Friday 8 April 2016

தனித்துவ செய்தி

#எண்ணங்களை சீர்படுத்துவோம்

நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாய் இருக்கிறோம்.
(2கொரிந்தியர் 10: 5)

பரத்: அப்போஸ்தலனாகிய பவுல் இங்கே இவ்வாறு எழுதுகிறார், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும்....
என்று அதாவது தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் இருப்பது மனிதனின் மேட்டிமை தான்
மேட்டிமை எண்ணம் கொண்ட
ஒருவன் தேவனை அறிகிற அறிவில் வளர முடியாது...

பிரவீன்: ஒரு மனிதன்,தேவனுடைய வசனத்திற்கு தன்னை தாழ்த்தி, கீழ்படிந்து அவற்றை சந்தேகம் இல்லாமல் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் போதுதான் அவன் இரட்சிப்பை பெற முடியும்,அதேபோல்
அவன் தேவனை அறிகிற அறிவில் வளரவும்,தேவ வசனத்திற்கு கீழ்படிதல்,
முக்கியம் அவசியம், வசனத்தை ஏற்க மறுப்பவன் இரட்சிப்படையவோ, தேவ ஞான அறிவில் வளரவோ முடியவே முடியாது...

பரத்: ஆமா நண்பா! தாழ்மை இல்லாத இடத்தில் மேட்டிமை நிச்சயம் இருக்கும்,
 அப்:பவுல் அடுத்ததாக இவ்வாறு சொல்கிறார்....
"எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாய் இருக்கிறோம்"..... என்று....

பிரவீன்: ஆமா எண்ணத்திலிருந்து தான் செயல் பிறக்கிறது.. அதாவது நல்ல எண்ணங்களிலிருந்து நல்ல செயல்களும்,தீய எண்ணங்களிலிருந்து தீய செயல்களும் பிறக்கிறது...
ஒரு மனிதன் பாவ செயல் செய்வதற்கு முன்,அவன் மனதில் முதலில் பாவ எண்ணங்கள் ஓடியிருந்திருக்கும்....
அந்த எண்ணங்களின் கட்டுப்பாட்டு மீறலே பாவ செயலாக வடிவம் பெறுகிறது....

பரத்: சரியாக சொன்ன பிரவீன்,
 இந்த உலகத்தில்,முதன்முதல் பாவம்
பிரவேசித்த சம்பவத்தை,சற்று பகுத்து ஆராய்ந்து பார்த்தால் நமக்கு நன்றாக புரியும்...நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை, ஏவாளுக்கு சாத்தான் காண்பித்தான்.அவளை சிந்திக்க வைத்தான். அந்த சிந்தையிலே ஒரு இச்சையை கொண்டு வந்தான். அதுதான் பாவ எண்ணம். அந்த விருட்சம், புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமாயிருக்கிறது என்று அவள் கண்டாள். பாவம், சிந்தையில்தான் உருவாகிறது. அதை ஒருவன் சிந்தித்து சிந்தித்து, யோசிக்க யோசிக்க பாவம் செய்ய தூண்டப்படுகிறான்..

பிரவீன்: ஆமா நண்பா, தேவனுடைய வார்த்தைகளை மீறி,அவரின் வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் போவதே பாவ செயலாகும்.. இதை செய்ய வைக்க தான் சாத்தான் ஆர்வமாய் சுற்றித்திரிகிறான்..
அதற்கு முதலின் பாவ,சாப,அவிசுவாச,
வியாதியின் எண்ணங்கள் போன்ற இருளின் எண்ணங்களை மனிதனின் உள்ளத்தில் உள்ளிடாக கொடுத்து,
அது பாவ செயலாக வெளியீடாக வர எதிர்பார்க்கிறான்....

பரத்: ஆமா, உலகத்தனமான மனிதர்கள் சாத்தானின் தந்திரங்களை அறியாமல் அவனின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட்டு பாவத்திற்கு, அடிமையாக தங்கள் ஆத்துமாக்களை சேதப்படுத்துகிறார்கள்,அவர்களால் அந்த பாவ எண்ணத்தின் ஆளுகையிலிருந்து மீண்டு வர முடியவில்லை...ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்ட  ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள்,சாத்தான் கொண்டுவரும் எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படித்தி  சிறைப்படுத்துகிறவனாய் இருக்கின்றார்கள்... அவர்கள் எப்படிப்பட்ட மோசமான எண்ணத்திற்கும்,சூழ்நிலைக்கும் அடிமைபடாமல் கிறிஸ்து இயேசுவுக்குள் மிகவும் இலகுவாக அதிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள்....

பிரவீன்: நாம் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம்... நம் எண்ணங்களை கட்டுப்படுத்த முடியாத உலகத்தனமான நிலையிலா ? இல்லை எந்த எண்ணமாக இருந்தாலும் அதை கிறிஸ்துவுக்குள் சிறைப்படுத்தி கட்டுப்படுத்துகிற ஆவிக்குரிய நிலையிலா ?  நாம் இதுவரை எந்த நிலையில் இருந்தாலும் சரி இனிமேல்
தேவனுடைய வசனங்களுக்கு ஏற்ப
நம் எண்ணங்களை சீர்ப்படுத்துவோம்,
வேண்டாத எண்ணங்களை கிறிஸ்துவுக்குள் சிறைப்படுத்துவோம்

ஆமென்... அல்லேலூயா....

=======================

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

நமது அனுதின நற்செய்திகளை எல்லோருக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு
உங்கள் WhatsApp-லிருந்து  +919025385098 என்ற எண்ணுக்கு
“Need Daily Good News  ”
என்று Message அனுப்பவும்

No comments:

Post a Comment