Sunday 21 February 2016

#Exclusive

கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
(லூக்கா 6: 38)

கஷ்டப்படுகிற மக்களுக்கும், கர்த்தருடைய காரியங்களுக்கும்
கொடுத்து உதவிய ஆதி கிறித்தவ மக்களைப்பற்றி வேதாகமம் கூறும் செய்தி......

பரத்: நிஜமான தேவையில் இருந்தவர்களுக்கு ‘தானதர்மம்'
செய்ய சொல்லி வேதத்தில் பல இடத்தில் போதிக்கிறது... குறிப்பாக
பரிசுத்தவான்களில் வறுமையில்,
அவர்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவும்படியும்
போதிக்கிறது (ரோமர் 12: 13)
(ரோமர் 15:26-27)

பிரவீன்: ஆமா ஆனா அது  கட்டாயத்தின் பேரில் செய்யப்பட வேண்டியதாக இருக்க கூடாது,இது பற்றி அப்போஸ்தலர் பவுல் இவ்வாறு எழுதினார்:
“அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.”
(2 கொரிந்தியர் 9:7)

பரத்: அதோடு, சுவிசேஷம் பரவ, கர்த்தருடைய காரியங்களுக்கு என்று நாம் கொடுக்கும் போது தற்பெருமைக்காகவோ,
அல்லது எல்லோரும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பாசாங்கு செய்யக்கூடாது அதுபோல்
செயல்பட்ட அனனியாவும் சப்பீராளும் விபரீத விளைவுகளை சந்தித்தார்கள்.
(⁠அப்போஸ்தலர் 5:1-10)

பிரவீன்: கஷ்டபடுகிற மனிதர்களுக்கு உதவிய அனேக கிறிஸ்தவ மக்களை பற்றி நாம் வேதத்தில் பார்க்கலாம்...

#கஷ்டப்படுகிற கைம்பெண்களுக்கு முறையாக உணவு வழங்க ஏழு சகோதர்களை நியமித்த அப்போஸ்தலர்கள்

⁠(அப்போஸ்தலர் 6:1-6) ல்
 வறுமையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த விதவைகளுக்கு தினந்தோறும் உணவளிக்க எருசலேமிலிருந்த சபை ஏற்பாடு செய்தது; அதுமட்டுமல்ல, தேவையிலிருந்த எந்த விதவையும் கவனிப்பாரற்றுப் போகாதபடிக்கு அங்கிருந்த அப்போஸ்தலர்கள் தகுதி வாய்ந்த ஏழு சகோதரர்களையும் நியமித்தார்கள் என்று எழுதியிருக்கிறது.

#பஞ்சம் வரும் முன்னே சகோதரர்களுக்கு உதவியாக பணம் சேகரித்து அனுப்பிய சிரியா, மற்றும் அந்தியோகியாவில் உள்ள சீஷர்கள்

பரத்: கொடிய பஞ்சம் உண்டாகப் போகிறதென்று தீர்க்கதரிசியான அகபு முன்னறிவித்தபோது, ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் உதவிக்கரம் நீட்ட தயாராக இருந்தார்கள்,
சிரியாவின் அந்தியோகியா சபையிலே இருந்த சீஷர்கள், “தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணம் சேகரித்து அனுப்ப வேண்டுமென்று தீர்மானம் பண்ணினார்கள்.”
(அப்போஸ்தலர் 11:28, 29)

#தாங்கள் வறுமையில் இருந்த போதும் தங்களைவிட வறுமையில் இருந்த பரிசுத்தவான்களுக்கு உதவுவதில் சிறந்து விளங்கிய  மக்கெதோனியா கிறிஸ்தவ மக்கள்

பிரவீன்: தானதர்மம் செய்வதில் மக்கெதோனியாவிலிருந்த  கிறிஸ்தவர்கள் சிறந்து விளங்கினார்கள்,அவர்கள்
ஏழைகளாக இருந்தபோதிலும்,  யூதேயாவில் வறுமையில் வாடிக்கொண்டிருந்த தங்கள் சகோதரர்களுக்காக தங்கள் திராணிக்கு மிஞ்சி நன்கொடைகளை அளித்தார்கள்.(2கொரி 8:1-7)
(ரோம15:26-27)

#பவுலின் ஊழியத்திற்கு உதவி செய்த பிலிப்பிய கிறிஸ்தவ மக்கள்

பிரவீன்: அதுமட்டுமல்ல,பவுலின் ஊழியத்திற்கு ஆதரவு அளித்து அவரின் குறைவில் கொடுத்து உதவி செய்ததல் பிலிப்பிலிருந்த சபை நிகரற்று விளங்கியது.
(பிலிப்பியர் 4:15,16)

பரத்: ஆதிகால கிறித்தவ  விசுவாசிகள்,
கஷ்டப்படுகிற மக்களுக்கும், கர்த்தருடைய வார்த்தையை அறிவிக்கும் பணிகளுக்கும்,உண்டான எதிர்கால தேவையை உணர்ந்து, மனம் உகந்து கொடுத்து உதவினார்கள் என்பதை நாம் வேதாகமத்திலிருந்து தெரிந்துகொண்டோம்..

பிரவீன்: ஆமா, இப்படி பிறர் நலனுக்காக கொடுப்பதிலும்,
சுவிசேஷம் அறிவிக்கும் பணிகளுக்கு உதவுகிறதிலும், ஆதி கிறித்தவ மக்களை போல் நாம்,நல்லதோர்  மனப்பான்மையை பெற்றிருக்க வேண்டும் இதை,நம் கர்த்தரும் நம்மிடம் எதிர்பார்க்கிறார். ஆனால்  விசனமாய் அல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன் என்கிறார்.

பரத்: ஆமா நண்பா, உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் என்று எழுதப்பட்டிருக்கிறது,எனவே நாம் கஷ்டப்படுகிற மக்களுக்கும்,கர்த்தருடைய வார்த்தைகளை அறிவிக்கும் பணிகளுக்கும் நம்மால் இயன்ற உதவிகளை உற்சாகமாய் கொடுத்து உதவுவோம்... கர்த்தர் நம்மேல் பிரியமாய் இருப்பார்......

ஆமென்... அல்லேலூயா....

======================

No comments:

Post a Comment