Saturday 29 September 2018

இருதயத்தில் விசுவாசித்து,
அதை வாயிலே அறிக்கை செய்

"கர்த்தராகிய இயேசுவை நீ உன்
வாயினாலே அறிக்கையிட்டு,
தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால்இரட்சிக்கப்படுவாய்.
நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்"

(ரோமர் 10: 9-10)

பரத்: கர்த்தராகிய இயேசுவை நம்  வாயினால் அறிக்கையிட்டு,தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று நாம் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்

பிரவீன்: ஆம் இயேசு கிறிஸ்து நமக்காக சிந்திய இரத்தத்தையும்,கல்வாரியில்
அவர் செய்த தியாகத்தையும், விசுவாசித்ததினாலும்,அதை அறிக்கையிட்டதாலும்,நாம்  நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.

பரத்: மனத்தில் நாம் விசுவாசிப்பதும்,அதை வாயினால் அறிக்கையிடுவதும் மிகவும் முக்கியமானதாக இருக்கு

பிரவீன்: ஆமா இந்த உலகத்துல ஏராளமானோர்,கிறிஸ்து நமக்காக கல்வாரியில் செய்துமுடித்த காரியங்களை  விசுவாசிக்காமல், அவைகளை நம்பி அறிக்கையிடாமல் அந்தகாரத்தில் இருக்கிறார்கள்,அவர்களில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர்களும் இருப்பார்கள்...இதுதான் வேதனை

பரத்: அவர்களுக்கும் நாம் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்..
அது நமது கடமை,இயேசு நமக்காக கொடுத்த விலைக்கிரயம் மிகவும் பெரியது, அளவிட முடியாதது. அவர் எல்லாவற்றையும் சிலுவையிலே செய்து முடித்துவிட்டார்.

பிரவீன்: ஆமா மனிதர்களை இறுகபிடித்து கொண்டிருக்கும் விடுபட முடியாத  பாவத்திலிருந்தும்,பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும் சாபத்திலிருந்தும்,
வியாதியிலிருந்தும் எல்ல வகையான இருளின் ஆதிக்கத்திலிருந்தும்,
குறைபாட்டிலிருந்தும்,விடுவிப்பதற்கான தன் சொந்த இரத்தையே விலைக்கிரயமாக  செலுத்தி முடித்துவிட்டார்.
அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதை நம்பி,அதை அறிக்கையிடுவதே.

பரத்: ஆமா விசுவாசத்தின்
வெளிப்பாடு அதை அறிக்கை செய்வது,
இந்த செய்கைகள் ஒரு மனிதனை இரட்சிப்பை நோக்கி நடத்தும்,
அவனை நீதிமானாக ஆக்கும்

பிரவீன்: நாம் வெறுமனே விசுவாசிப்பது மாத்திரம் போதுமானதாக இருக்காது.
அதை அறிக்கையிடுவது மிகவும் அவசியமாயிருக்கிறது.நமது வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் வல்லமை வாய்ந்தது.
ஏனென்றால் நாம் தேவசாயலாக படைக்கப்பட்டிருக்கிறோம்..நமது
வாயின் வார்த்தைகளை குறித்து நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பரத்: ஆகவே, தேவன் கிறிஸ்துவுக்கள் நமக்கு தந்துள்ள எல்லா ஜீவனுள்ள வாக்குத்தத்தங்களையும் பெற்றுக் கொள்ள, நாம் அதை விசுவாசித்து, அவற்றை அறிக்கையிடுவது அவசியமாயிருக்கிறது. அவரது வார்த்தைகளும், வாக்குத்தத்தங்களும்,ஜீவனும்,
வல்லமையுள்ளது. மாறாதது.
எனவே, சூழ்நிலையை பார்க்காமல்,
அவர் கொடுத்த வாக்குத்தத்தை முழு நிச்சயமாய் நம்புவோம், அறிக்கையிடுவோம்.

ஆமென்... அல்லேலூயா...

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின்
கனியைப் புசிப்பார்கள்.
(நீதிமொழிகள் 18: 21)


No comments:

Post a Comment