Tuesday 9 June 2020

உலகத்தை நேசிக்காதே,உலகத்தை படைத்தவரை #நேசி

#உலகத்தைநேசிக்காதே,
#உலகத்தை #படைத்தவரை #நேசி


உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்;ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் 
அன்பில்லை.(1யோவான் 2:15)

கிறிஸ்துவுக்குள் பிரியமான 
என் அன்பு சகோதர,சகோதரிகளே உலகத்திலும்,உலகத்தில் உள்ளவைகளின்,மீதும் அன்பு கூராதிருங்கள்,என்றும் 
உலகத்தின் மீது ஒருவன் அன்பு கூருகிறவனாக இருந்தால், 
அவனிடத்தில் பிதாவின் 
அன்பில்லை (1யோவா 2:15)
என்றும்,உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை (யாக் 4:4)
என்றும் வேதம் திட்டவட்டமாக போதிக்கின்றது.நாம் உலகத்தின் 
மீது அன்புகூருகிறவர்களாக,
இராமல் உலகத்தைப் படைத்த தேவன் மீது அன்பு கூருகிறவர்களாக  இருக்க
வேண்டும் என்று தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.
(மாற் 12:30)(மத் 10:37)

இறைமகன்,இயேசு மனித அவதாரம் எடுத்து,இந்த மண்ணகத்திற்கு, வந்தபொழுது சாத்தான் அவருக்கு இந்த உலகத்தின் ராஜ்யங்களையும் அதன் மகிமைகளையும்,காண்பித்து அதை தருவேன் என்று சொல்லியும் இயேசு அதற்கு இணங்கி போகவில்லை,அவர் சாத்தனுக்கு எதிர்த்து நின்றார்,(மத் 4:8-10)எனவே நாமும் உலகின் மகிமைக்கு ஐசுவரியத்திற்குமயங்காமல்,
சாத்தானுக்கு எதிர்த்து நிற்க வேண்டும்.நாம் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்காமல் 
(ரோம 12 :2) மெய்யான நீதியிலும்,பரிசுத்தத்திலும்,
தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனிதனின் சாயலை தரித்துக்கொண்டு இந்த உலகத்திலேயே வாழ வேண்டும் (எபே 4:22-24) நாம் உலக கவலையும், ஐசுவரியத்தின் மயக்கமும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் (மத்13:22)

I) உலகத்திலுள்ளவைகளின் மீது அன்புகூராதிருங்கள் 

ஆம் பிரியமானவர்களே 
1 யோவான் 2:16 சொல்கிறது மாம்சத்தின் இச்சை,கண்களின் இச்சை,ஜீவனத்தின் பெருமை
ஆகிய இவைகள் உலகத்திலுள்ளவைகள் இவைகளின் மீது நாம் சிநேகம்  கொள்ளாதிருக்க வேண்டும்.

II) #மாம்சத்தின்இச்சை 

1) மாம்சமும் மனமும் விரும்புகின்ற காரியங்களை செய்கின்றவர்கள் மாம்ச இசையின் படி நடக்கிறவர்கள் ஆவார்கள்,அவர்கள் மீது கோபாக்கினை இருக்கும் (எபே 2:3) கிறிஸ்துவுக்கள்,நாம் இன்று இந்த நிலையில் இல்லை.

2) மாம்சமும் மனமும் எதை விரும்புகிறது?மாம்சமும்,மனமும் 
மாம்ச கிரியைகளை விரும்புகின்றது,
மாம்ச கிரியைகள் எவைகள்?

விபசாரம்,வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,விக்கிரகாராதனை, பில்லிசூனியம்,பகைகள், விரோதங்கள்,வைராக்கியங்கள், கோபங்கள்,சண்டைகள், பிரிவினைகள்,மார்க்கபேதங்கள்.
பொறாமைகள்,கொலைகள், வெறிகள்,களியாட்டுகள் 
இவைகளாகும்,இப்படிப்பட்ட காரியங்களை  செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று
வேதம் நமக்கு போதிக்கிறது.
(கலா 5:19-21)

3) மாம்ச இச்சையானது ஆத்துமாவுக்கு விரோதமாக,போர் செய்கின்ற ஒரு காரியமாக இருக்கின்றது,எனவே அவற்றை விட்டு நாம் விலக வேண்டும் என்று வேதம் சொல்கிறது (1பேது 2:11)

4) மாம்சமும்,ஆவியும் ஒன்றுக்கொன்று விரோதமாக இருக்கிறது,நாம் ஆவியின் படி நடக்கிறவர்களாக இருந்தோமென்றால்,மாம்ச இச்சைகளை நிறைவேற்றாது இருப்போம் (கலா 5:16-17)

ஆம் பிரியமானவர்களே இன்று நாம் 
கிறிஸ்துவுக்குள் இருக்கின்றோம்,
கிறிஸ்துவினுடையவர்களாகிய 
நாம்,மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறோம்,(கலா 5:24)
நாம் உலகத்திற்கும் பாவத்திற்குமரித்துவிட்டோம்.
நாம் உலகத்தின் ஆவியை அல்ல,
தேவனிலிருந்து புறப்படுகிற ஆவிவை பெற்றவர்களாக இருக்கிறோம்,(1 கொரி 2:12) கிறிஸ்துவுக்குள் தேவபிள்ளைகளாக இருக்கும்,நம்மால் ஆவிக்கேற்றபடி நடக்கவும்,மாம்ச இச்சைகளை ஜெயிக்கவும் முடியும்.(ரோம 8:14)

III) #கண்களின்இச்சை 

1) நாம் கண்களில் எவைகளை பார்க்கிறோம்,என்பதைப் 
பொறுத்தே நம்முடைய சரீரமானது வெளிச்சமாகவோ அல்லது இருளாகவோ,பரிசுத்தமாகவோ அல்லது பாவமாகவோ  இருக்கின்ற, நிலை தீர்மானிக்கப்படுகின்றது 
என்று இயேசுகிறிஸ்து இங்கே சொல்கின்றார் (மத் 6:22-23)
ஒரு மனிதனின் இச்சையான பார்வை,தேவனுடைய பார்வையில் விபச்சார பாவமாகவே,
கருதப்படுகின்றது (மத் 5:28)

2) நாம் கண்ணினால் இச்சையானவைகளை பார்த்தால், நம்முடைய சரீரம் இச்சையான 
விரும்ப ஆரம்பிக்கும்,பிறகு சரீரம்  இச்சைகளை நிறைவேற்ற ஆரம்பிக்கும்,இச்சையானது கர்ப்பம் தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும் பாவமானது மரணத்தைப் பிறப்பிக்கும் என்று வேதம் தெளிவாக சொல்கிறது 
(யாக் 1:12) எனவே நாம் எதை பார்க்கிறோம்,என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

3) ஆதாம் ஏவாள் ஏதேனை இழந்ததற்கும் உலகத்திலே பாவம் பிரவேசித்ததற்கும் காரணமான காரியங்களில் கண்களின் 
இச்சையும் ஒன்று (ஆதியாகமம் 3:6)
அப்பொழுது ஸ்திரீயானவள், 
அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், 
புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று #கண்டு, அதின் கனியைப் #பறித்து,#புசித்து, தன் #புருஷனுக்கும் #கொடுத்தாள்; அவனும் #புசித்தான்.

4) தாவீது தன் கண்களில் இச்சையினால்,மாற்றான் மனைவியாகிய பத்சேபாளோடு
பாவம் செய்து,அந்தப் பாவத்தை மறைப்பதற்காக,கொலை செய்து 
தேவ கோபத்துக்கு உள்ளானான்,
சாபத்தை பெற்றான்,அவன் குழந்தையும் மரித்தது.(2சாமு 11,12)

ஆம் பிரியமானவர்களே,இன்று 
நாம் கிறிஸ்து இயேசுவுக்குள்,
நியாயப்பிரமணத்திற்கு கீழ்பட்டிராமல் கிருபைக்கு கீழ்பட்டு இருக்கிறோம் கிருபைக்கு கீழ்பட்டு இருக்கிற நம்மை பாவம் மேற்கொள்ளமாட்டது,
(ரோம 6:14) எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ
அவர்கள்,நியாயப்பிரமணத்திற்கு
கீழ்ப்பட்டவர்கள் அல்ல (கலா 5:18)
ஆக தேவனுடைய ஆவினால் நடத்தப்படுகிற,நம்மால் இந்த கண்களின் இச்சையை,
ஆவியானவரின் துணைகொண்டு எளிதாய்,மேற்கொள்ள முடியும்.

IV) #ஜீவனத்தின்பெருமை

1) பிரியமானவர்களே,நாம் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டு
இருக்கின்றோம்,பெருமை பாராட்டுவதற்கு நம்மிடத்தில் 
ஒன்றும் இல்லை,ஏனென்றால் 
கிருபை,விசுவாசம்,இரட்சிப்பு,
இவை மூன்றுமே கர்த்தரிடத்திலிருந்து நமக்கு உண்டானது (1கொரி1 :6)
(ரோம 12:3)(சங்:3:8)

2) நாம் மேன்மை,பாராட்ட வேண்டும் பெருமை பாராட்ட வேண்டும்,
என்றால் கர்த்தரை குறித்தே,நாம் மேன்மை பாராட்ட வேண்டும்.
(2கொரி 10:17) (சங் 20:7-8)அப்:பவுல்
 சொல்லுகிறார்,கலாத்தியர் 6:14....
நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, 
நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.

3) பெருமை உள்ளவர்களுக்கு 
தேவன் எதிர்த்து நிற்கிறார்,தாழ்மை உள்ளவர்களுக்கு அதிகமதிகமாக கிருபையை அளிக்கின்றார் (யாக் 4:6)

4) காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் 
இருந்த பிராதான தூதனான
(எசே 28:14) இருந்தவன்,தனது பெருமையான மேட்டிமையான,
சிந்தனையினால்,கீழே தள்ளப்படு சபிக்கப்பட்ட சாத்தானாக மாறினான்
(ஏசா 14:13-15) நாம் பெருமையுள்ளவர்களாக இருந்தால்,
கர்த்தர் நம்மை வைத்த நிலையிலிருந்து, தள்ளப்பட்டுபோவோம்.
எனவே கர்த்தருக்கு முன்பாக 
நம்மை நாம் தாழ்த்துவோம் அவர் நம்மை உயர்த்துவார் (யாக் 4:10)

5) இயேசு சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ளவராய் இருந்தார் (மத் 11:29) தேவனுக்கு சமமாக உயர்ந்த நிலையிலிருந்த,
இயேசு தன்னைத் தானே தாழ்த்தினார்,நிறைவான 
இயேசு தன்னைத் தானே வெறுமையாக்கினார்,
ஆண்டவராகிய அவர் அடிமையின்
ரூபமெடுத்தார்,எனவே எல்லாவற்றிற்கும் மேலான 
ஒரு மகா பெரிய நாமத்தை,
பிதாவாகிய தேவன் அவருக்கு தந்தருளி அவரை உயர்த்தினார்,
எனவே இயேசு என்னும் நாமத்திற்கு,
பரலோகத்திலும்பூலோகத்திலும்,
பாதாளத்திலும் இருக்ககூடிய,
யாவருடைய முழங்கால்களும்,
மண்டியிடும் படி,எல்லா நாமத்திற்கும்,மேலான நாமத்தை அவருக்கு தந்தருளினார்,
அவர் பெருமையாய் இராமல் கர்த்தருக்கு முன்பாக தன்னைத்தானேதாழ்த்தினார்,
எனவே அவர்உயர்த்தப்பட்டார்,
இயேசுவில் இருந்த அதே சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது 
(பிலி 2:5-11)

ஆம் என் அன்பு சகோதர சகோதரிகளே பெருமை என்கிற இருளின் சாயலை நாம் களைந்துவிட்டு,தாழ்மை 
என்கிற ஒளியின் சாயலை,நாம் தரித்துக்கொள்வோம்,
நம்முடைய,பெருமை மேன்மை பாராட்டுதல்,அனைத்தும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கல்வாரி சிலுவை குறித்து அல்லாமல் வேறு ஒன்றையும் குறித்து இருக்கக்கூடாது.
நாம் தாழ்மையுள்ளவர்களாக,
இருக்கும் போது,கர்த்தர் நமக்கு அதிகமதிகமாக கிருபைகளை அளிப்பார்,கர்த்தருக்கு முன்பாக நம்மை நாம்,தாழ்த்துவோம், அப்பொழுது,கர்த்தர் நம்மை உயர்த்துவார்.

ஆம்! எனக்கு அன்பார்ந்தவர்களே,
நாம் உலகத்தின் மீது அன்பு கூருவதற்கு,உலகத்தின் ஆவியை உடையவர்கள் அல்ல,நாம் உலகத்தை ஜெயித்த,இயேசு கிறிஸ்துவின் ஆவியை உடையவர்கள், இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவ அன்பு,நம்முடைய இருதயத்தில் ஊற்றப்பட்டு இருக்கின்றது,எனவே நாம் 
இயல்பாகவே தேவனை நேசிக்கின்றவர்களாகவும்,
உலகத்தை,வெறுக்கின்றவர்களாகவும் இருக்கின்றோம்,நாம் இருக்கின்ற நிலையிலேயே,தொடர்ந்து நிலைத்து, இருக்க,பரிசுத்த ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக,
தேவனை விட உலகத்தை அதிகமாக நேசிக்கின்ற விசுவாசிகள்,மனம் திரும்புவதற்கு ஆண்டவர்தாமே 
அருள்புரிவாராக

ஆமென்... அல்லேலூயா...

உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்;தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
(1 யோவான் 2:17)

Pr.Marvel jerome 
Calvary living way ministries 
Bangalore-India

For Prayer 
+919141043063

No comments:

Post a Comment