Saturday 9 June 2018

அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால்

#ஜீவ வழியின் நற்செய்தி

அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.
(1யோவான் 4:19)

ஜேம்ஸ்: தேவன் மீது நாம் கொண்டுள்ள,விசுவாசம்,நம்பிக்கை
என எல்லாம் அன்பில் இருந்தது தான் ஆரம்பமாகிறது..தேவ அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை

ஜான்: ஆமா தேவன் நம்மில் அன்பு கூர்ந்தார்,பிறகு நாம் அவரில் அன்பு கூர்ந்தோம்..அப்பரம் தான்
விசுவாசமும், நம்பிக்கையும் நம்மில் வளரத் தொடங்கியது.. அன்பில் இருந்து தான் விசுவாசமும்,நம்பிக்கையும் ஆரம்பிக்கிறது...
"அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும்"(1கொரி13:7)

ஜேம்ஸ்: ஆமா நண்பா,ஆவிக்குரிய வாழ்வில் அன்பு முதலில் வருகிறது ஏனெனில் அன்பு தேவனிடமிருந்து ஆரம்பிக்கிறது.....
“அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு கூருகிறோம்” என்று
(1யோவான் 4:19) வசனம் நமக்கு நினைப்பூட்டுகிறது.

ஜான்: அதுமட்டுமல்ல,அன்பின் அதிகாரம் என்று கூறப்படும்
1 கொரிந்தியர் 13ல்“அன்பு ஒருக்காலும் ஒழியாது”.என்று விவரிக்கப்பட்டதின் மூலம் தேவனுடைய உண்மையான அன்பின் தன்மைகளை விளக்குகிறது.

ஜேம்ஸ்: விசுவாசமும்,நம்பிக்கையும் மிகவும் முக்கியம்தான்,
விசுவாசத்தினால் தான் நாம் நீதிமான்கள் ஆக்கப்பட்டிருக்கிறோம் (ரோமர் 5:1)...அப்பரம் நம்பிக்கை அது “நிலையும் உறுதியான ஆத்தும நங்கூரமாய் இருக்கிறது”.
(எபிரேயர் 6:19) ஆக விசுவாசம்,
நம்பிக்கை ஆகியவைகள் மிக முக்கியமானவைகள் தான் நான்
அதை மறுக்கவில்லை ஆனால்,
எல்லாவற்றையும் விட தேவ அன்பே பெரியது... ஏனென்றால் தேவன் அன்பாகவே இருக்கிறார் (1யோ 4: 8)
என்று வேதம் சொல்கிறது..தேவன்
அழிவில்லாதவராக இருப்பது போல்,அவரின் அன்புக்கும் அழிவில்லை....

ஜான்: ஆமா நண்பா,தேவனும் அவரின் அன்பும் நித்தியமானவைகள், முடிவில்லாதவைகள்,எனவே நாம் இந்த உலகில் மற்றவர்களிடம் பிரதிபலன் எதிர்பார்த்து நேசிக்கும் மனுஷுக அன்பை தவிர்ப்போம், எதையும் எதிர்பார்க்கமல் நேசிக்கும்
தேவ அன்பில் நடப்போம், அவரோடு கூட நித்திய நித்தியமாய்
நிலைப்போம்....

ஆமென்... அல்லேலூயா...

அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
(1யோவான் 4: 8)


No comments:

Post a Comment