Friday 25 March 2016

#தனித்துவச்செய்தி

# இயேசு கிறிஸ்து சிலுவையில் சொன்ன ஏழு வாசகங்கள்: #பாகம்-1

பீட்டர்: ஹலோ நண்பா ஜேம்ஸ், எப்படி இருக்க ? எங்க போய்டு வர்றேன் ?

ஜேம்ஸ்: நல்லா இருக்கேன்டா, இன்னைக்கு Good Friday-ல அதான்
சர்ச்சுக்கு போய்ட்டு வர்றேன்

பீட்டர்: ரொம்ப நல்லது, இன்னைக்கு உங்க சபையில என்ன செய்தி கொடுத்தாங்க ?

ஜேம்ஸ்: வழக்கம் போல இயேசு சிலுவையில் தொங்கியபோது சொன்ன ஏழு வாசகங்களை பத்திதான் செய்தி,
அதுல எனக்கு நெறய கேள்விகள் இருக்குடா, நீ இப்ப Free யா இருந்தா எனக்கு அந்த ஏழு வசனங்கள் பற்றி கொஞ்ஜம் brief explain பண்றாயா ?

பீட்டர்: Oh! Sure நண்பா, நான் ஒவ்வொரு வாசகத்தையும் Explain பண்றேன்

ஜேம்ஸ்: OK நண்பா சொல்லு...

பீட்டர்: சொல்றேன் 1)“பிதாவே, இவர்களுக்கு மன்னியும்,தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே”
 (லூக்கா 23:34)
ஒரு சிறு குழந்தை தவறு செய்யும்போது அறியாமல் செய்து விட்டது என்பதை போல்  சொல்லி, சுலபமாக நாம்
மன்னிப்பதுபோல, இயேசு தம்மை கொடூரமான சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். அதுமட்டுமல்ல அவர்கள் செய்கிறது
இன்னதென்று அறியாமல்
செய்துவிட்டார்கள் இவர்களை மன்னியும் என்று பிதாவை நோக்கி வேண்டுகிறார்...

ஜான்: இந்த இடத்துலதான் எனக்கு ஒரு doubt இருக்கு நண்பா ! இயேசுவின் கொலைக்குக் காரணமாக இருந்த ரோம அதிகாரிகளும், யூத மக்களும், அவரை சிலுவையில் அறைந்த போர்ச் சேவகர்களும் எப்படி இதை "அறியாமல்"
செய்திருக்க முடியும் ! அவர்கள் அறிந்தே தான் செய்தார்கள்,ஏன்னா அந்த நாட்டிலேயே  மிகக்கொடூரமான குற்றவாளியான பரபாஸ் என்கிறவனை  விடுதலையாக்க சொல்லி, நன்மைகளை மாத்திரம் செய்துவந்த இயேசுவை துன்பப்படுத்தி கொலை செய்கிறார்கள்,எப்படி அவர்கள் தெரியாமல், அறியாமல்
செய்வார்கள்.... ! ஆனால் இயேசு அவர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்கிறாரே ? எப்படி ?

பீட்டர்: இல்லா நண்பா அவர்கள் அறியாமல்தான் செய்தார்கள்
உண்மை என்னவென்றால்,
அன்றைக்கு நடந்தது "இயற்கைக்கு அப்பாற்பட்ட" ஒரு காரியம்.
இருளின் சக்திகள் இந்த மனிதர்களுடைய மனக்கண்களைக் குருடாக்கி,அவர்களது இருதயத்தைக் கடினப்படுத்தி,இப்படி ஒரு கொடூரச்செயலைச் செய்ய ஏவின.
தங்களுடைய சுயபுத்தியின்படி
செயல்படுகிற எவரும் இப்படி ஒரு நல்ல மனிதரைக் கொடூரமாகச் சிலுவையில்
அறைய மாட்டார்கள். ஆகவேதான் இயேசு, ‘இவர்கள் செய்வது
என்னவென்று தெரியாமல்
செய்துவிட்டார்கள்’ என்று
சொல்லி மன்னிக்கிறார்.

அது மட்டுமல்ல ஜேம்ஸ், இந்தச் சம்பவம்"கடவுளுடைய சித்தத்தின்படி
"நடந்தது என்று வேதம் கூறுகிறது.
 இவரை சிலுவையில் அறைந்த கைகள் மட்டும்தான் அக்கிரமக்காரரின் கைகள் என்றும்,இதற்கான திட்டமும், தீர்மானமும் கடவுளுடையது
மனு குலத்தின் பாவத்திற்கு
இயேசுவைச் சிலுவையில் பலியாக்கக் கடவுள் சித்தம் கொண்டிருந்தார். ஆகவே தான் இந்தச் சம்பவம் நடந்தது.

ஜேம்ஸ்: Oh!  ஆமா Correct தான் சரி, அடுத்த வாசகத்தை Explain பண்ணு நண்பா

பீட்டர்: OK டா  2)“இன்றைக்கு நீ என்னுடனே கூடப்பரதீசிலுருப்பாய்”
(லூக்கா 23:43) இரண்டு திருடர்களுக்கிடையே இயேசு சிலுவையில் தொங்கினார்.
இவர்கள் இருவரும் இரண்டு விதமானவர்கள் என்பதை நாம் கவனிக்கனும் அதில் ஒருவன் இந்த நல்லவருக்கு நேர்ந்த
கொடுமையைப் பார்த்து,
அவர் யார் என்பதையும், இது ஏன்அவருக்குச் சம்பவித்தது என்பதையும் புரிந்துகொண்டு, அவனது
மரணத் தறுவாயில் மனம்
திரும்புகிறான்.

இன்னொருவனோ, வாழ்நாள்
முழுவதும் குற்றம் செய்தது
மட்டுமல்லாமல், சாகும்போதும்
திருந்தாமல் தன் இருதயத்தைக்
கடினப்படுத்திக்கொண்டு,
“நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள்”
என்று இகழ்ந்து பேசி, மேலும் குற்றம் செய்கிறான்.

இதைக் கண்ட அடுத்தவன் அவனைக்கடிந்துகொண்டு,
நீ இந்த தண்டனைக்கு உட்பட்டவனாய் இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்;
நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனைஅடைகிறோம்;
"இவரோ தகாததொன்றையும்
நடப்பிக்கவில்லையே" என்று இயேசுவுக்காய் மனம்வருந்துகிறான்..
அது மட்டுமல்லாமல், “ஆண்டவரே, நீர்
உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்”
என்று இயேசுவிடம் கூறினான். அவனது உள்ளத்தின் எண்ணங்களை இந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. தான் பாவி என்றும்,சாகும் முன்பு கடவுளின் இரக்கத்தையும் மன்னிப்பையும்
பெற வேண்டும் என்றும் அவன் உணருகிறான். மேலும் இயேசு
"குற்றவாளியாக" மரிக்கவில்லை
என்பதையும், மனுக் குலத்தின்
"பாவத்திற்காக" மரிக்கிறார்
என்பதையும் இவன் புரிந்துகொண்டான் அது மட்டுமல்லாமல், இயேசு இரட்சகர் என்றும், சிலுவையில் மரிக்கிற இவர்
ஒருநாள் அரசாளுவார் என்றும்,அந்த ராஜ்யத்தில் அவரோடுகூடத்தானும்
இருக்க வேண்டுமென்றும் இவன் விரும்புகிறான்.அதையே இயேசுவிடம்  வெப்படுத்தியும் காண்பிக்கிறான்...

#இப்படி தன்னுடைய வாழ்க்கையில்
திருந்தும்படியாக அவனுக்குக்
கொடுக்கப்பட்ட அந்தக் "கடைசி வாய்ப்பை"இவன் சரியாகப் பயன்படுத்திக் கொண்டான்.
பாவ மன்னிப்பைப் பெற்று,
மோட்சத்திற்குத் தகுதியுள்ளவனாகிவிட்டான்.

#இன்னொருவனோ,அவனுக்கு மரணத் தறுவாயில் கொடுக்கப்பட்ட "இறுதி வாய்ப்பையும்" கூடத்தவற விட்டுவிட்டான்.இன்றைக்கும் மனிதர்கள் இப்படி "இரண்டு"
விதமாகத்தான் இருக்கிறார்கள் என்பதை இந்த இரண்டு மனிதர்கள் மூலம் நாம் காண முடிகிறது.
இந்த மனிதர்களுக்கு நடுவேதான்
இயேசு சிலுவையில் தொங்கினார்.

ஜான்: Super explanation... நண்பா...
Continue பண்ணு....

பீட்டர்: Glory to Jesus... அடுத்து மூன்றாவது வாசகம்.. 3)“இயேசு தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே,அதோ, உன் மகன் என்றார்.
பின்பு அந்தச்சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்”
(யோவான் 19:26-27).

இயேசு பிறப்பதற்கு முன்னரே, இவர் உலக இரட்சகர் என்பதை தேவதூதன் உலகத்திற்கு அறிவித்திருந்தான்.
மேலும், சிலுவையின் கோர மரணத்தின் மூலமாகத்தான் இவர் உலகத்தை இரட்சிப்பார் என்பதை சிமியோன் என்னும் ஒரு மனுஷன்,
“உன் ஆத்துமாவை ஒரு
பட்டயம் உருவிப்போம்” என்று
தீர்க்கதரிசனமாக மரியாளுக்கு
அறிவித்திருந்தார். இதெல்லாம் அறிந்தவளாகத்தான் இயேசுவின் தாயாகிய மரியாள் சிலுவையின் அருகில் நின்றிருந்தாள்.

ஜான்: ஆமா... அதனால்தான் மரியாள்  மார்பில் அடித்துக்கொண்டு ஓலமிட்டு,
ஒப்பாரி வைக்கவில்லையோ !

பீட்டர்: ஆமா நண்பா !  இவைகள் எல்லாம் கடவுளின் சித்தப்படி நடக்கிறது என்பதை நன்கு அறிந்திருந்தாள்,
இயேசுவும்,அந்த வேதனையின் நேரத்தில்கூடத் தன்னுடைய தாயின் எதிர்காலப் பராமரிப்பிற்குத்
தேவையானதைச் செய்தார்.
சிலுவையில் தொங்கும்போது கூட,
“உன் தகப்பனையும் தாயையும்
கனம்பண்ணுவாயாக” என்ற
கட்டளையின்படி தன் தாயை
யோவானிடத்தில் ஒப்படைத்தார்.
இதான் மூலம் இயேசு கடவுளுடைய கற்பனைகளைக்கைக்கொள்ளத் தவறவில்லை என்பதையும், நாமும் நம்முடைய பெற்றோரைக் கனப்படுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

ஜான் : நான்காவது வாசகம்
4 )“ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்”
(மத்தேயு27:46). Correct டா ?

பீட்டர்: Correct தான்....ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்பதற்கு “என் தேவனே!
என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று அர்த்தமாகும்..

ஜான் : இந்த வசனத்திலயும் எனக்கு ஒரு Doubt இருக்கு பீட்டர், நல்ல காரியங்களுக்காக உயிரை விட்ட ஏகப்பட்ட மகான்கள் தைரியத்தோடும்,
சந்தோஷத்தோடும் தங்கள் உயிரை விட்டார்கள் என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால் இயேசு மட்டும் ஏன் இப்படி மிகுந்த சத்தமிட்டுக்கதற வேண்டும் ? கடவுளுடைய சித்தத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு மரிக்க வேண்டியதுதானே ? அப்படினு நான் கேட்கலப்பா சில இந்து நண்பர்களும்,இஸ்லாமிய நண்பர்களும் கேட்குறாங்க.....

பீட்டர்: கண்டிப்பாக இதற்கு நாம் அவர்களுக்கு சரியான விளக்கத்தை கொடுத்து புரியவைக்க வேண்டும்...

#இயேசு கிறிஸ்துவின் மரணத்தை போல் உலகத்தில் எவரும் இதுவரை இப்படிப்பட்ட ஓர் "கோரமரணத்தை" அனுபவித்ததில்லை,
அனுபவிக்கப்போவதுமில்லை. ஏனென்றால்....

#உலகத்தின் பாவம் முழுவதும் அவர்மீது அன்றைக்கு சுமத்தப்பட்டது.
அந்தப்பாவத்திற்கான தண்டனையையும் அவர் தம்மீது ஏற்றுக்
கொண்டார். இது எவருமே அறிந்திராத
சொல்லமுடியாத மிகப்பெரிய வேதனையை அவருக்குத்தந்தது.

#இயேசு நித்திய நித்தியமாக கடவுளோடுகூட இருந்த தேவகுமாரன்.
ஆனால், இவர் மனுக்குலத்தின் பாவத்தை சுமந்தபோது,பாவத்தை நோக்கிப்பார்க்கக்கூடாத (ஆபகூக்1:13) சுத்தக் கண்களை உடைய தேவன் இவரிடத்தில் இருந்து தமது
முகத்தைத் திருப்பிக்கொள்ள
வேண்டியதாயிற்று.

#இது எல்லா சரீர வேதனையைக் காட்டிலும் மிகப் பெரிய வேதனையை இவருக்கு உண்டாக்கிற்று.ஆனால் இதன் மூலம் மனுக்குலத்திற்கு மிகப் பெரிய நன்மைகளும் உண்டாயிருக்கிறது.கடவுள் கொடுத்திருக்கிற வாக்குத் தத்தங்கள்
எல்லாவற்றிலும் மிகவும் மேலான வாக்குத் தத்தம்........
“நான் உன்னை விட்டு
விலகுவதுமில்லை, உன்னைக்
கைவிடுவதுமில்லை” என்கிற வாக்குத்தத்தம்தான்.

#நம்மில் ஒருவரையும் (அதாவது) இயேசுகிறிஸ்துவை விசுவசிக்கிறவர்களை கடவுள் கைவிடாமலும், விலகாமலும் இருக்க வேண்டும் என்பதால் தான்,இந்த ஒருவர் மீது நம்முடைய பாவங்கள்
எல்லாவற்றையும் சுமத்தி, இவரைச் சிலுவையில் அதன் நிமித்தம் கைவிட வேண்டியதாயிற்று. "நம்மில் ஒருவரையும் ஒருபோதும் கைவிடாமல்
இருப்பதற்காகவே கடவுள் இயேசுவைச்சிலுவையில் கைவிட்டார்"

இப்படிப்பட்ட தாங்கிக்கொள்ள முடியாத
இந்த வேதனையின் காரணமாகத்தான் இயேசு, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக்கைவிட்டீர்” என்று கதறினார். இதையெல்லாம்
அறிந்து கொள்ளாத காரணத்தினால்தான்
சிலர் "தன்னையே காப்பாற்றிக்
கொள்ள முடியாத இவரால்
நம்மை எப்படிக் காப்பாற்ற முடியும்"?
என்று தங்கள் அறியாமையில்  கேட்கிறார்கள்..... அவர்களின் அறியாமை கண்கள் திறக்கப்பட நாம் ஜெபித்துக்கொள்வோம்
சரி நண்பா, மீதமுள்ள மூன்று வசனத்தை பற்றிய விளக்கத்தை நான் Evening சொல்றேன்....

ஜான்: OK நண்பா,...Evening மறுபடியும் சந்திப்போம்.....

தொடரும்......

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

நமது அனுதின நற்செய்திகளை எல்லோருக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு
Send Message Via WhatsApp
“Need Daily Good News  ”
to +917092 377669

No comments:

Post a Comment