Saturday 18 August 2018

நீங்கள் செய்யும் ஊழியத்தை
எதுவும் தடைசெய்ய முடியாது....
ஏனென்றால்,வானத்திலும்
பூமியிலும் சகல அதிகாரமும்
உடையவர் உங்களோடு கூடவே இருக்கிறார்....

ஜான்: நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்
உடையவராக இருக்கிறார்,அவர் நம்மை
சகல ஜனங்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கவும்,அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவும்,அவரின் போதனைகளை ஜனங்களுக்கு போதித்து,அவர்களை அவைகளின்படி நடக்க கற்பிக்கவும்
கட்டளையிட்டு இருக்கிறார்,அதற்காக
அவர் உலகத்தின் முடிவுபரியந்தம்
சகல நாட்களிலும் நம்மோடு கூடவே
இருக்கிறார் (மத்தேயு 28:18-20)
எனவே நமது நற்செய்தி அறிவிக்கும்  நடவடிக்கைகளை எந்த சக்தியாலும்
தடை செய்ய முடியாது...

பீட்டர்: ஆமா அவர் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்
உடையவர் அவர் நம்மோடு கூடவே இருக்கிறார்,ஆகவே எதுவும் நம்மை
தடை செய்ய முடியாது,இது உண்மை இயேசுகிறிஸ்து நமக்குள் தான் இருக்கிறார் இதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்
(2 கொரி13:5)அப்போது நமக்குள்
விசுவாசம் வேலை செய்ய
ஆரம்பிக்கிறது,அற்புத அதியங்கள்
நமது பணித்தளங்களில்,நடைபெற ஆரம்பிக்கிறது.

ஜான்: உயிர்தெழுந்த இயேசு
நமக்குள் இருப்பதால்,அவர்
செய்த கிரியைகளை நம்மால் செய்ய
முடியும்,ஏன்! அவைகளைப்பார்க்கிலும்
பெரிய கிரியைகளையும் நம்மால்
செய்ய முடியும்..என்று இயேசுவே
நமக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்.
(யோவான் 14:12)

பீட்டர்: தேவ சித்தின் படி,நாம்  செல்கிற வழியிலோ அல்லது நம்முடைய ஊழியத்தின் பாதையிலோ,தேவனுக்காக நாம் எடுத்துவைக்கிற வைராக்கியமான செய்பாடுகளின் நடுவிலே,தடையாக
புயல் போன்ற பிரச்சனைகள் வந்து மோதினாலும்,கொந்தளிக்கிற அலைகளைபோல அவைகள் நம்மை சூழ்ந்தாலும்,அந்த கொந்தளிப்புகளையும்,
எதிர்ப்புகளையும்,நமது வார்த்தையால், அதட்டி சூழ்நிலைகளை அமைதி ஆக்ககூடிய அதிகாரத்தை
இயேசு நமக்கு கொடுத்திருக்கிறார்,
அந்த அதிகாரத்தை நாம் பயன்படுத்த வேண்டும்,எப்படிப்பட்ட எதிர்மறையாக சூழ்நிலைகளும் உங்களுடைய பயணத்தை தடுக்க முடியாது...(மாற்கு 4:35-41)
ஏனென்றால்,வானத்திலும் பூமியிலும்
சகல அதிகாரமும் உடையவர் நம்மோடு கூடவே இருக்கிறார் ஆமென்...

ஜான்: ஆமா நண்பா! அவர் நம்மோடு இருப்பதால்,நம்மால் இருளின் கிரியைகளை  சபிக்கவும் கனியற்ற அந்தகார கிரியைகளை கடிந்துகொண்டு(எபே5:11)(மாற்கு11:12-14)
அவைகளை செயலிழக்க செய்ய முடியும்,
நமது ஊழியத்தை,தேவசித்தத்தை,
பணிகளை செய்ய விடாதவாறு தடுக்க பிசாசு  பாவ சோதனை,வியாதி,பெலவீனம்,
தரித்திரம் ஆகிய இருளின் கிரியைகளை கொண்டுவரும் போது,அவைகளை நாம் கடிந்துகொண்டு சபித்து செயலிழக்க
செய்ய முடியும்... ஏனென்றால்,வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் உடையவர் நம்மோடு கூடவே இருக்கிறார்

பீட்டர்: நமது ஊழியத்தை,தேவசித்தத்தை,
நற்செய்தி பணிகளை,நற்கிரியைகளை நிறைவேற்ற,பொருளாதார குறைவு
ஒரு தடையே இல்லை,ஏனென்றால்
நம் தேவனால் எதிர்பாராத இடத்திலிருந்து,
இயற்கைக்கு அப்பாற்பட்ட ரீதியில்,தேவைகளை சந்திக்க முடியும், பணத்தை கொடுக்க முடியும்,
(2இராஜா7:18)(மத்தேயு 17:27)
அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்,அவர் நம்மோடு
கூடவே இருக்கிறார்,இதை நாம் மறந்துவிடக்கூடாது....

ஜான்: நமது ஊழியத்தை,நமது விசுவாச ஜீவியத்தை கெடுக்க நினைக்கும் எந்த மாந்திரவாதமும்,ஒழிந்து போகும் (எண்23:23) நாம் போதிக்கும் தேவ வசனத்தை மற்றவர்கள் கேட்க விடாதவாறு  தடை செய்கிற மந்திரவாதிகள்,பிசாசின் ஊழியக்கார்கள்,பொல்லாத மனிதர்கள் ஆகியவர்களின் கண்களை நம்மால் கட்டிப்போட முடியும்,அந்த அதிகாரம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது,
(அப் 13:6-12)

பீட்டர்: கிறிஸ்துவுக்குள் இருக்கும்
நம்மால் சர்ப்பங்களையும்,தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் முடியும்,ஏனென்றால் சாத்தானை ஜெயித்த இயேசு கிறிஸ்து நமக்கு அவன் மீது அதிகாரம் கொடுத்திருக்கிறார்,
நமக்கென்று தேவன் நியமித்த ஓட்டதை,
எந்த சாத்தானும் தடுக்க முடியாது,
எந்த பிசாசின் வல்லமையும் நம்மை
அழிக்க முடியாது,
அப்:பவுலை பாம்பு கொத்தியது
அவன் ஓட்டம் முடித்துவிட்டது,
பவுல் செத்துவிடுவான் என்று அனேகர் நினைத்தார்கள்‌,அவர்களின் நினைப்பு பெய்யானது,பவுல் சாகவில்லை,
பாம்புதான் செத்தது,பவுலுக்கென்று
தேவன் வைத்த ஓட்டம் தொடர்ந்தது..(அப்28:3-6) நம்முடைய ஓட்டமும் தொடரும்,எதுவும் நம்மை கொல்ல முடியாது..ஏனென்றால்,வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் உடையவர் நம்மோடு கூடவே இருக்கிறார்


No comments:

Post a Comment