகும் அது நிலையாக பிரகாசமாக இருந்து கொண்டே இருக்கும்..

ஆமென்... அல்லேலூயா...

முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.(எபேசியர் 5:8)


No comments:

Post a Comment