Tuesday 13 September 2016

மரணத்திற்குப்பின் மனிதனுக்கு நடப்பது என்ன?

மரணத்திற்குப்பின் மனிதனுக்கு
நடப்பது என்ன?

டேனியல்: மரணத்திற்குப்பின்
மனிதனுக்கு நடப்பது என்ன என்பது குறித்து கிறிஸ்தவ மக்களிடையே கொஞ்சம் குழப்பமே நிலவி வருது,இது பத்தி கிறித்தவ விசுவாச அடிப்படையில வேதாகம ஆதாரத்தோட இன்று  பார்ப்போம்மா ?

பீட்டர்: கண்டிப்பா நண்பா,அதுக்கு முன்னாடி, மரணத்திற்குப்பின்
நடப்பது குறித்து கிறித்தவர்கள்
எந்தந்த மாதிரியான நம்பிக்கை வச்சுருக்காங்கனு பார்ப்போம்....

டேனியல்: ஆமா,முதலில் அதை பாத்துட்டு அது கிறித்தவ விசுவாச அடிப்படையில் ஒத்துப்போகிறதானு நிதானிச்சுட்டு,இயேசு கிறிஸ்து மற்றும் அப்போஸ்தர்களின் உபதேசங்களின் அடிப்படையில் முடிவு எடுப்போம்.

பீட்டர்: ஓகே.. நண்பா!

1)சில கிறித்தவர்கள் மரணத்திற்குப்பின் கடைசி நியாயத்தீர்ப்பு வரை எல்லோரும் "நித்திரையடைகிறார்கள்" அதன்பின்பு பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனைவரும் அனுப்படுவார்கள் என்று கருதுகிறார்கள்

2)வேறு சில கிறித்தவர்கள்
மரிக்கும் தருணத்தில்தானே மனிதர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு தங்களது நித்திய குடியிருப்புக்கு அனுப்பப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள்.

3)இன்னும் சில கிறித்தவர்கள், மனிதர்கள் இறக்கும்போது கடைசி உயிர்த்தெழுதலுக்கும் கடைசி நியாயத்தீர்ப்பிற்கும்,இறுதியாக, தங்கள் நித்திய குடியிருப்புக்கும் காத்திருக்கும்படி ஒரு"தற்காலிகமான" பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனுப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள்,

4) மேலும் சிலர்,மனிதர்கள் மரணத்திற்குப் பின்
பரலோக சந்தோஷத்துக்குள்
நுழையும்படியான பரிசுத்தம்
அடையும்படியாக,கடைசி
நேர சுத்திகரிப்புக்காக
உத்தரிக்கும் ஸ்தலம் என்னும்
இடத்தில் காத்திருப்பதாகவும்,
அவர்களுக்காக அவர்களின் உறவினர்கள்,நண்பர்கள்
பிரத்தனை செய்தால் அவர்கள் பரலோகம் அடைவார்கள் என்று நம்புகிறார்கள்.

டேனியல்: சரி,இப்ப கிறித்தவ விசுவாச அடிப்படையில் மரணத்திற்குப்பின் மனிதனுக்கு நடப்பது என்ன
என்பதைக் குறித்து பார்ப்போமா ?

பீட்டர்: கண்டிப்பா முதலாவது,
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம், நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது (யோவான் 3:16,18,36) மரணத்திற்குப்பின் விசுவாசிகளுடைய ஆத்துமா/ஆவி பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஏனென்றால்,கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டிருப்பதினால் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன.

டேனியல்: ஆமா இதுபற்றித்தான் நாம் (2கொரிந்தியர் 5:6-8 பிலிப்பியர் 1:23)
வாசிகிறோமே ! "இந்த தேகத்திவிட்டு  குடிபோகவும், கர்த்தரிடத்தில் குடியிருக்கவும்"என்றுள்ளதே " அதுமட்டுமல்ல அப்போஸ்தலனாகிய பவுலும் இதை பிலிப்பியர் 1:23-24 ல்
சற்று தெளிவாக எழுதுகிறார்

"ஏனெனில் இவ்விரண்டினாலும்
நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, #கிறிஸ்துவுடனேகூட #இருக்க
எனக்கு ஆசையுண்டு, அது
அதிக நன்மையாயிருக்கும்;
அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்." என்று பிலிப்பிய விசுவாசிகளுக்கு எழுதுகிறார்.
இதிலிருந்து மரணத்திற்குப்பின் விசுவாசிகளுடைய ஆத்துமா/ஆவி பரலோகத்தின் தேவனாகிய இயேசு கிறிஸ்துவிடம் செல்கிறது என்று நாம் பார்க்கிறோம்.....

பீட்டர்: ஆனால்,1கொரிந்தியர் 15:50-54
மற்றும் 1தெசலோனேக்கியர் 4:13-17 போன்ற வேதபகுதிகள் விசுவாசிகள் மறுபடி எழுந்திருப்பதையும் மகிமையின் தேகம் அவர்களுக்கு  கொடுக்கப்படுவதையும் பற்றி விவரிக்கிறதே ? விசுவாசிகள் மரித்தவுடனே கிறிஸ்துவோடுகூட இருக்கச் செல்வார்கள் என்றால், இந்த எழுந்திருக்குதலின் நோக்கம் என்ன?

டேனியல்: சொல்கிறேன் நண்பா, மரித்தவுடன் விசுவாசிகளின்
ஆத்துமா/ஆவி கிறிஸ்துவுடனே இருக்கச் செல்லுகிறது,மாம்சசரீரம் கல்லறையில் "நித்திரையில்"
இருக்கும்,விசுவாசிகளின் எழுந்திருக்குதலின்போது மாம்சசரீரமானது உயிர்த்தெழப்பட்டு, மகிமையடைந்து பின்பு
ஆத்துமா/ஆவியுடன் மறுபடி இணைக்கப்படுகிறது.மீண்டுமாய் இணைக்கப்பட்ட இந்த மகிமையின் ஆவி ஆத்துமா சரீரமே புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகும்பொழுது விசுவாசிகள் சுதந்தரித்துக்கொள்ளும் நித்திய சொத்தாயிருக்கும் (வெளிப்படுத்தின விசேஷம் 21-22).

பீட்டர்: நன்றாக புரிகிறது
டேனியல்,இது இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு மரணத்திற்குப்பின் நடக்கப்போகிற காரியம் சரி ஆனால் இயேசுவை நம்பாத விசுவாசிக்காத,அவரை ஏற்றுக்கொள்ளாத மக்களுக்கு மரணத்திற்குப்பின் என்ன நடக்கும் ?

டேனியல்: சொல்கிறேன் நண்பா!இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காத அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு
மரணம் என்பதன் பொருள் நித்திய ஆக்கினை.ஆனாலும்,விசுவாசிகளுக்கு நடப்பதைப்போலவே,அவிசுவாசிகளும் தங்களுடைய கடைசி உயிர்த்தெழுதலுக்கும், நியாயத்தீர்ப்பிற்கும்,நித்தியமாக வாழும்நிலைக்கும் காத்திரும்படி ஒரு தற்காலிகமான ஒரு குடியிருப்புக்கே அனுப்பப்படுகிறார்கள் என்று
லூக்கா 16:22-23ன் படி நாம்
பார்க்க முடியும்....

பீட்டர்: ஓ... இப்போ எனக்கு நன்றாக புரிகிறது ! ஐசுவரியமுள்ள மனுஷன் மரித்தவுடனே வேதனைக்குள்ளாகிறதாக வசனம்  கூறுகிறது. ஆனால் வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15 மரித்த #அவிசுவாசிகள் அனைவரும் #உயிர்தெழப்பட்டு,வெள்ளைச் சிங்காசனத்தின் முன் நியாயந்தீர்க்கப்பட்டு பின்பு #அக்கினிக்கடலிலே தள்ளப்படுவதாக வேதம் விவரிக்கிறது.

டேனியல்: ஆமா நண்பா! அவிசுவாசிகள் மரித்தவுடனேயே நரகத்திற்கு (அக்கினிக்கடல்) அனுப்பப்படுவதில்லை பதிலாக நியாயத்தீர்ப்பிற்கும் தண்டனைக்குமெனெ ஒரு தற்காலிகமான இடத்தில் இருக்கிறார்கள்.அவிசுவாசிகள் உடனடியாக அக்கினிக்கடலுக்கு அனுப்பப்படவில்லை என்றாலும் அவர்களின் மரணத்திற்கு அடுத்த நிலை இன்பமாக இருக்கப்போவது இல்லை.....

"இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே"(லூக்கா 16:24) என்றுதான் அந்த ஐசுவரியமுள்ள மனுஷனும் கூப்பிட்டான்.

பீட்டர்: மரணத்திற்குப் பின்பு,
ஒரு மனிதர் ஒரு "தற்காலிகமான" பரலோகத்திலோ, நரகத்திலோ வசிக்கிறார். இந்த தற்காலிகமான இடத்திற்குப்பின் கடைசி உயிர்தெழுதலின்போது அவருடைய நித்தியமாக வாழும் நிலையில் மாற்றம் இருக்காது. நித்தியமாக வாழும்படி குறிப்பிடப்படும் "இடத்தில்" மட்டுமே மாற்றம் இருக்கும்.

டேனியல்: ஆமா,விசுவாசிகள்
புதிய வானத்திலும் புதிய பூமியிலும் நுழையும்படி இறுதியாக அனுமதி பெறுவார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 21:1). அவிசுவாசிகள் அக்கினிக்கடலுக்கு இறுதியாக அனுப்பப்படுவார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15).இதுவே மனிதர்களின் இறுதியான, நித்தியமான குடியிருப்பு....

பீட்டர்: இவைகள் அவர்கள் இரட்சிப்பிற்காக இயேசு கிறிஸ்துவில் மீது மாத்திரம் நம்பிக்கை கொண்டிருந்தார்களா என்பதை மட்டுமே பொறுத்து அமைகிறது....

*********************************

நன்றி மீண்டும் சந்திப்போம்.....

"இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; இயேசுவை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்"
(யோவான் 3:36)

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

facebook.com/LIVINGWAYMARVEL





No comments:

Post a Comment