Monday 7 November 2016

அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்

#ஜீவ வழியின் நற்செய்தி

டேனியல்: பாவத்தினால் மரித்து
தேவனைவிட்டு பிரிந்து அவரை
கிட்டி சேரமுடியாத ஒரு மோசமான
நிலையில் இருந்த நமக்காகாக
நம் இரட்சகராகிய இயேசு பரிகார பலியாகி, நம்முடைய பாவங்கள் துக்கங்கள் எல்லாவற்றையும் சிலுவையில் சுமந்து தீர்த்தார்.

ஜான்: இந்த சிலுவை பலியின்
மூலம் அவர் நம்மை தேவனோடு ஒப்புரவாக்கினார். இந்த நற்செய்தியை விசுவாசிப்பன் மூலம்  நாம்
"தேவனுடைய பிள்ளைகள்"
என்ற அந்தஸ்தையும் பாவமன்னிப்பையும்,நித்திய ஜீவனையும்,பரலோக வாழ்வின் நிச்சயத்தையும் பெறுகிறோம்..

"அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்."

(கொலோசெயர் 1:20-21)

டேனியல்: நாம் தேவனோடு
கிட்டி சேர முடியாதபடிக்கு
அவருக்கும் நமக்கும் இடையில்
இருந்த கட்டளைகளாகிய
நியாயப்பிரமாணத்தை
சிலுவையில் ஆணியடித்து
குலைத்தார் ...

"நமக்கு எதிரிடையாகவும் #கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து,
அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது,பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது"

(கொலோசெயர் 2:14-17)

ஜான்: நியப்பிரமாண உபதேசம்
அல்ல, சிலுவையை பற்றிய உபதேசமே
பாவ மனிதனை பாவத்திலிருந்து வெளிவர செய்கிறது, ஆனால் நியப்பிரமாணவாதிகளுக்கு சிலுவையை பற்றிய உபதேசம் பைத்தியகாரத்தனமாக
தோன்றும்..ஆனால் சிலுவையை பற்றிய உபதேசமே பாவ
மன்னிப்பை,பரலோக வாழ்வை தருகிறது.. இது விசுவாசத்தினால் வேலை செய்கிறது...

டேனியல்: ஆமா இயேசுவே நமது விசுவாசத்தின் துவக்கமும் முடிவுமாய் இருக்கிறார், அவரே ஆதியும் அந்தமுமாக,வழியும் சத்தியமும், ஜீவனுமாக இருக்கிறார். அவரே நமது இரட்சிப்பின் தலைவராக, உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கும் ஒளியாக, உலகத்தில் வந்த எந்த மனிதனையும் தமது விலையேறப்பெற்ற இரத்தத்தால் கழுவி சுத்திகரிப்பவராக,அவரே நமது சமாதான கர்த்தராக, தேவனுடைய ஒரே பேறான குமாரனாக, இருப்பவராகவே இருக்கிறவர்....

ஜான்: சரியாக சொன்ன
அவருடைய நாமமே அன்றி இரட்சிக்கப்படவதற்கு வேறொரு
நாமம் கொடுக்கப்படவில்லை.
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ,அத்தனை
பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி,அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
- (யோவான் 1:12).

ஆமா நம் பரலோக தகப்பனை
போல் அன்புள்ளவர் யாருமில்லை,
நமது பாவங்களை கழுவி நம்மை
இரட்சித்து, நம்மை பரலோக ராஜ்ஜியத்திற்கு பங்குள்ளவர்களாய் மாற்றும் இவரை விசுவாசிக்கிறவர்கள் யாரும் வெட்கப்பட்டு போவதில்லை. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ,தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று என்று
வேதம் சொல்கிறது....
எனவே இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாம்
பாக்கியவான்கள்...

ஆமென்... அல்லேலூயா...

அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்
; விசுவாசியாதவனோ,தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

(யோவான் 3:18)

=======================
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome


No comments:

Post a Comment