Friday 8 January 2016

அல்லேலூயா

ஜேம்ஸ்: ஒரு சில சபைகளில மூச்சுக்கு முன்னூறு தடவை அல்லேலூயா சொல்றாங்களே இது தேவையா பீட்டர் ?

பீட்டர்: அல்லேலூயாங்கிறது ஒன்னும் கெட்ட வார்த்த இல்ல ஜேம்ஸ் ! அது தேவனின் நாமத்தை மகிமை படுத்தும் ஒரு வார்த்தை, எனவே நாம் அதை எத்தன தடவை வேண்டுமானாலும் சொல்லி அவர மகிமைப்படுத்தலாம்.

ஜேம்ஸ்: அப்படியா !

பீட்டர்: ஆமா ஜேம்ஸ், சங்கீதக்காரனாகிய தாவீது
(சங் 106: 48)ல் 'இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஜனங்களெல்லாரும்:
"ஆமென், அல்லேலூயா",
என்பார்களாக. என்கிறான்.... சங்கீதங்களில் மட்டுமல்ல வேதத்தில் மற்ற பகுதிகளிலும் சொல்லப்பட்டு இருக்கு.

(வெளி 19: 4) ல் 'இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து:
"ஆமென், அல்லேலூயா" என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்'.

ஜேம்ஸ்: நான் இது நாள் வரைக்கும் அல்லேலூயாவை ஒரு முக்கியமில்லாத வார்த்தையாக நெனச்சுகிட்டு இருந்தேன் பீட்டர்,இப்பதான் அதன் முக்கியத்துவதை புரிஞ்சுகிட்டேன்.

பீட்டர்: "அல்லேலூயா" என்பது பரலோகத்திலும்,பூலோகத்திலும் சொல்லப்படுகிற ஒரு மகிமையான  வார்த்தை, உலகத்திலுள்ள எல்ல மொழிகளிலும் எந்த மாற்றமும் இல்லாம சொல்லபடுகிற வார்த்தையும் கூட..... எனவே நாமும் நமது தேவனை மகிமைப்படுத்தும் படி ஆமென்....... அல்லேலூயா....... என்று சொல்வோமா ?

ஜேம்ஸ்&பீட்டர்: ஆமென் அல்லேலூயா

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

No comments:

Post a Comment