Thursday 6 May 2021

 


#தேவனுடைய #அன்பும்,#தேவனுடைய #கண்டிப்பும்.


பிரியமானவர்களே! எந்த ஒரு மனிதனையும் நரகத்திற்கு அனுப்ப முடியாத அளவு தேவன் அன்புள்ளவர் இரக்கமுள்ளவர்,கிருபையுள்ளவர்,

அதேபோல தேவன் எந்த ஒரு பாவியையும் மோட்சத்திற்குள் அனுமதிக்க முடியாத அளவு தேவன் பரிசுத்தமுள்ளவர்,நீதியுள்ளவர் கண்டிப்புள்ளவர்.


இவ்விரண்டில் எது உண்மை? இவ்விரண்டுமே உண்மை

தேவன் அன்பாகவே இருக்கிறார் 

என்று 1 யோவான் 4:8 சொல்கிறது

அதேபோல நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறார்.

என்று எபிரெயர் 12:29 சொல்கிறது

நாம் தாழ்மையில் இருக்கும் 

பொழுது அவர் நம்மை கிருபையாய் நடத்துகிறவராகவும்,நாம் மேட்டிமையில் இருக்கும் பொழுது கண்டிப்பாய் நடத்துகிறவராகவும், இருக்கின்றார்.


எந்த ஒரு மனிதனையும் நரகத்திற்கு அனுப்ப முடியாத அளவு தேவன் அன்புள்ளவரா? இரக்கமுள்ளவரா?


ஆம்...


அவர் துன்மார்க்கனுடைய அழிவை விரும்பாமல்,அவன் மனம் திருந்தி வாழ வேண்டும் என்றே விரும்புகிறார்

(எசே 33:11)


ஒருவனும் கெட்டுப்போவது பிதாவினுடைய சித்தம் அல்ல

(மத் 18:14)


அவருடைய வருகைக்கு கூட பொறுமை உள்ளவராக இருக்கிறார் ஏனென்றால் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்புகிறார்(2 பேதுரு 3:9)


எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராய் இருக்கிறார்.(1 தீமோ 2:4)


தேவன் எந்த ஒரு பாவியையும் மோட்சத்திற்குள் அனுமதிக்க 

முடியாத அளவு தேவன் கண்டிப்புள்ளவரா ?

 

ஆம்..


அநியாயக்காரர்,வேசிமார்க்கத்தார் விக்கிரகாராதனைக்கார் விபசாரக்காரர் சுயபுணர்ச்சிக்காரர் ஆண்புணர்ச்சிக்காரர்

திருடர், பொருளாசைக்காரர் வெறியர்,உதாசினர், 

கொள்ளைக்காரர் அதாவது தன்னுடைய பழைய சுபாவத்தை 

விட்டு மனம் திரும்பாமல் ஜென்ம சுபாவத்தோடு,வாழும் மனிதர்

தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.(1 கொரி 6:9:7)


விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,விக்கிரகாராதனை, பில்லிசூனியம்,பகைகள், விரோதங்கள்,வைராக்கியங்கள், கோபங்கள்,சண்டைகள், பிரிவினைகள்,மார்க்கபேதங்கள்.

பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் 

இப்படிப்பட்ட மாம்சத்தின் கிரியைகளை செய்கிறவர்கள்

தேவனுடைய ராஜ்யத்தைச் 

சுதந்திரப்பதில்லை,இவர்கள் 

புறம்பே இருப்பார்கள்

(கலா 5:19-21) (எபே 5:5)(வெளி 22:15)


இவ்வுலகின் முடிவிலே கீழ்படியாமை என் பிள்ளைகள்,பொல்லாங்கனுடைய புத்திரர்கள் அக்கினியால் சுட்டெரிக்க படுவார்கள் (மத்தேயு 13:37-43)


அந்திக்கிறிஸ்துவின் முத்திரையை தரித்தவர்கள்,பிசாசானவனும் அவனுடைய கள்ளத் 

தீர்க்கதரிசிகளும்

ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்களும்,

பயப்படுகிறவர்களும்

அவிசுவாசிகளும் அருவருப்பானவர்களும் கொலைபாதகர்களும்,

விபசாரக்காரர்களும்,

சூனியக்காரர்களும், விக்கிரகாராதனைக்காரர்களும்

பொய்யர்களும்,ஆகிய அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் (வெளி 15:2,19:20,20:10,15,21:8)


நாம் சபையில் எதை பேச 

வேண்டும் தேவ அன்பையா? 

தேவ கோபத்தையா?


மனம் நொறுங்கி,மனந்திரும்பும் பாவியிடம் தேவன்பைப் பற்றிப் பேசவேண்டும்,வணங்காக் கழுத்துள்ளவரிடம் தேவ 

கோபத்தை அழுத்திப் 

பேசவேண்டும்,ஏனென்றால்

தேவன் கீழ்படியும் பிள்ளைகளுக்கு கிருபையும் (1 பேது5:5) கீழ்ப்படியாமையின் பிள்ளைகளுக்கு 

தேவகோபாக்கினை அளிக்கிறவராக 

இருக்கின்றார் (கொலோ 3:6)


தேவனது இவ்விரு குணாதிசயங்களையும் 

(ரோமர் 11: 22)-ல் பவுல் அழகாய்ச் சமநிலைப்படுத்துகிறார்...


"தேவனுடைய *தயவையும்* *கண்டிப்பையும்*பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும்,உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; 

அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் 

உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்"


நம்முடைய தேவன் தயவும் 

கண்டிப்பும் கொண்டவராக இருக்கிறார் ....


(யோவான் 3 :16) இல் இயேசு 

தேவ அன்பையும் 18 ஆம் வசனத்தில் ஆக்கினைத்தீர்ப்பையும் குறித்துப் பேசினார்.


"தேவன்,தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி,இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்".

(யோவான் 3:16)


"அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ,தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று".

(யோவான் 3:18)


தேவன் எல்லோருக்கும் பாரபட்சமின்றி அன்பை கொடுக்கின்றவராகவும்,

அந்த அன்பை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு,

ஆக்கினைத் தீர்ப்பு 

கொடுப்பவராகவும் இருக்கின்றார்.

மாபெரும் நற்செய்திக் 

கட்டளையிலும் இரண்டையும் சேர்த்தார் 


"விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் *இரட்சிக்கப்படுவான்*; விசுவாசியாதவனோ *ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்*"( மாற் 16:16 ) . 


தேவாலயத்தில் மக்களை  குணமாக்க,விடுதலையாக்க

தனது அன்பின் கரத்தை நீட்டிய

 இயேசு (மத் 21:14) தேவாலயத்தை கள்வர் குகையாக்கிய கயவர்களை  விரட்ட சவுக்கோடு தனது கண்டிப்பின் கரத்தை நீட்டினார் (மத் 21:12-13) (யோவா 2:15-16)


தேவ அன்பையும் அவரது கோபத்தையும் சிலுவையில் பிரிக்கமுடியாது,கல்வாரி சிலுவையிலே தேவ அன்பும்,

தேவ கோபமும் உச்சத்தை எட்டின.


தேவனின் அன்பை மட்டுமே பேசும் ஊழியர்,துணிகரமாய் பாவம் செய்யும் விசுவாசிகளையும்,தேவ கோபத்தை மட்டுமே பேசும் ஊழியர் அன்பில்லாத இரக்கமில்லாத விசுவாசிகளையும் உருவாக்குவார்கள்.இரண்டையும் 

சமசீராய் பேசுகிற ஊழியர்கள்

சாட்சியான தரமான கிறிஸ்தவர்களை உருவாக்குகின்றார்கள்.


Pas.Marvel Jerome 

Calvary Living Way Ministries

Mobile number: 086675 01353















 







1 comment:

  1. 1xbet korean - legalbet.co.kr
    OneXbet offers great opportunities for the esports betting community with excellent odds on any game! Get a 100% match deposit bonus on your first deposit and a 1xbet южная корея 100% match

    ReplyDelete