Tuesday 26 April 2016

(15) கத்தோலிக்கம் அனேகர் செல்லும் விசாலமான வழிகளில் ஒன்று

#தனித்துவ செய்தி

கத்தோலிக்கம் அனேகர் செல்லும்
விசாலமான வழிகளில் ஒன்று

அந்தோனி: நண்பார்களே, கத்தோலிக்கம் இந்த உலகத்தில் எப்படி இவளவு விசாலமா பரவியது ? ஏன்னா உலகத்துலயே அனேகர்  கத்தோலிக்கர்களாக தான  இருக்கிறாங்க  ?

பீட்டர்: சொல்றேன் நண்பா,
எருசலேமை தலையிடமாக கொண்ட ஆதி திருச்சபை பல்வேறு உபத்திரத்தினால் துன்ப படுத்தப்பட்டது ஆனா உபத்திரம் எவ்வளவு தூரம்  பெருகினாலும் சபையோட வளர்ச்சி, கிறிஸ்தவர்களின் எழுச்சி  குறையவில்லை. ஆரம்பத்தில்
ரோம சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த மக்கள்தொகை சுமார் 120 மில்லியன்
(12 கோடி) என்று கணக்கிடுகின்றனர். இதில் பாதிப்பேர், அதாவது 60 மில்லியன்(6கோடி) கிறிஸ்தவர்கள் என்று குறிப்பு கூறுகிறது.

ஜான்: ஆமா சாத்தான் திருச்சபையை உபத்திரவத்தினால் அழிக்கமுடியாது என்று கண்டுகொண்டான்.அதனால  கிறிஸ்தவர்களை காலிபண்ண பிசாசு அதிக நயவஞ்சனையான முறையைக் கையாண்டான்; கிறிஸ்தவர்களைக் கொண்டே கிறிஸ்தவத்தை அழிக்கத் திட்டமிட்டான். அதாவது போலி கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்துக்குள் இணைத்து கிறிஸ்தவ சத்திய உபதேசத்தை சீர்குலைக்கும் வேலையை தெடங்கினால்...

அத்தோனி: அதனாலதான் வேதத்தில் இல்லாத பற்பல உபதேசங்கள் கத்தோலிக்கத்தில் இருக்கிறதா ?

பீட்டர்: ஆமா ஆந்தோனி,ரோமப் பேரரசரான கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவர்களின் உறுதியையும், உண்மையையும் கண்டு பிரமித்தான். அவன்,கிறிஸ்தவனானான்
கி.பி.324 ல் அரசாங்கத்தையும், திருச்சபையையும் ஒன்றாக இணைத்தான். திருச்சபைக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஏராளமான சலுகைகளை அள்ளி வழங்கினான்; சபைப் போதகர்களுக்கு ஆலயங்களைக் கட்டுவதற்கு அரசாங்க கருவூலத்திலிருந்து ஏராளமான பணம் கொடுக்கப்பட்டது. கிறிஸ்து மார்க்கம் அரசாங்க மார்க்கமாயிற்று. சபைத் தலைவர்களுக்கு'பசிலிக்கா
'(BASCILICA) என்ற மிக ஆடம்பரக் கட்டிடங்கள் வழங்கப்பட்டன. இதிலே மதமாற்றங்களுக்கான சடங்குகள் நடைபெற்றன.

அந்தோனி: அப்படியா அப்ப அரசாங்க சலுகை பெற ஏராளமான மக்கள் கிறிஸ்தவர்களாக மாறிருப்பாங்களே !

ஜான்: ஆமா,கிறிஸ்தவர்களுக்கு இதுவரை இருந்த உபத்திரவம் நீங்கி, கிறிஸ்தவனாயிருப்பது பெரிய அதிஷ்டமாக ஆனது திரளான மக்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினர்,ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்டு மனம் மாறவில்லை
அரசாங்க சலுகைகளைப் பெறவும், உயர் பதவி பெறவும்,அனேக மக்கள் கிறிஸ்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி காட்ட  மாறினார்கள்.பணத்திற்காக, வசதியான வாழ்விற்காக ஏகப்பட்ட பேர்  சபைப்போதகர்களாக மாறினர்.

அந்தோனி: அடப்பாவிகளா ?

பீட்டர்: இதானால சபையில
பரிசுத்த ஆவியின் வல்லமை விட
பண வல்லமையையே மக்கள் விரும்பினார்கள்,பிரசங்க முறைகள் சொற்பொழிவுகளாக மாறின;
வேத வசனம் மறக்கப்பட்டது.இதனால்
சபைகள் முழுவதும் மனந்திரும்பாத மக்களால் நிறைந்தது.சபையின் எல்லா பணத்தேவைகளும் அரசாங்கத்தால் பூர்த்தி செய்யப்பட்டன. அநேக பிற மத வழிபாட்டுத்தலங்கள் கிறிஸ்தவ ஆலயங்களாக்கப்பட்டன. பிற மதத்தினரை சபைக்குக் கொண்டுவர அவர்களின் பழக்கவழக்கங்களை சபைக்குள் கொண்டுவந்தனர். பிற மதத்திலிருந்த சகல மூடப்பழக்க வழக்கங்களும் சபையின் சடங்குகளாய் மாறின. இதனால உலகமெங்கும் இந்த கலப்பட உபதேசம் மக்களால் எளிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்தோனி: ஆமா,கண்டிப்ப ஏற்றுக்கொளுவாங்க, ஏன்னா,
தாங்கள் வழிபடுகிற விக்கிரகங்கள்,தாங்கள் வழிபடுகிற தேவதைகளை,பெயரை மற்றும் மாற்றி இதை வழிபடுங்கள்,இதுதான் கிறிஸ்தவம்,இதற்கு அரசாங்க சலுகைகளும் உண்டு அப்படினு சொன்னா, மெய் தேவனை அறியாத புற ஜாதி மக்கள்,கண்டிப்பா இந்த மார்க்கத்தை ஏத்துகிடுவாங்க..

ஜான்: பிறகு காலங்கள் செல்ல செல்ல, வேதத்தின் அடிப்படை சத்தியங்கள் போதிக்கப்படவில்லை; எனவே எவை அடிப்படை சத்தியங்கள், எவை கிறிஸ்தவ உபதேசத்திற்கு முரண்பட்டவை என்பதை மக்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இயேசுவின் திருச்சபை என்ற பெயரில்,
எல்லா விதமான புற மத பழக்கத்தாலும், மூடப்பழக்க வழக்கங்களாலும் நிறைந்த விசாலமான கத்தோலிக்க மார்க்கத்தில்  அனேகர் இருக்கிறார்கள்,

அந்தோனி : ஓ... இதனாலதான் இயேசு கிறிஸ்து மத்தேயு 7: 13 இவ்வாறு சொன்னாரா ?
"கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்"

பீட்டர்: ஆமா அந்தோனி,உலகம் முழுவதும்,கத்தோலிக்க,இஸ்லாமிய,போட்ட மதத்து மக்களே அதிகம்,ஏனென்றால் கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்"

ஜான்: ஆனா,ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
(மத்தேயு 7: 14) இடுக்கமான,
நெருக்கமான, வாசல்வழியாய் பிரவேசித்தவர்கள் அதாவது, கண்களுக்கு முன் இருக்கிற  உலகத்துவ காரியங்கள்,மதங்கள்,
வழிபாட்டு முறைகள் என்னும் விசால வழியை விட்டுவிட்டு,கண்களால் காணமுடியாத ஆவிக்குரிய காரியங்களை பரிசுத்த வேதாகமம் வழியாய் பகுத்தறிந்து,ஜீவனுக்கு செல்லும் அந்த ஒரே வழி யார் என்பதை கண்டுபிடித்து நடப்பவர்கள்.
ஆவியில் புதிதாய் பிறந்து,வேதாகம வார்த்தைகளை மட்டும் பின்பற்றும் கிறிஸ்தவர்கள், இவர்களின் எண்ணிக்கை உலகில் குறைவாக தான் இருக்கும் இவர்களே நித்திய ஜீவனை அடைவார்கள்...

அந்தோனி: இப்ப எனக்கு நல்ல புரிஞ்சிருச்சுமா,ஏன் இந்த கத்தோலிக்கம் இப்படி விசாலமாக,
 உலகத்திலுள்ள,அனேக மக்களால் நிறைந்து இருக்குனு.... ஏன்னா
கேட்டுக்குப்போகிற வாசல்தான் விசாலமா இருக்கும்.

"ஜீவனுக்குப்"போகிற வாசல் இடுக்கமும்,வழி
நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
(மத்தேயு 7: 14)

 நானே வழியும் சத்தியமும் "ஜீவனுமாயிருக்கிறேன்" என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
(யோவான் 14: 6)

=======================

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in








No comments:

Post a Comment