Monday, 16 November 2015

கர்த்தரைக்குறித்தே மேன்மைப்பாராட்டுவேன்

இயேசுவே உங்க நாமத்தை அல்லாமல் வேறெந்த நாமத்தை குறித்து நான் மேன்மைப்பாராட்டுவேன்..........

உங்க செய்கைகளை அல்லாமல் வேறு யார் செய்கையை குறித்து நான் பெருமைப்பாராட்டுவேன்...........

இயேசுவே நீங்க நல்லவரும் நன்மை செய்கிறவருமாய் இருக்கும் மெய்யான தேவன் !

எனது நீதியால் அல்ல உங்க இரக்கத்தால் எனக்கு கிடைத்தது நித்திய ஜீவன் !

நீங்க அன்று எனக்காக சிந்திய இரத்தத்தால்,இன்று நான்
தேவனுடைய பிள்ளை

உங்க நிகரற்ற நித்திய அன்புக்கு உண்டோ எல்லை !

இயேசுவே வானத்தின் கீழ் மனிதர்கள் இரட்சிப்பை பெற உங்க நாமம் அன்றி வேறு எந்த நாமமும் இல்லை !

மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிற உங்களை புகழ்வதை விட எனக்கு வேறென்ன வேலை !

இயேசுவுக்கே புகழ்..........

அல்லேலூயா ...........................

ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

Marvel Jerome

No comments:

Post a Comment