Tuesday, 17 November 2015

கிறிஸ்து இயேசுவுக்குள் நீ தேவனுடைய பிள்ளை...

கிறிஸ்து இயேசுவுக்குள் நீ தேவனுடைய பிள்ளை...

உனக்கு ஈடு இணை இந்த உலகத்தில் யாரும் இல்லை...

நீ உன்னதமான தேவனுடைய கையின் செய்கையாய் இருக்கிறாய்...

இதைஉணராமல்,
அவிசுவாச வார்த்தைகளை பேசி,ஏன் ஆண்டவரின் செய்கை உன் வாழ்வில் நடைபெறவிடாமல்  நீயே தடுக்கிறாய்...

விசுவாச வார்த்தைகளை
அறிக்கை செய்து தேவன் உன்னை வைத்து செய்யப்போகிற பெரிய காரியங்களுக்கு வழியே ஆயத்தப்படுத்து...

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட உன்னை தேவன் தன் பிள்ளை என்றும், நீதிமான் என்றும், பரிசுத்தவான் என்றும் அழைக்கிறார்....

ஆனால் நீ உன்னை தூசி என்றும், துரும்பு என்றும், குப்பை என்றும், சொல்லிக்கொண்டு உன்னதமானவரின் அழைப்பை உதாசினப்படுத்துகிறாய்...

இது தான் தேவன் எதிர்ப்பார்க்கும்  தாழ்மையான பேச்சு என்று  நினைத்து, தேவனுடைய வார்த்தைகளுக்கு நீ எதிராக பேசுகிறாய்...

தேவனுடைய வார்த்தைகளுக்கு எதிர்த்து பேசாமல், உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் என்று அப்படியே ஏற்றுக்கொள் அதுதான் தேவன் எதிர்பார்க்கும் தாழ்மை...

 ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

No comments:

Post a Comment