Sunday, 19 February 2017


அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்;ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
(ரோமர் 12: 11)

பரத்: ஒவ்வொரு தேவப்பிள்ளைகளும் எப்பொழுதும் ஆவியில் அனலாயிருக்க வேண்டும், அப்போதுதான் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை எப்பொழுதும் ஜெயமுள்ளதாக  இருக்கும்.

பிரவீன்:நீ சொன்னது சரிதான் பரத், அப்போஸ்தலனாகிய
 பவுல் அத்தேனே பட்டணத்தில் சீலாவுக்காகவும், தீமோத்தேயுவுக்காகவும் காத்துக் கொண்டிருந்த வேளையில் அவன்
ஆவியில் அனலாயிருந்ததால், காத்திருந்த நேரத்தையும் அவன் பிரயோஜனப்படுத்திக் கொண்டான்.(அப்.17:16,17)

பரத்:ஆமா பிரவீன்,
அந்த பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதை பவுல் கண்டு
தன் ஆவியில் வைராக்கிமடைந்து யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணை பண்ணினான்.

பிரவீன்:ஆவியில் அனலாயிருக்கிற  மனிதர்களால் சும்மாயிருக்க முடியாது. அவன் இயேசுவுக்காக ஏதாவது செய்ய, தன் ஆவியில் தூண்டப்பட்டு கொண்டே இருப்பார்கள்

பரத்:ஆமா பரத், அவர்கள் இருக்கும் இடம் மற்றும் செல்லும் இடங்களில் தேவனுடைய வார்த்தைகளுக்கு எதிராக செய்யப்பட்டு வரும் கரியங்களை கண்டால்; அவர்களால் நமக்கேன் வம்பு என்று அதை  பார்த்துக்கொண்டு சும்மா
இருக்க முடியாது.ஏனென்றால் அவர்களுடைய ஆவி அனலாயிருக்கிறபடியில், அவர்கள்
 தைரியத்தோடு, வைராக்கியத்தோடு அவைகளை எதிர்த்து நிற்பார்கள்.

பிரவீன்: அதுமட்டுமல்ல அவர்களால்  இயேசுகிறிஸ்துவை பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்காமல்  இருக்கவே முடியாது...
 அப்.18:5ல் சீலாவும், தீமோத்தேயுவும் வந்தபோது அவர்களுக்குள் ஆவியில் அனல் இருந்தபடியினால் இன்னும் வைராக்கியமடைந்த பவுல்,
இயேசுவே கிறிஸ்து என்று உறுதியாக திட்டவட்டமாக அறிவிக்கத் தொடங்கினான்.

பரத்: ஆமா பிரவீன் நாமும் நமது  ஆவியை  ஒவ்வொரு நாளும் அனல்மூட்ட வேண்டும்,
ஆண்டவருக்காக வைராக்கியம் பாராட்ட வேண்டும், கர்த்தருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு
அசதியாக சும்மா இருக்காமல்
ஆண்டவருக்காக எதையாவது நாம்
செய்து கொண்டே இருக்க வேண்டும்.

ஆம் என் சகோதர சகோதரிகளே !
நாம் ஆவியில் அனல் கொண்டு இயேசுவே ஆண்டவர் என்று,எல்லா இடங்களிலும் அறிவிக்க வேண்டும் !

கிறிஸ்துவுக்குள் வைராக்கியம் கொண்டு,பொய் உபதேசத்திற்கு எதிராக,தேவனுடைய வார்த்தையே !  சத்தியம் என்று தைரியத்தோடு தெரிவிக்க வேண்டும் !

ஆமென்..... அல்லேலூயா.....


No comments:

Post a Comment