Tuesday 12 April 2016

(13) மரியாள் இயேசுவின் மனுஷத்துவத்துக்கு தாயா ? தேவத்துவத்துக்கு தாயா !

தனித்துவ பதிவு

# மரியாள் இயேசுவின்
மனுஷத்துவத்துக்கு தாயா ?
தேவத்துவத்துக்கு தாயா !

அந்தோனி : மரியாள் தேவ தாய்....
தேவ குமாரன் இயேசுவுக்கே தாயாக இருந்தவர் தேவதாயாக தான இருக்கனும் !

பீட்டர்: இல்ல, நீ சொல்றது தவறு, மரியாள் இயேசுவின் தேவத்துவத்துக்கு தாய் அல்ல, அவள் இயேசுவின் மனுஷத்துவத்துக்கு தாய்...

அந்தோனி: எப்படி சொல்ற ? கொஞ்ஜம் விளக்கமா சொல்லு...

பீட்டர் : ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த காலங்களில் 100%மனுஷகுமாரனாகவும்,100% தேவ குமாரனாகவும் வாழ்ந்தார்.... இதை சரியாக புரிந்து கொள்ளாமல் பிற மத சகோதரர்களும் பற்பல விமர்சனங்களை வைக்கிறார்கள்...

அந்தோனி: 100%மனுஷகுமாரன்,100% தேவ குமாரனா வாழ்ந்தாரா!!  இதைஎப்படி சொல்ற?

பீட்டர்: வேதாகமத்தில் பல வசனங்கள் அதை நமக்கு எடுத்துரைக்கிறது...
உனக்கு புரியும்படி தேவகுமாரனுக்கும்,மனுஷகுமாரனுக்குமான தன்மைகளை சில வசனங்களை  வேதாகமத்திலிருந்து காண்பிக்கிறேன் கவனி.....

அந்தோனி: சொல்லு....நண்பா கவனிக்கிறேன்

பீட்டர்: #இயேசுவின் சினேகிதனான லாசரு மரித்ததை உணர்ந்த இயேசு தம் சீஷர்களோடு,பெத்தானியாவிற்கு சென்றார்... அவனை கல்லறையில் வைத்து நான்கு நாள் ஆகிவிட்டது
லாசருவின் சகோதரி மரியாள் மற்றும் யூதர்கள் அழுகிறதையும்,கண்டு,
இயேசு கண்ணீர் விட்டார்...(யோ 11: 35)
என்று எழுதியிருக்கிறது...
தேவனால் எப்படி கலங்கி
கண்ணீர்விட  முடியும்?
#அது இயேசுவின் மனுஷத்துவத்தின் தன்மை,அதனால் தான் அவர் கண்ணீர்விட்டார்...

#அதே இயேசு கல்லரையை நோக்கி
 லாசருவே, வெளியே வா என்று,உரத்த சத்தமாய்க் கூப்பிட்டவுடன்(யோ 11: 43)
மரித்து நான்குநாள் ஆகி நாறிப்போயிருந்தவன்,நலமாகி  உயிரோடு எழுந்து வந்தான்

#இது இயேசுவின் தேவத்துவத்துவ தன்மை

இயேசு தமது சீஷர்களோடு படவில் ஏறி, கடலின் அக்கரை நோக்கி செல்வோம் என்று சொல்லி, படகு  ஓடிக்கொண்டிருக்கையில்
#இயேசு நித்திரையாயிருந்தார் (லூக்கா 8: 22-33) என்று எழுதியிருக்கிறது....

இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.(சங் 121: 3-4)
வேதம் சொல்கிறதே...
ஆனால் இயேசு உறங்கினாரே ?
தேவனால் எப்படி உறங்க முடியும் சொல்லு அந்தோனி ?

அந்தோனி: அதான் எனக்கு புரியல !!!

பீட்டர்:(சிரித்தபடி)அங்கே இயேசுவின் மனுஷத்துவ தன்மை வெளிப்பட்டது

அந்தோனி: ஓ.. அப்படியா ?

பீட்டர்: சுழல் காற்று உண்டாகி கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு படகு மூழ்கும் நிலை ஏற்பட்டபோது... நித்திரையிலிருந்த அதே இயேசுவை சீஷர்கள் எழுப்பினார்கள்...
அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய்,, அமைதலுண்டாயிற்று.....(லூக் 8: 24) காற்றும்,ஜலமும் இவருக்கு கீழ்படிகிறதே என்று சீஷர்கள் ஆச்சரிப்பட்டார்கள்...

#இது இயேசுவின் தேவத்துவ தன்மை,
இன்னும் என்னால் பல உதாரணங்களை வேதத்திலிருந்து கொடுக்க முடியும்... அந்தோனி...

அந்தோனி: இந்த வசன விளக்கமே எனக்கு தெளிவா புரிஞ்சிருச்சு பீட்டர்...
அப்ப, மரியாள் இயேசுவின் மனுஷத்துவத்துக்கு தான் தாய்... தேவத்துவத்துக்கு தாய் அல்ல... சரிதானே ?

பீட்டர்: ஆமா நண்பா சரிதான்..

#இயேசுவின் மனுஷத்துவத்துக்கு
தாய் உண்டு,தந்தை இல்லை

#இயேசுவின் தேவத்துவத்துக்கு
தந்தை உண்டு தாய் இல்லை...

இயேசுவின் மனுஷத்துவத்தையும்,
தேவத்துவத்தையும்... குழப்பிக்கொள்ள கூடாது... பரிசுத்த ஆவியானவரின் துணையோடு வேதாகமத்தை படித்து புரிந்தது கொள்ளவேண்டும்

=======================

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

No comments:

Post a Comment