Monday 7 November 2016

மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது

#ஜீவ வழியின் நற்செய்தி

மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்த
து; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

(ரோமர் 5:20-21)

ஜான்: தேர்வு எழுதியிருக்கிற ஒரு மாணவன் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தபட்சம் 35  மதிப்பெண்கள் எடுக்கனும் அப்படீனு வச்சுகிருவோம்...
அவன் எழுதியிருப்பதற்கு 30 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்க முடியும். திருத்துகின்ற ஆசிரியர் மதிப்பெண்களின் காரணமாக அவன் பெயில் ஆகி ஒரு ஆண்டை இழக்க வேண்டுமே என்று கருதி +5 என்று சேர்த்து அவனை தேர்ச்சிபெறச் செய்கிறார்.அந்த 5 மதிப்பெண்களைப் பெறுவதற்கு அவன் தகுதியில்லை. ஆனாலும் ஆசிரியரின் தயவினால் அவன் தேர்ச்சி பெறுகிறான்.
அவர் அவனுக்குக் கொடுத்த  மதிப்பெண்கள்தான்
"கிரேஸ் மார்க்".....அதாவது தகுதியற்றவனுக்கு கொடுக்கப்படும் ஈவு.அதைப்போல தகுதியற்றவர்களான நமக்கு தேவன் கொடுக்கும்
ஈவுதான் "கிருபை"

டேனியல்: ஆமா! கிருபை தேவனுடைய தன்மைகளில் ஒன்று.."கிருபை" என்றால் "தகுதியற்றவர்களுக்கு தேவனால் அருளப்படும் ஈவு"என்று பொருளாகும்.அந்த மாணவன் கூட
30 மதிப்பெண்கள் எடுத்திருந்தான்.
ஆனால் நமக்கோ எந்த தகுதியும் இல்லை. அப்படியிருந்தும் தேவன் அவருடைய மிகுந்த கிருபையினால் நாம் தேவனுடைய பிள்ளைகளாகும் சிலாக்கியத்தை பெற்றிருகிறோம். கிருபை என்ற வார்த்தையைப் பார்க்கும் போதெல்லாம் "தகுதியற்றவனுக்கு அருளப்பட்ட ஈவு" என்ற பொருள் நம்முடைய நினைவிற்கு வரவேண்டும்.

ஜான்: அநேகர் தங்களுடைய பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும்போது, ‘கிருபை’ என்றும், ‘கிரேஸ்’ என்றும் ‘தேவ கிருபை’ என்றும் பெயர் சூட்டுகிறார்கள். அநேகர்.... ஜெபிக்கும்போது, “கிருபையின் தேவனே, கிருபையில் ஐசுவரிய முள்ளவரே என்று தங்கள் ஜெபங்களை ஆரம்பிக்கிறார்கள்.

டேனியல்: ஏன் சிலர் தங்கள் வியாபார ஸ்தலத்திற்கு கிருபை,கிருபா...என்றும்
தங்களுடைய ஊழியங்களுக்கு ‘கிருபையின் ஊழியங்கள்’ என்றும்  பெயரை சூட்டுகிறார்கள்.
ஒவ்வொரு போதகர்களும் சபை
ஆராதனையை முடிக்கும் போது,
“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும், பிதாவாகிய தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக”
(2 கொரி. 13:14) என்று சோல்லி முடிக்கிறார்கள். இந்த ஆசீர்வாதத்தில் அவர்கள் முதலாவது வைப்பது இயேசுகிறிஸ்துவினுடைய "கிருபை".

ஜான்: ஆமா! தேவனுடைய கிருபையை நினைக்கும் போது உள்ளம் உருகி அழுகை வருகிறது நண்பா,

நாம் பாவிகளாயிருக்கையில்
அவர் நம்மைத் தேடி வந்தாரே!
அதுதான் அவருடைய கிருபை.
நம் பாவங்களையெல்லாம் கிருபையால் மன்னித்தாரே!
நம்மை தம்முடைய
சோந்தப் பிள்ளைகளாக அரவணைத்துக்கொண்டாரே!

டேனியல்: அதனாலதான்..... அப்போஸ்தலனாகிய பவுல்  இவ்வாறு சொல்லுகிறார்,

“கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு” (எபே. 2:8).

ஜான்: உலகில் மிகவும்
பிரபலமான போதகரிடம் அமெரிக்காவை சேர்ந்த ஒரு
வாலிபன் போய் இவ்வாறு
கேட்டான்.......,

பாஸ்டர் "என்னுடைய வாழ்க்கை ஓட்டத்தை பரிசுத்ததோடும் வெற்றியோடும்,ஓடி முடிப்பதற்கு
நான் என்ன செய்ய வேண்டும் ?
நான் பாவியாக இருக்கிறேன்,
பலவிதமான பாவ சோதனைகள் என் மேல் வந்து மோதுகின்றன.
விழுந்துவிடுவேனோ என்று
பயமா இருக்கிறது இதற்கு நீங்கள் சொல்லும் ஆலோசனை என்ன?” என்றான்.....

அதற்கு அந்த போதகர் இவ்வாறு
பதில் சொன்னார்......

அன்பு சகோதரனே ! நீ இயேசு
கிறிஸ்து உனக்காக கல்வாரி சிலுவையில் செய்து முடித்தவைகளே,உன் முழு உள்ளத்தோடு விசுவாசிப்பாய் என்றால்...நீ நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டு இருக்காமல்,கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறவனாய் இருப்பாய்,அப்படி நீ கிருபைக்கு கீழ்ப்பட்டிருந்தால்,பாவம் உன்னை  மேற்கொள்ள மாட்டாது என்று
வேதம் போதிக்கிறது...

"நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல்,கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிற படியால்,பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது"(ரோமர் 6:14).
இதை நீ விசுவாசிக்கிறாயா ?

"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன்
தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்".
(1 யோவான் 3:9) இதை நீ விசுவாசிக்கிறாயா ? என்றார்

அந்த வாலிபன் அமைதியாக இருந்தான்...

பிறகு அந்த போதகர்...
மறுமொழியாக.....
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்,இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் நாம் நீதிமான்கள்
என்று வேதம் போதிக்கிறது.....
அது மட்டுமல்ல,இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாம் இயேசுவின் நாமத்தினாலும், தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்

(1கொரி 6: 11)என்றும் இயேசுவே நமது பரிசுத்தமாக இருக்கிறார் (1கொரி 1:31) என்றும் நம்முடைய சரீரம் தேவன் வாசம் செய்யும் பரிசுத்த ஆலயம் (1கொரி 3:17) என்றும் தேவனுடைய வார்த்தைகளுக்குள்ளான அதாவது கிறிஸ்து இயேசுவுக்குள்ளான விசுவாசிகளாகிய நாம் யாவரும் பரிசுத்தவான்கள்,(பிலி 4: 21)
(எபே 4:12) என்றும் கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தொழுதுகொள்கிற அனைவரும் பரிசுத்தவான்கள்(1கொரி1:2 )
என்றும் நாம் மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய
சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷன் என்றும் அந்த புதிய பரிசுத்த மனுஷனை தரித்துக்கொள்ளுங்கள்
(எபே 4: 24) என்றும் தேவனுடைய வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நம்மை பரிசுத்தவான் என்று அங்கீகாரப்படுத்துகிறது

எனவே புதிய உடன்படிக்கையின் அடிப்படையில் வேதாகமம் (விசுவாசியை) உன்னை குறித்து
என்ன சொல்கிறதோ அவ்வாறாக உன்னை #எண்ணிக்கொள்..
ஏனென்றால்..."அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே
அவன் இருக்கிறான்"(நீதி23:7)

"அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் #எண்ணிக்கொள்ளுங்கள்"
(ரோமர் 6:11)

அவ்வாறு நீ #எண்ணிக்கொள்ளும் போது.. உனக்கு விசுவாசம் வளர ஆரம்பிக்கும்...தேவ கிருபை
உனக்குள் செயல்பட ஆரம்பிக்கும்..
உன் வேத அடிப்படையிலான
உன் பரிசுத்த எண்ணங்கள்
செயல் வடிவம் பெற
ஆரம்பிக்கும்...

பிறகு பலவிதமான பாவ சோதனைகள்
உன் மேல் வந்து மோதினாலும்
நீ விழ மாட்டாய்,பாவம் உன்னை மேற்கொள்ளாது நீ பாவத்தை மேற்கொண்டு கிறிஸ்துவுக்குள்
வெற்றி சிறப்பாய்...

நான் அல்ல கிறிஸ்துவே!
என் கிரியை அல்ல கர்த்தருடைய
கிருபை..கிருபை என்று உன்னை கர்த்தருக்கு முன் எப்போதும் தாழ்த்தி
தேவகிருபைக்கு உன் வாழ்க்கை வழிகளை ஒப்புக்கொடுப்பாயானால், கிருபையினாலே உன்னுடைய
வாழ்க்கை ஓட்டம் பரிசுத்தத்தோடும் வெற்றியோடும் முடியும்.”என்றாரம்.....

டேனியல்: ஆமென்... அல்லேலூயா....

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

(எபேசியர் 2:8-9)

======================
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

No comments:

Post a Comment