Sunday, 19 February 2017

#பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார், (1 தீமோத்தேயு 1:15)

#பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து
இயேசு உலகத்தில் வந்தார்,
(1 தீமோத்தேயு 1:15)

ராணி: இயேசு கிறிஸ்து வந்தாரா ? எல்லாரும் பிறந்தார்னுதான சொல்லுவாங்க நீங்க வந்தார்னு சொல்றீங்க பிரதர் ?

பரத்: ஆமா சிஸ்டர் ஆனா,வேதாகமம் இந்த இடத்தில்,இயேசு உலகத்தில் 'பிறந்தார்' என்று கூறாமல்'வந்தார்' என்று கூறுகிறது,இயேசு கிறிஸ்து 'வந்தார்' என்று கூறுவதை கவனித்தாலே இயேசுவின் முக்கியத்துவத்தை நாம் தெரிஞ்சுகிடலாம்...

ராணி: எப்படி தெரிஞ்சுகிடலாம் ?

பரத்: ஒவ்வொரு நாளும் இந்த உலகத்துல  ஏராளமானோர் பிறக்கிறாங்க,ஆனால் இயேசுவோ வெறும் 'பிறந்தவரல்ல'வந்தவர்'

ராணி: அதான் எப்படினு கேக்குறேன் ?

பரத்: சொல்றேன்,சிஸ்டர் உலகத்தில் பிறக்கிறவர்கள் அவர்கள்
பிறந்ததில் இருந்துதான் வாழ
ஆரம்பிக்கிறார்கள்.(அல்லது) தாயின்
கருவில் இருந்தே அவங்க வாழ்க்கை
துவங்கிருச்சுனு கூடசொல்லலாம்.
ஆனால் இயேசுவின்  பிறப்பு
அவருடைய வாழ்க்கையின்
துவக்கம் இல்ல

ராணி: அப்பரம் !!! ???

பரத்: இயேசு ஏற்கனவே இருந்தவர்.
 பிறப்பின் மூலமாக அவர் இந்த
உலகத்துக்கு வந்தவர்.பரிசுத்த
வேதாகமத்தில்"இவர் ஆதியிலே
இருந்தவர், ஆதியும் அந்தமுமானவர், துவக்கமும் முடிவுமானவர்,
கடவுளோடு கடவுளாக இருந்தவர்,
மனுஷனைப்பிரகாசிப்பிக்கிற
ஒளியாய் இருக்கிறவர்”
என்றும், “அவர் மாம்ச சரீரத்திலே
உலகத்தில் வந்தார் என்றும் கூறுகிறது

ராணி: ஓ... அப்படியா !

பரத்: ஆமா சிஸ்டர் ராணி !
இயேசுவுக்கும், உலகத்துல
பிறக்கிற மத்தவங்களுக்கும்,
எவ்வளவு பெரிய வித்தியாசம்
என்பதைப் பாருங்க,இயேசுவின் பிறப்பு
ஒரு சாதாரண மனிதனின் பிறப்பு  இல்ல
அது கடவுளே மனிதனாக இந்த
உலகத்திற்கு 'வந்ததை' குறிக்கிறது
அவரின் பிறப்பு நமக்கு ஒரு சாதாரண மனுஷனின் பிறப்பைப் போலத் தோன்றினாலும், அது உண்மையில்
எல்லாம் வல்ல கடவுளின் உலகப் பிரவேசம் !

ராணி: சரி அது கடவுளின் உலக பிரவேசம்னா ? அது எப்படி எந்த முன்னறிவிப்பும்,எதிர்பார்ப்பும்
இல்லாம திடீர்னு நடந்துருக்கும் ?

பரத்: இயேசு கிறிஸ்துவின் பிறப்பு
ஏதோ எதிர்பாராம திடீர்னு நடந்த
 காரியம் இல்ல சிஸ்டர்,வேதாகமம் பல
நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே
இயேசுவின் பிறப்பையும், அதன்
தொடர்பான பல விவரங்களையும் முன்னறிவித்திருக்கிறது.

ராணி: முன்னறிவித்திருக்கிறதா ! எப்படி ?

பரத்: இயேசு கிறிஸ்து எந்த ஊரில்
பிறப்பார் என்கிறதை அவர் பிறப்பதற்கு
500 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த
மீகா என்ற தீர்க்கதரிசி
முன்னறிவித்தார்.அதுமட்டுமல்ல
ஏசாயா என்ற ஒரு தீர்க்கதரிசி,
இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே,
"இதோ,ஒரு கன்னி கர்ப்பவதியாகி
ஒரு குமாரனைப் பெறுவாள்,என்று
இவரின் பிறப்பை முன்னறிவித்தார்.
அது மட்டுமல்ல சிஸ்டர், இயேசு
பிறப்பதற்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட
பழைய ஏற்பாட்டில் இவரின் பிறப்பு,
வாழ்க்கை முறை,சுபாவம்,
பாடுகள்,இறப்பு,உயிர்ப்பு
விண்ணேற்றம் என அவரைப்பற்றிய
 எல்லா  காரியங்களும் முன்கூட்டியே  வேதாகமத்தில் எழுதப்பட்டுவிட்டது

ராணி: அப்படியா ? ஆச்சரியமா இருக்கு!

பரத்: இயேசு,ஒரு கன்னி பெண்ணின் மூலமாக பிறந்தார் என்றும் வேதம் கூறுகிறது. இயேசு கிறிஸ்து
மாம்ச ரூபம் எடுத்து, மனிதராய்
பிறந்தாலும்,மனிதனுடைய பாவ
சுபாவத்தின் கறைப்படாதவராய் பிறந்தார்.பிறப்பில்,வித்தைக்
கொடுக்கிறவன் ஆண்.
பாவக்கறை ஆதாமின் மூலம்
உலகத்திற்குள் பிரவேசித்து,
எல்லார் மீதும் அது வந்தது என்று
வேதம் கூறுகிறது (ரோமர் 5:12).
ஆனால் இயேசுவின் பிறப்பில்
ஆணுக்கு பங்கில்லை.

ராணி: அப்பரம் !!!???

பரத்: அவர் தேவனுடைய
ஆவியானவரின் உதவியால் கன்னிப்பெண்ணாகிய
மரியாள் கர்ப்பந்தரித்தாள்.இப்படி
 ஒரு கன்னிப்பெண் வயிற்றில்
மாம்சத்தில் உருவாகி இயேசு
பிறப்பார் என்பதை ஆதியிலே
"இவர் ஒரு ஸ்திரீயின் வித்தாக பிறப்பார்"(ஆதியாகமம் 3:15).
என்று இவர் பிறப்பதற்கு பல
ஆயிர ஆண்டுகளுக்கு முன்பாகவே
கடவுள் அறிவித்துவிட்டார்.

ராணி: அடேங்கப்பா !! நான்
இதுவரைக்கு இயேசுவின் பிறப்பை
ஒரு சாதாரண பிறப்பாக தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்,ஆனா
இதுல எவளோ விஷயம் இருக்கா ?
இதனால தான்,இயேசு கிறிஸ்துவின்
பூலோக வருகையை ஆதாரமாக வைத்து கி.மு(கிறிஸ்துவுக்கு முன்) கி.பி(கிறிஸ்துவுக்கு பின்) என்று உலக வரலாறுகள் பிரிக்கப்படுகிறதா பிரதர் ?

பரத்: ஆமாங்க சிஸ்டர்,
இந்த உலகத்தில் பிறக்கும் யாராக இருந்தாலும் அவர்களின் காலங்கள் கிறிஸ்துவின் உலக வருகையை பிரதிபலிக்கும்

ராணி: எப்படி பிரதிபலிக்கும் ?

பரத்: சொல்றேன் கேளுங்க
31-10-1987 இது என்னுடைய பிறந்த நாள் இதை முறையான காலவரிசைப்படி சொல்ல வேண்டுமென்றால் இப்படிதான் சொல்லனும் கி.பி 31-10-1987 அதாவது கிறிஸ்து பிறந்து 1987 வருடங்களுக்கு பிறகு அக்டோபர் மாதம் 31-ம் தேதி நான் பிறந்திருக்கிறேன் என்னுடைய பிறப்பு மட்டுமல்ல என் வாழ்வில் ஒவ்வொரு தருணங்களும் ஏன் எனது வாழ்வின் முடிவு நாளும் இயேசு கிறிஸ்துவின் பூலோக வருகையை ஆணித்தரமாக அங்கிகரிக்கிறது.. இந்த உலகத்துல பிறந்த(அல்லது)  இனி பிறக்கப்போகிற யாராக இருந்தாலும் சரி அல்லது வரலாற்றில் நடந்த (அல்லது)இனி நடக்கப்போகிற எந்த நிகழ்வுகளாக இருந்தாலும் சரி அவைகள் கி. மு, கி.பி என்று இயேசு கிறிஸ்துவின் உலக  வருகையை உலக மக்களுக்கு எடுத்துக்காட்டிக்கொண்டு இருக்கிறது  இதை யாராலும் மறுக்கும் மறைக்கவும் முடியாது  

ராணி: ஆமா

பரத்: உலக வரலாற்றில் பல கோடிக்கணக்கான அரசர்கள்,
தலைவர்கள்,மதவாதிகள், அறிஞர்கள்,ஞானிகள், மகான்கள்
மேதைகள் என பலர் பிறந்திருக்கிறார்கள் ஆனால் உலக சரித்திரமே இயேசு கிறிஸ்துவின் பிறப்பை வைத்து தான் கி.மு (கிறிஸ்துவுக்கு முன்) கி.பி(கிறிஸ்துவுக்கு பின்) பிரிக்கப்படுகிறது, எனென்றால்

#இயேசு கிறிஸ்து இந்த பூமியில் பிறந்து வந்த  மனிதர்களில் ஒருவர் அல்ல, இந்த பூமியில் மனிதனாக வந்து பிறந்த ஒரே தேவன்

ராணி: பிரதர் பரத் நீங்க சொன்ன காரிங்களை எல்லாம் வச்சு பார்க்கும் போது இயேசுவின் பிறப்பு மற்ற எல்லா
பிறப்புகளைக் காட்டிலும் மிகவும்
விசேஷமானது, முக்கியமானது என்ற உண்மை எனக்கு புரியுது...

பரத்: சிஸ்டர் ராணி, நான் இயேசுவைப் பற்றி உங்களுக்கு சொன்னது ஒரு துளியளவு தான் இன்னும் நாம் அறிய வேண்டிய ஏகப்பட்ட காரியங்கள் இருக்கிறது.

ராணி: அப்படியா ! சரி ஓகே இருந்தாலும் அதிலிருந்து சில கரியங்களை இன்று எனக்கு தெரிவிக்கலாமே பிரதர் நான்
உண்மை கடவுளை அறிந்து
கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்

பரத்: கண்டிப்பா சொல்றேன் சிஸ்டர்,
கவனிங்க !

#ஆரம்பத்துல கடவுள் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.கடவுள்
தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார்,அது மிகவும்
நன்றாயிருந்தது.என்று கண்டார்...
கடவுள்  இவ்வுலகில் உள்ள அனைத்தையும் உண்டாக்கினார். அவருடைய படைப்பில் மிக சிறந்த படைப்பு மனிதனே, ஏனென்றால் கடவுள் மனிதனை தம்முடைய சாயலில் படைத்தார்,அவர் மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார்

#கடவுள் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனிதன் ஜீவாத்துமாவானான்.கடவுள் மனிதனை நேசித்தார். கடவுள் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதித்தார். கடவுள் மனிதனுக்கு சுயமாக முடிவெடுக்கும் திறனை தந்தருளினார்,ஆனால் மனிதன் அதை தவறாக பயன்படுத்தி கடவுளுக்கு கீழ்ப்படியாமற் போனான்.
பாவம் நம்மை கடவுளிடத்திலிருந்துப் பிரித்தது.....

#மனிதனின் கீழ்ப்படியாமை நிமித்தம் பாவம் இவ்வுலகில் தோன்றியது. மனிதனின் இருதயத்தின் யோசனைகள் எல்லாம் பொல்லாப்பு நிறைந்ததாய் இருந்தது.ஆகவே பாவம் மனிதனை கடவுளிடம் இருந்து பிரித்தது. பாவம் என்பது கடவுளால்  விலக்கப்பட்ட செயல் அல்லது சிந்தனை ஆகும். நாம் அனைவரும் வழி விலகி நம்மை நேசிக்கும் உண்மையான கடவுளை விட்டு பின்னோக்கி சென்றோம்.

#பாவத்தை விட்டு முற்றிலும் விலகி நன்மை செய்யும் நீதிமான் ஒருவராகிலும் இவ்வுலகில் இல்லை. பூமியிலே பாவம் பெருக மனிதன் கடவுளை மறந்து போனான், மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள இடைவெளியும் அதிகமாகி கொண்டே இருந்தது. பாவத்தின் சம்பளம் மரணம். நாம் எல்லோரும் பாவம் செய்து நரகத்தில் நித்திய மரண தண்டனை பெறுவதற்கு ஏதுவானோம்.

#பாவம் நிறைந்த மனித இனத்தின் மீட்பிற்காக பாவ நிவாரண பலி தேவைப்பட்டது, ஆதலால் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மனிதனாகப் வந்தார்,இப்படியாக கடவுள் தம்முடைய ஒரே குமாரனை தந்தருளி தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். அவரை நம்புகின்ற அனைவருக்கும் நித்திய வாழ்வு உண்டு. பாவத்தின் நிமித்தம் கடவுளுக்கும் மனிதனுக்கும் ஏற்பட்ட இடைவெளியை நீக்க இயேசு கிறிஸ்து மத்தியஸ்தராக தோன்றினார்.கடவுள் ஒருவரே, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தர்  ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த கிறிஸ்து இயேசு அவரே. அவர் நமது பாவங்களுக்காக பாவ நிவாரண பலியாக சிலுவையில் பலியாகி மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, விண்ணேற்றம் அடைந்து,நமது பரம தகப்பனாகிய
கடவுளிடம் நமக்காக பரிந்து
பேசிக்கொண்டு இருக்கிறார்
 இவ்வாறு கடவுள் உலகத்தார் மீது
தான் கொண்ட தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார்.

அதனாலதான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு,உலகம் தரமுடியாத
இரட்சிப்பை பெற்றுக்கொண்டவர்கள்,
தான் பெற்ற இந்த இரட்சிப்பை எல்லா மனிதர்களும் பேற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு உலகமெங்கும்
இயேசுவின் நற்செய்தியை கடந்த
2000 ஆண்டுகளாக அறிவித்தது கொண்டிருக்கிறார்கள்.. அந்த நோக்கத்திற்காக தான் நானும் இப்ப உங்களுக்கு நற்செய்தி அறிவித்து கொண்டிருக்கிறேன் சிஸ்டர்.....

ராணி: ஓ... அதுல ஒரு பகுதியாக
தான் இந்த கிறிஸ்மஸ் காலத்துல
கிறிஸ்தவ மக்கள் பாடல்களைப் பாடி,
கடவுளுக்கு நன்றி செலுத்தி,
ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைத் தெரிவித்து, இயேசு கிறிஸ்து மூலமாய் மனிதனுக்காக கடவுள் ஏற்படுத்தின இரட்சிப்பை உலகெங்கும் உள்ள
மக்கள் விமரிசையாகக்
கொண்டாடுகிறார்களா ?

பரத் : ஆமா சிஸ்டர், இந்த
 கொண்டாத்தில் உங்களுக்கும்
பங்கு இருங்கிறது ஏனென்றால்
இயேசு கிறிஸ்து உங்களுக்கும்,
சேர்த்து தான் இந்த உலகத்திற்கு வந்தார்,இயேசு கிறிஸ்து ஒரு
மதத்தலைவர் அல்ல அவர்
வானத்தையும் பூமியையும்
உங்களையும் என்னையும்
உண்டாக்கின தேவன்.

ராணி: இயேசு கிறிஸ்து எவ்வளவு
பெரிய கடவுள்,வானத்தையும்
பூமியையும் படைத்தவர், இதுக்கு
முன்னாடி அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது,இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்,
அதுமட்டுமல்ல நான் வேற்று மதத்தை சார்ந்தவன்,அவர் எனக்கும் சேர்த்தா ? பூமிக்கு வந்தார் ! இதை நினைத்தால்
 எனக்கு ஆனத்த கண்ணீர் வருகிறது

பரத்: டியர் சிஸ்டர் ராணி,
மதங்கள் எல்லாம் மனிதனால் உண்டாக்கப்பட்டது,தேவன் எந்த
மதத்தையும் உருவாக்கவில்லை
'கிறிஸ்தவம்' என்பது ஒரு மதம் அல்ல,
பலர் அதை மதமாக ஆக்கிக்கொண்டார்கள் ஆனால் இயேசு கிறிஸ்து எல்லா மதத்தினருக்கும் எல்லா மக்களுக்கும் உரியவர். அவர் பாரபட்சம் இன்றி எல்லோரையும் நேசிக்கிறார்,இந்த உலகத்தில் உள்ள எல்லோரையும்
இரட்சிக்க இயேசு பூலோகம் வந்தார்.

உலகில் உள்ள அனைவரும் இயேசுவை  இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவர்
கட்டளை இட்டபடி,எல்லோரும் நடக்க வேண்டும்...என்றும்,பாவம்,சாபம்,
தரித்திரம்,வியாதி,அடிமைத்தனம்,
நித்திய மரணம் ஆகிய இருளின் பிடியிலிருந்து எல்லா மக்களும் மீட்படைய வேண்டும் என்றும் கடவுள் விரும்புகிறார்...

ராணி: அப்படியா !!

பரத்: ஆமா சிஸ்டர் ! இயேசுவின் மரணத்தின் மூலமாய் நாம் இருளின் ஆதிக்க அடிமைத்தனத்திலிருந்து இருந்து விடுதலை பெற்று அவருடைய உயிர்த்தெழுதலின் மூலமாய் நாம் புதிய ஒளி நிறைந்த வாழ்வு பெற்று இருக்கிறோம். இயேசுவை விசுவாசித்து அவரை ஆண்டவராக இரட்சகராக ஏற்றுக்கொண்ட யாராக இருந்தாலும் இருளின் பிடியிலிருந்து மீட்பை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.....

ராணி: சரி பிரதர்....

பரத்: அதுமட்டுமல்ல சிஸ்டர்
இயேசு கிறிஸ்து மட்டுமே நித்திய மரணத்திலிருந்து மனிதனை விடுவிக்க கடவுள் கொடுத்த ஒரே வழியாகும். அவரே பரலோகத்திற்கு (மோட்சம்) செல்ல ஒரே வழி ஆவார். அவர் மூலமாய் அல்லாமல் யாரும் கடவுளிடம் சேர முடியாது.

ராணி; இயேசுவை ஏற்றுக்கொள்ள அவரை என் வாழ்வில் பெற்றுக்கொள்ள நான் என்ன செய்யனும் பிரதர் ?

பரத்: இயேசுவை உங்கள் வாழ்வில் பெற்று கொள்ள நீங்கள் எதையும் செய்ய வேண்டியது இல்லை.
இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள,உங்கள் பாவ நிலையை உணர்ந்து, மனம் திரும்பி இயேசுவை விசுவாசித்தால் போதும். இயேசுவை நீங்கள் உங்கள் வாயினாலே அறிக்கையிட்டு,தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உங்கள் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப் படுவீர்கள், ராணி சிஸ்டர் நீங்கள் இயேசுவை உங்கள் இருதயத்தில் விசுவாசிக்கிறீகளா ?
உங்கள் வாயினாலே உங்கள் விசுவாசத்தை அறிக்கையிடுவீர்களா ?

ராணி: நிச்சயமாக,உறுதியாக
நான் என் முழு இருதயத்தோடு இயேசுவை விசுவாசிக்கிறேன்,
அவரின் மீது நான் கொண்ட விசுவாசத்தை இப்போதே என் வாயினாலே அறிக்கையிடுகிறேன்.

பரத்: ஆமென்... அல்லேலூயா...

*****************************************

என் அன்பு சகோதர! சகோதரிகளே!  பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேததாகமத்தில்  கடவுளுடைய  வார்த்தை சொல்கிறது..கடவுளுடைய வார்த்தைகளை மீறுவதே பாவமாகும்...
பாவத்தை போக்க பாவமில்லாத மாசற்ற இரத்தம் சிந்தப்பட வேண்டும் இது கடவுளின் சட்டம்...ஆதாமின் பாவ சந்ததி வழியாய் பிறந்த மனுக்குலத்தில் பாவமில்லாத பரிசுத்த மாசற்ற பிறவி யாருமே இருக்க முடியாது ஏனவே ஆதமின் வித்து இல்லாத ஆரம்பமும் முடிவும் அற்ற ஆவியாய்  கடவுளோடு  கடவுளாக இருந்த அவரின்  ஒரே குமாரானை கடவுள் இந்த பூமிக்கு அனுப்பினார்.. மனுகுலத்தின் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் பரிசுத்த இரத்தம் கடவுளுக்கு முன் சிந்தப்பட வேண்டும் எனவே தான் கடவுளுடைய குமாரன் பரிசுத்த ஆவியின் உதவியால்  ஸ்திரியின் வித்தாக மாமிச உருவம் எடுத்து மண்ணகத்திற்கு வந்தார் பாவமில்லாத தன் பரிசுத்த இரத்தத்தை சிந்தி மரணத்தின் சக்தியை தனது மரணத்தினால் அழித்து மனுக்குலத்தை மீட்க மனிதனாக வந்தார் இந்த உலகத்தில் ஆதாம் முதல் பிறந்த இனி உலகில் பிறக்கப்போகிற கடைசி மனிதனின் பாவம் வரை எல்லா மனிதர்களின் பாவங்களும் அதற்கான தண்டனையையும் இயேசு கிறிஸ்து தன் மீது ஏற்றக்கொண்டு நமக்கு விடுதலை கொடுத்து நமது  மனுகுலத்திற்கு இரட்சிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்

உதாரணத்துடன் சொல்ல போனால் நாம் செய்த குற்றத்திற்காக சிறையில் இருக்கும் நம்மை சிறையிலிருந்து மீட்க குற்றமே செய்யாத ஒரு நிரபராதி நமக்காக ஜாமீன் கொடுத்து நம்மை விடுவிப்பது போல்..

சேறு நிறைந்த ஒரு பள்ளத்துக்குள் மூழ்கி கிடக்கும் நம்மை சேற்றிலிருந்து தூக்கி மீட்டேடுக்க அந்த சேற்றிலும் பள்ளத்திலும் இல்லாத ஒருவர் வெளியிலிருந்து வரவேண்டும்

அதே போல தான் பாவத்திலும் சாபத்திலும் சிக்கி கிடந்த மனிதனை அந்த பாவத்திலும் சாபத்திலும் இருக்கிற எந்த மனிதனாலும் அதிலிருந்து மீட்க முடியாது எனவேதான் பாவமே இல்லாத பரிசுத்த தேவனுடைய குமாரன் இயேசு இந்த பூமிக்கு மனிதனாக வந்தார். உலகத்தில் உள்ள எல்லா மனிதனுக்கும் இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய இரட்சிப்பில் பங்கு உண்டு ஆனால் அவரை விசுவாசித்தால் மட்டுமே அந்த இரட்சிப்பாகிய மீட்பு நமது சொந்த பங்காகும்

என் அன்பு சகோதர,சகோதரிகளே இப்படிப்பட்ட உண்மை சத்தியங்களை, உங்களுக்கு அறிவிக்கவும் உண்மையான தேவனாகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள்,உங்கள் முழு உள்ளத்தோடு ஏற்றுக்கொண்டு அவர் உங்களுக்காக ஏற்படுத்தி இருக்கிற பரிபூரண வெற்றி வாழ்வையும் முடிவில்லா நித்திய வாழ்வையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த  செய்திகளை உங்களுக்கு வெளிப்படுத்திக்காட்டி எனது  இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்

கிறிஸ்துவுக்குள் தேவன் சகல ஆசீர்வாதங்களினாலும் உங்களை ஆசிர்வதிப்பாராக
       
ஆமென், அல்லேலூயா.......

======================
Revelation by spirit of God
======================

No comments:

Post a Comment