Tuesday 20 September 2016

பரமண்டல ஜெபம் நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்கான இயேசு கற்றுக்கொடுத்த ஒரு மாதிரி முறையா ? இல்லை மந்திரம் போல் நாம் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டிய மனப்பாட முறையா ?

#பரமண்டல ஜெபம் நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்கான இயேசு கற்றுக்கொடுத்த ஒரு மாதிரி முறையா ? இல்லை மந்திரம் போல் நாம் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டிய மனப்பாட முறையா ?

டேனியல்: பரமண்டல ஜெபம் என்பது இயேசு தமது சீஷர்களுக்கு (நமக்கு) கற்றுகொடுத்த ஜெபமாகும்
(மத்தேயு 6:9-13 மற்றும் லூக்கா 11:2-4).

மத்தேயு 6:9-13 சொல்லுகிறது......

“பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்.”

பீட்டர்: அநேகர் இந்த ஜெபத்தை நாம் மனப்பாடம் செஞ்சு அத அப்படியே சொல்லி ஜெபிக்கனும் என்று தவறாக புரிஞ்சுகிட்டு இருக்காங்க....
அதனால பலர் பரமண்டல ஜெபத்தை ஒரு மந்திரம்  போல நினைத்து அதை திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டே இருக்கிறாங்க... இப்படி செஞ்சா அவங்க ஜெபம் நிறைவாகிடுமுனு நெனைக்கிறாங்க....

டேனியல்: ஆமா ஆனா அவங்க நெனப்புக்கு  எதிர் மாறாக வேதம் நமக்கு இவ்வாறு கற்றுக்கொடுக்கின்றது.....
அதாவது நாம் ஜெபம் செய்யும்போது, தேவன் நமது வார்த்தைகளில் கவனம் செலுத்துவதைவிட, நாம் இருதயத்தையே கவனிக்கிறார் (மத்தேயு 6:6-7).ஜெபிக்கும்போது,
நமது இருதயத்தை தேவனிடம் ஊற்ற வேண்டும் (பிலிப்பியர் 4:6-7),
மனதில் ஏதாவதை நினைத்து கொண்டு வெறுமனே  மனப்பாடம் செய்து தேவனிடம் ஒப்பிக்கப்படுர  வார்த்தைகள் பிரயோஜனமற்றது..
அது ஒன்றுக்கும் உதவாது....

பீட்டர்: அதனால குழந்தைகளுக்கு
பரமண்டல ஜெபத்தை மனப்பாடம் செய்ய சொல்லி கொடுக்க வேண்டாமுனு,நாம் சொல்ல கூடாது
தேவனுடைய வார்த்தைகளை அவர்களது மனதில் விதைக்க வேண்டும்.. அது மிக அவசியமே ஆனால் மனப்பாடம் செய்து சொல்வது,
வாசிப்பது இவைகள் ஜெபம் என்று வேதம் போதிக்கவில்லை.....

பரமண்டல ஜெபம் நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்க்கான ஒரு மாதிரி வடிவம்... நமது ஜெபத்தில் இருக்க வேண்டிய “பொருட்களை” அது காட்டுகிறது.

டேனியல்: சரியான சொன்ன நண்பா! இதை பற்றி நான் கொஞ்சம் விரிவாக சொல்றேன்.....கவனி....

1)“பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்பது நாம் யாரிடம் ஜெபம் செய்யவேண்டும் என்று சொல்லுகிறது—பிதாவானவரிடம்.

2)“உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக”—இது நாம் தேவனை துதித்து ஆராதிக்க வேண்டும் என்று சொல்லுகிறது.

3)“உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்ற வார்த்தைகள் நாம் நமது வாழ்கையில் மற்றும் உலகத்தின் மேல், நம் திட்டங்கள் அல்ல, தேவன் வைத்துள்ள திட்டங்கள் நடக்கும்படி ஜெபிக்க வேண்டும் என்று நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

4)“எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” நமது தேவைக்கு தேவனிடம் கேட்க வேண்டும் என்று உணர்த்துகிறது

5)“எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்ற வார்த்தைகள் நமது பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்ய வேண்டும் என்றும் நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்றும் சொல்லுகிறது.

6) ஜெபத்தின் முடிவில் இருக்கும்
இந்த வார்த்தைகள் “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்,” நாம் பாவத்தின் மேல் வெற்றி அடையும்படி தேவனின் உதவிக்காக மற்றும் பிசாசின் தாக்குதல்கள் அனுகாமல் பாதுகாப்பிற்காக தேவனிடம்  வேண்டுதல் செய்ய வேண்டும் என்று சொல்கிறது..

இப்படியாக, பரமண்டல ஜெபம் என்பது ஏதோ மனப்பாடம் செய்து தேவனிடம் ஒப்புவிக்கின்ற ஒன்று அல்ல. அது நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்கு இயேசு கற்றுக்கொடுத்த மாதிரி முறை  ஆகும்...

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

facebook.com/LIVINGWAYMARVEL



No comments:

Post a Comment