Monday 8 June 2020


விசுவாசித்தேன்,ஆகையால் 
பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.
(2 கொரிந்தியர் 4:13)

கிறிஸ்துவுக்குள் பிரியமான 
என் அன்பு சகோதர
சகோதரிகளே எதிர்மறையான சூழ்நிலைகளை நாம் 
எதிர்த்து நிற்கவும்
பிரச்சனைகளையும்  போராட்டங்களையும் 
உபத்திரங்களையும்,
நாம் மேற்கொண்டு,அதில் 
ஜெயம் எடுக்கவும் நாம் 
தேவனால் அழைக்கப்பட்டு இருக்கின்றோம்,

நாம் பார்க்கின்றதை 
உணர்கின்றதை பேசுகின்ற 
சாதாரண ஆவியை உடையவர்கள் அல்ல,நாம் விசுவாசிக்கின்றதை பேசுகின்ற விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக இருக்கின்றோம்.
காலேப் யோசுவாவை போல..
மோசேயினால் கானானுக்குள் அனுப்பப்பட்ட 12 வேவுகாரர்களில் 
10 பேர் பார்த்ததை பேசினார்கள்
(எண் 13:31-33)ஆனால் காலேப்பும் யோசுவாவும் மட்டும் தாங்கள் விசுவாசிக்கிறதை பேசினார்கள்
(எண்: 13:27-30)(எண்14:6-9)
அவர்களின் விசுவாசம் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் 
இருந்தது.(யாத் 3:17) அவர்களுக்கு வேறே ஆவி இருந்தது
( எண்:14:24)

தாங்கள் பார்க்கிறதை 
பேசினவர்கள் கானானுக்குள் பிரவேசியாமல் போனார்கள்,
ஆனால் தாங்கள் விசுவாசிக்கிறதை பேசினவர்கள், கானானுக்குள் பிரவேசித்தார்கள் மரணத்தை பேசியவர்கள் மரணித்தார்கள்,
ஜீவனை பேசினவர்கள் 
சாகவில்லை,வாக்குத்தத்தை சுதந்தரித்தார்கள்.

நாம் பேசுகிற வார்த்தைகள் 
மிகவும் முக்கியம் ஏனென்றால்
(நீதி18:21)சொல்கிறது..
மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்;அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் 
கனியைப் புசிப்பார்கள் என்று..அதுமட்டுமல்ல 
தேவனுடைய செவிகள் 
கேட்க நம் என்ன சொன்னோமோ அதன்படி,நான் செய்வேன் என்று தேவனே சொல்லியிருக்கிறார்
(எண் 14:28) நமது இருதயம் 
எதனால் நிறைந்து இருக்கின்றதோ அதுவே நம்முடைய வாயின் வார்த்தைகளாக வரும்
(லூக் 6:45) 

ஆம் பிரியமானவர்களே 
இன்று நாம் கடைசி 
காலமாகிய கொடிய 
காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
(2 தீமோ 3:1) கள்ள 
ஊபதேசங்கள் நம்மை 
சுற்றி சூழ்ந்து இருக்கிறது.
ஜனத்துக்கு விரோதமாய் 
ஜனமும்,ராஜ்யத்துக்கு 
விரோதமாய் ராஜ்யமும் எழும்பியிருக்கிறது,
பஞ்சங்களும்,
கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் 
பல இடங்களில் 
உண்டாகிகொண்டிருக்கிறது
(மத் 24:7)இந்த நிலையில் 
இயேசு கிறிஸ்துவின் மீது
நாம் கொண்ட அன்பை விட்டு 
நம்மை பிரிப்பதற்காக 
உபத்திரவம்,வியாகுலம்,
துன்பம்,நாசமோசம்,ஆகிய 
காரியங்கள் நம்மீது மோதி 
தாக்குதல் நடத்துகின்றன.
ஆனால்
இவையெல்லாவற்றிலேயும் 
நாம் நம்மில் அன்புகூருகிறவராலே 
முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய்
இருக்கிறோம் என்று வேதம் சொல்கிறது,(ரோம 8:35-37) 
எனவே நாம் காண்கின்ற,
உணர்கின்ற,அனுபவிக்கின்ற 
மோசமான காரியங்களை 
குறித்து பேசாமல்,இவைகள் எல்லாவற்றிலிமிருந்து
நம்மில் அன்புகூருகிற 
தேவனாலே நாம் முற்றிலும் 
ஜெயம் கொள்கிறவர்களாக,
இருக்கின்றோம்என்று நமது விசுவாசத்தை பேசுவோம்.

எனக்கு விரோதமாக 
உருவாக்கப்படும் எந்த 
ஆயுதமும் வாய்க்காதே
போகும்.(ஏசா 54:17)
ஏனென்றால் நான் 
விசுவாசம் என்னும் 
கேடயத்தை மேலே 
பிடித்திருக்கின்றேன்
எனவே பொல்லாங்கன், 
எனக்கு எதிராக எய்யும் 
ஆயுதங்கள் வாய்க்காதே
போகும்(எபே 6:16) 
ஆம் என் அன்பு சகோதர 
சகோதரிகளே நமது ஆண்டவராகிய  
இயேசு சொல்லி இருக்கின்றார்,
இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன்கொள்ளுங்கள் நான்
உலகத்தை ஜெயித்தேன் 
(யோவா16:33) என்று...
தேவனால் பிறந்த 
நம்முடைய விசுவாசமே 
உலகத்தை ஜெயிக்கிற 
ஜெயம் என்று வேதம் 
சொல்கிறது (1யோவ 5:4) 
எனவே இந்த உலகத்தின் உபத்திரங்களை
நாம் ஜெயிக்கிறதிற்கு,
நமக்கு விசுவாசம் மிகவும் 
அவசியமாக இருக்கின்றது,
விசுவாசம் தேவனுடைய 
வார்த்தைகளை கேட்பதினால் 
வரும் (ரோம10:17) நாம் கேட்கிற 
வார்த்தைகள் நம்முடைய 
காதுகள் வழியாக இருதயத்திற்கு உள்ளே சென்று,அங்கே வாசம் 
செய்ய ஆரம்பிக்கின்றன,
இதனால் நம்முடைய இருதயம் நிறைந்து,தேவனுடைய 
வார்த்தைகள் 
நம்முடைய வாயின் 
வார்த்தைகளாக வர 
ஆரம்பிக்கிறது,இதனால்‌,
நாம் எதிர்மறையான 
சூழ்நிலைகளில் நேர்மறையான வார்த்தைகளை பேச ஆரம்பிக்கிறோம்,இருளான வேளைகளில்,ஒளியை பேச ஆரம்பிக்கின்றோம்,எனவே நமது வாழ்வில் எதிர்மறை காரியங்கள் நேர்மறையாக மாறுகின்றது,
இருள் அகன்று ஒளி பிறக்கின்றது
எனவே நாம் தேவனுடைய வார்த்தைகளை கேட்பதில் 
தீவிரமாக இருக்க வேண்டும்
(யாக் 1:19)ஆம் என்,அன்பு 
சகோதரசகோதரிகளே நமது 
விசுவாச வாழ்க்கை பாதையிலே,
சந்திக்கிற எதிர்மறையான 
சூழ்நிலைகளை நாம் 
இயேசுவின் நாமத்தினால்
எதிர்த்து நிற்போம்,
பிரச்சனைகளையும்  போராட்டங்களையும் 
உபத்திரங்களையும்,
விசுவாசத்தோடும் 
பொறுமையோடும்
சகிப்புத்தன்மையோடும்,
இருந்து,நமக்குள்ளே இருந்து,
நமக்கு பெலன் தரும்,
தேவ ஆவியானவரின் 
உதவியோடு அவைகளை 
நாம் மேற்கொண்டு,
எல்லாவற்றிலும்,
எப்போதும் ஜெயம் 
எடுப்போம்.

ஆமென்... அல்லேலூயா...

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் 
எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

(2 கொரிந்தியர் 2:14)

Pr.Marvel Jerome 
Calvary living way ministries 
Bangalore-south India 

For Any Prayer Request- 
+919141043063

Whatsapp message 

https://api.whatsapp.com/send?phone=919141043063&text=I%20Need%20Tamil%20Good%20News%20In%20My%20Whatsapp

No comments:

Post a Comment