Friday 15 April 2016

(14) தள்ளுபடி ஆகமங்கள் தேவனுடைய ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டதா ?

#தனித்துவ பதிவு

தள்ளுபடி ஆகமங்கள்
( THE APOCRYPHAL BOOKS)

பீட்டர்: பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களுமே  மனிதகுலத்துக்கு தேவனால் அருளப்பட்ட சத்திய வார்த்தைகள்

அந்தோனி: அப்ப எங்க, திருவிவிலியத்தில் உள்ள 9  புத்தகங்களாகிய,தோபித்து,யூதித்து,
பாரூக்கு, சீராக்கின் ஞானம்,
சூசன்னாவின் வரலாறு, பாகாலும் வலுசர்ப்பமும்,1மக்கபேயர்
2மக்கபேயர்,etc.. etc..ஆகிய நூல்கள் தேவனால் அருளப்பட்ட சத்திய வார்த்தைகள் இல்லையா ?

பீட்டர்: ஆமா, அந்தோனி,
தள்ளுபடி ஆகமங்கள் தீர்கதரிசனம் இல்லாத இருண்ட காலத்தில் எழுதப்பட்டவைகள்,பழைய, புதிய ஏற்பாட்டு நூல்களுக்கு இடையில் சுமார் 300 ஆண்டு காலம் இருண்ட காலமாகவே கருதப்பட்டது,அப்போது இவைகள் எழுதப்பட்டிருக்கிறது, இந்த ஆகமங்கள் பரிசுத்தாவியின் ஏவுதலால் எழுதப்படவில்லை என்று ஆதிகால வேதபண்டிதர்களாகிய ஒரிஜன், ஜெரோம், டட்டுலியன், ஜெருசலேம் சிறில், தேர்ட்டுலியன் மற்றும் ஆத்ரசியஸ் போன்றவர்கள் இவைகளுக்கு எதிராக பேசி புறக்கணித்து இருந்தார்கள் ஆனால் அதையும் மீறி 1546 ல் டிரென்ட் ஆலோசனைக்கூட்டத்தில்,
 ரோமன் கத்தோலிக்க சபை இந்த ஆகமங்களை விவிலியத்திற்குள் இடைசொருகியது..

அந்தோனி: அப்படியா !!!

பீட்டர்: ஆமா அந்தோனி,தள்ளுபடி ஆகமங்களை எழுதிய ஆசிரியர்கள் எவரும் தெய்வீக ஏவுதலை தெரிவிக்கவில்லை, சிலர் இதனை மறுக்கின்றனர். (உதாரணமாக:
1 மக் 4 :46 ,11 மக் 2:23, 15 , 38 )

#கி.மு.2000ம் ஆண்டுவாக்கில் எழுதப்பட்ட இந்த தள்ளுபடி ஆகமங்கள் தேவ ஆவியானவரின் தூண்டுதலால்
எழுதப்படவில்லை என்பதற்கு இன்னும் பல சான்றுகள் உள்ளன

#வேதத்தில் சொல்லப்பட்ட தரமான உபதேசங்களுக்கு மாறாக சில பொய்யான உபதேசங்களை இந்த தள்ளுபடி ஆகமங்கள் உபதேசிக்கின்றது ( தற்கொலை, தாக்குதல், மரித்தோருக்கான ஜெபம் போன்ற காரியங்களை இது  நியாயப்படுத்துகின்றது)
தேவனுடைய வார்த்தையின் ஆதாரம்
இல்லாத,சில கத்தோலிக்க  உபதேசங்களை இந்த இடைசொருகல்
ஆகமங்கள் ஆதரிப்பதால்
இவைகளை விவிலியத்தோடு இணைத்திருக்கிறார்கள்

#புதிய ஏற்பாட்டு நூல்களில் எந்த நூல்களிலும்,இந்த தள்ளுபடி ஆகமங்களிலிருந்து எந்த ஒரு குறிப்பும்
எடுத்துச் சொல்லப்படவில்லை

#குறிப்பாக இயேசு கிறிஸ்துவோ,ஆதி அப்போஸ்தலர்களோ,எந்த ஒரு இடத்திலும் இந்த ஆகமங்கள் அடங்கிய நூல்களிலிருந்து ஒன்றையும் மேற்கோள் காட்டவே இல்லை

#பழைய எபிரேய வேதாகமத்தில் ஆதியாகமம் முதல்நூலாக  வரிசைப்பட்டிருந்தது ஆபேலின் இரத்தம் முதல்..... சகரியாவின் இரத்தம் வரை (மத் 23:34,35)  என்ற இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆபேல் ஆதி நூலில் இருந்து எடுக்கப்பட்ட கதாப்பாத்திரம். அப்படியே சகரியா
2 நாளாகமத்தில் இருந்து எடுக்கப்பட்ட நபர். (இயேசுவும் இந்த வரிசையை அங்கீகரித்தக் காரணத்தால்)
இந்த வசனத்தின்படி பார்த்தால்
மக்கபேயர், பாரூக்கு,யூதித்து,.. etc...etc..
ஆகிய தள்ளுபடி ஆகமங்கள் இயேசு கிறிஸ்துவால் ஏற்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது..

அந்தோனி: ஓகே.. இயேசு ஏற்கவில்லை அப்ப இந்த தள்ளுபடி ஆகமங்களை யூதர்களாவது ஏற்றுக்கொண்டு இருக்கிறார்களா ?

பீட்டர்: அதுவும் இல்லை, யூதர்கள்,ஏற்றுக்கொண்டது,பழைய ஏற்பாடாகிய 39 புத்தகங்களையே... தள்ளுபடி ஆகமங்களை அவர்கள் நிராகரித்தார்கள்... எல்லா யூதரும் 39 நூல்களை மட்டுமே ஏற்றுள்ளனர்.
அவைகள்.....

#சட்டநூல்கள்: தொடக்கநூல்கள், விடுதலைப்பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச்சட்டம் (5)

#இறைவாக்கு நூல்கள்: முன்னைய இறைவாக்கினர் (6), யோசுவா,நீதித்தலைவர்கள், 1,2 சாமுவேல், 1,2 அரசர்கள் பின்னைய இறைவாக்கினர் (15):

பெரிய இறைவாக்கினர்: எசாயா, எரேமியா, எசேக்கியேல்.*பன்னிரு சிறிய இறைவாக்கினர்: ஓசியா முதல் மல்கியா வரை.

இலக்கியம் (அறிவுரை நூல்கள் (13)
திருப்பாடல்கள், நீதிமொழிகள், யோபு, இனிமைமிகு பாடல், ரூத்து, புலம்பல், சபை உரையாளர், எஸ்தர், தானியேல், எஸ்ரா,நெகேமியா, 1,2 குறிப்பேடு.
ஆக மொத்தம் 39

#ஜெமினியாவில் 90 கி.பி யில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் யூதர்கள் தள்ளுபடி ஆகமங்களை, ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த புத்தகங்களில் பொய்யான வரலாறும், இடங்களும், தவறான வருடங்களும், உண்மையற்ற கட்டுகதைகளும் காணப்படுகின்றதாக அவர்கள் அவைகளை நிராகரித்தார்கள்...

அந்தோனி: அடப்பாவிகளா ! யூதர்களை விடு, இயேசுவும்,அப்போஸ்தலர்களும், அங்கிகரிக்காத  இப்படிப்பட்ட இந்த தள்ளுபடி ஆகமங்களை எப்போது, விவிலியத்தில் ரோமானிய சபையினர் இணைத்தார்கள் பீட்டர் ?

பீட்டர்: கிபி1512- மார்ட்டின் லூத்தர் கத்தோலிக்க சபையை விட்டு வெளியே வந்தார்... அக்கலத்தின் சபை பாதரியார்கள் மட்டுமே வாசிக்க அனுமதி பெற்ற,பரிசுத்த வேதாகத்தை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து.. மக்கள் மத்தியில் வினயோகித்தார்... இதனால் மிகப்பெரிய எழுப்புதல் ஏற்பட்டது...
பிறகு வேதாகமம் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு... அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் சென்றடைந்தது... அதுவரை விவிலியத்தில் இந்த 9 ஆகமங்கள் சேர்க்கப்படவில்லை

அந்தோனி: அப்ப ஆரம்பத்திலிருந்த விவிலியம் 66 புத்தங்களை மட்டும்தான் கொண்டிருந்ததா ? இடையில தான் இந்த 9 ஆகமங்களை ரோமன் கத்தோலிக்கர்கள் உள்ளே இணைத்தார்களா ? என்ன கொடுமை இது ?

பீட்டர்: ஆமா நண்பா ஆதிகாலத்திலிருந்து விவிலியம்
66 புத்தங்களை மட்டும்தான் கொண்டிருந்து, கிபி 1546 ம் ஆண்டுதான் இந்த தள்ளுபடி  ஆகமங்களை ரோமன் கத்தோலிக்க சபை விவிலியத்திற்குள் இணைத்து
மொத்தம் 75 புத்தகமாக ஆக்கியது.

அந்தோனி: அடப்பாவமே!

பீட்டர்: அந்தோனி,சீர்திருத்த சபைகள்
மட்டுமே,ஆதி திருச்சபையிலிருந்த அந்த 66 ஆகமங்களை பரிசுத்த வேதாகமாக கொண்டுள்ளது...
அதுமட்டுமே மனிதகுலத்துக்கு தேவனால் அருளப்பட்ட சத்திய வார்த்தைகள், மற்ற 9 ஆகமங்களும் தேவ ஆவியானவரின் தூண்டுதலில் எழுதப்படவில்லை, இயேசு கிறிஸ்துவும்,அப்போஸ்தலர்களும்
அங்கீகரிக்காத இந்த தள்ளுபடி ஆகம நூல்கள் நமக்கும் தேவைதானா?

அந்தோனி: நிச்சயம் தேவையில்லை
தேவ வார்த்தையோடு ஒன்றை கூட்டவோ, குறைக்கவோ நமக்கு அதிகாரம் இல்லையே.(வெளி 22:18,19) அப்படிச் செய்தால் நித்திய வாழ்வும் நமக்குப் பறிபோகுமே.

பீட்டர்: அதுமட்டுமல்ல தேவன் மனுகுலத்துக்கு அருளியதே 66
நூல்கள் தான்,அதற்கு மிஞ்சி நாம்ம இஷ்டத்துக்கு எதையும் கூட்டவோ, குறைக்கவோ கூடாது, அவைகள் நம்மை நிச்சயம் நரகத்தை நோக்கி நடத்திவிடும்... தற்கொலை, தாக்குதல், நற்கிரியை மட்டும் செய்தால் போதும் மீட்படையலாம், மரித்தோருக்கான ஜெபம், போன்ற காரியங்கள் கிறிஸ்தவ உபதேசமா ? பல ஆயிர ஆண்டுகளாக வேதாகமத்தில் இல்லாதததை இடையில் வந்து சொருகி மக்களை சாத்தான் வஞ்சித்து கொண்டிருக்கிறான்..
எச்சரிக்கை !!!

=======================

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

1 comment: