Saturday 9 June 2018

ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது

#ஜீவவழியின் நற்செய்தி

ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.

(1 நாளாகமம் 29:12)

பரத்: தேவனுடைய வார்த்தைகள் வல்லமையுள்ளது. தேவன் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம் நிறைவானது.ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய வார்த்தை களினாலே நம்மை நிறைந்து நடத்தி வருகிறார்.தேவன் நமக்கு தரும் வார்த்தைகளை விசுவாசித்து தியானித்து அறிக்கை செய்து ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வோம்.

பிரவீன்: ஆமா கர்தருடைய வார்த்தை இவ்வாறாக சொல்கிறது.....

"ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்"(1 நாளா 29:12)

பரத்: ஆமா பிரவீன், இந்த வார்த்தையானது ஜெபமாகவும், துதியாகவும் தேவ சமூகத்திலே, தாவீது மூலமாக ஏறெடுக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட ஜெபமும் விசுவாச அறிக்கையும் தான் ஆட்டு மந்தைக்கு பின் சென்ற தாவீதை அரசனாக்கியது....

பிரவீன்: ஆம் நண்பா! ஐசுவரியமும் கனமும் தேவனிடத்திலிருந்து நமக்கு வருகிறது.. அவர்தான் எல்லாவற்றையும் ஆளுகிறவர், அவருடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் அவருடைய கரத்தினால் ஆகும்,
அவர் நம்மையும் மேன்மைப்படுத்துவார்
இன்னும் பலப்படுத்துவார்... ஆமென்

பரத்:ஆமா நண்பா இது இன்று நமது விசுவாச அறிக்கையாகவும்,ஜெபமாகவும் இருக்கட்டும்...

பிரவீன்: ஓகே நண்பா!

பரத்: நம் தேவன் நம்மை கீழாக
அல்ல, மேலாக்கவே விரும்புகிறார். அவர் நம்மை குப்பையில் அல்ல கோபுரத்தில் வைக்க விரும்புகிறார்,அவர் நம்மை புழுதி வைக்க அல்லபிரபுகளோடும்,
ராஜாக்களோடும் வைக்கவே விரும்புகிறார்...

பிரவீன்: ஆமா அதுமட்டுமல்லாமல்
அவர் நம்மை அடிமையாக அல்ல அனைத்தையும் கீழ்படுத்தி ஆண்டுகொள்ளும் அரசனாக  வைக்கவே விரும்புகிறார்.நாம் வறுமையில் வாடி இருப்பது அவரின் சித்தமல்ல,நாம் எல்லா ரீதியிலும் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதே அவரின் சித்தம்.

பரத்: ஆம் நம்மை உயர்த்தி அழகு பார்ப்பதே தேவனுக்கு மிகவும் விருப்பம். தேவ பிள்ளைகள் யாராக இருந்தாலும் தேவன் அவர்களை மேன்மைப்படுத்தவே சித்தமாக இருக்கிறார்

பிரவீன்: என்னை குறித்து  தேவனுடைய சித்தம் என்ன ? என்று அனேகர் கேட்கிறார்கள்,அதற்கு தேவன் கூறும்
பதில் நாம் நன்றாக இருப்பதுதான்.

பரத்: பெற்றவர்களுக்கு பிள்ளைகள் எப்போதும் உயர்வாக, எல்லாவற்றிலும் கனம் பெற்று, மேன்மையாக இருக்க வேண்டும் என்று விருப்புவார்களோ, அதை விட நம்முடைய தகப்பனாகிய தேவன் நம்மை எல்லாவற்றிலும் சிறந்தவர்களாக, நாம் மேன்மையாக வாழவே விரும்புகிறார்.

பிரவீன்: ஒரு சில மனிதர்கள் நம்மை மிகவும் தாழ்வாக பார்கலாம் ஆனால் தேவன் நம்மை தாழ்வாக பார்க்கிறவர் அல்ல, நம்மை கிறிஸ்துவுக்கு தனது சொந்த பிள்ளையாக பார்க்கிறார்.. விலையேறப்பெற்றவர்களாய்  பார்கிறார்.... நம்மை தாழ்வாக பார்க்கும் மனிதர்கள் கண்பார்க்கும் படி நம்மை மேன்மைப்படுத்தி அழகு பார்க்கிறவர் நம் கர்த்தர்..

ஆமென்... அல்லேலூயா....

உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும். (சங்கீதம் 18:35)


No comments:

Post a Comment