Tuesday 7 August 2018

உங்கள் #மீட்பர் #உயிரோடுஇருக்கிறார்

பால்ராஜ்: நமக்கு வேண்டியவர்கள்,
பிரியமானவர்கள்,நமக்கு தலைவராக இருந்தவர்கள்,நம்மை உலகப்பிரகாரமாக
ஆட்சி செய்தவர்கள்,மரணமடைந்த
போது,நமது எண்ணம் அவர்களை
சுற்றியே இருக்கிறது,இனி இவரை போன்றவர்கள் தோன்றுவார்களா?
இவரை போன்ற ஒரு அதிகார
மையம் அமையுமா?என்று
நமக்குள் எண்ணங்கள் வருகிறது...

பீட்டர்: ஆமா நண்பா! (ஏசாயா 6:1)
இவ்விதம் ஆரம்பிக்கிறது...
உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில்,
ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன் என்று....அதாவது உலக்கபிரகாரமாக
ஒரு கூட்ட ஐனங்களை ஆட்சி செய்த
ஒரு ராஜா மரிக்கிறான்,மக்களும் நினைத்திருப்பார்கள்,இனி இவரை
போன்ற ராஜா தோன்றுவாரா?இவரை போன்ற ஒரு ஆளுமை வருமா?என்று
அப்போது ஏசாயா ஒரு தரிசனம் காண்கிறான்.. ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறதை...
(ஏசாயா 6:1)

பால்ராஜ்: ஆம்,நமக்கு பிரியமானவர்கள்,
நமக்கு தலைவராக இருந்தவர்கள்,
நம்மை உலகப்பிரகாரமாக ஆட்சி செய்தவர்கள்,மரணமடைந்தாலும்,
அவர்களுடைய ஸ்தானம்,
அவர்களின்,சிங்காசனம்
வெறுமையாக,ஆனாலும்
நம்முடைய ராஜாதி ராஜாவாகிய
தேவன்,உயரமும் உன்னதமுமான நிலையான,சிங்காசனத்தின்மேல்
நித்தியமாக வீற்றிருக்கிறார்,
அவரது அரசாட்சிக்கு முடியே
இல்லை (லூக்கா 1:33)

பீட்டர்: யாரும் நம் சார்பாக நிற்கவிட்டாலும்,
யார் நம்மை விட்டு பிரிந்துபோனாலும்,நம் மீட்பராகிய இயேசு,என்றும் நமக்காக உயிரோடு இருக்கிறார்,இந்த பூமி,தனது கடைசி
நாளை கண்டாலும் அவர் நமது
சார்பாக நமக்க வந்து நிற்பார்
(யோபு 19:25)

பால்ராஜ்: நம்மோடு இருந்தவர்கள்,
நமக்காக வாழ்ந்தவர்கள்,நம்மோடு
கடைசி வரை இல்லாமல் இடையிலே,போயிருக்கலாம்,
ஆனால்,நம் கர்த்தராகிய இயேசு
உலகத்தின் முடிவுபரியந்தம்
சகல நாட்களிலும் நம்மோடுகூட
இருப்பார் (மத்தேயு 28:20)

பீட்டர்: வாழ்வானாலும் தாழ்வானாலும்,
உன்னை விட்டு விலகமாட்டேன்,உன் ஆபத்திலே உன்னை கைவிடமாட்டேன்,
என்று வாக்குறுதி கொடுத்தவர்,
நம்மை விட்டு விலகி,நம்மை கைவிட்டு
போயிருக்கலாம்,ஆனால்..
நம் ஆண்டவராகிய இயேசு
நமக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்,
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று
(எபி 13:5)அவர் உண்மையுள்ளவர்
(எபி 10:23)அவர் நம்மை விட்டு எத்தருணத்திலும் விலக மாட்டார்,எக்காரணத்திற்காகவும்
நம்மை அவர் கைவிடமாட்டார்....

பால்ராஜ்: ஆம் நண்பா! இந்த
உலகத்தில் மக்களால் தலைவர்களாக கருதப்படுகிறவர்கள்,எல்லோரும்
மரித்தார்கள்,இன்று அவர்கள்
உயிரோடு இல்லை,ஆனால்
நம் இரட்சகராகிய இயேசு
கிறிஸ்து,நமது பாவங்களுக்காக
ஒரே ஒரு தரம் மரித்தார்,ஆனால் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார் (வெளி1:18) ஏனென்றால் அவர்
இந்த,உலகத்தில் பிறந்து வந்த
மனிதர்களில் ஒருவர் அல்ல,
அவர் இந்த,உலகத்தில் வந்து
 பிறந்த ஒரே தேவன்,அவர்
அடிமை அல்ல,நமக்காக
அடிமையின் ரூபம் எடுத்து
வந்த ராஜாதி ராஜா ( பிலி 2:7)
அவருக்கே மகிமையும்
வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
(1 பேதுரு 5:11)

ஆமென்... அல்லோலூயா...

Bro:Marvel Jerome
Mobile Phone: 8667501353

No comments:

Post a Comment